இன்றைய சிந்தனைக்கு...

புறத்தில் உளள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது!-  டாக்டர் ராதாகிருஷ்ணன்

சிந்தனைகள் தொகுப்பு

01
சம்பாதிக்க வேண்டியவை- கல்வி, செல்வம் மற்றும் சேவை
02
தலை குனிந்து என்னை பார், தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைக்கிறேன்-புத்தகம்
03
வெற்றி என்பது பெற்று கொள்ள ... தோல்வி என்பது கற்று கொள்ள ....
04
உனக்கு ஏற்பட்ட தோல்வியை விட, அதில் நீ பெற்ற அனுபவம் சிறந்தது
05
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே
06
கல்வி என்பது தகவலை திணிக்காமல் அறிவு தாகத்தை தூண்டுவதாக இருக்க வேண்டும்
07
மகிழ்ச்சி என்பது கடமையைச் செய்வது தான் ஏனெனில் கடமையிலிருந்து தான் வெற்றி கிடைக்கும்
08
கடமையைச் செய், பலனை எதிர்பாராதே
09
நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே! நீ நாட்டிற்கு என்ன செய்தாய் என்று கேள்
10
உங்கள் எண்ணம் மாறினால் உங்கள் வாழ்க்கையும் மாறும்
11
வந்து போகும் வானவில்லாய் இல்லாமல் மழை தந்து போகும் மேகமாய் வாழ்வோம்
12
நற்குணங்கள் அழகைக் கூட்டுகின்றன
13
உள்ளத் தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி
14
வாழ்க்கை என்பது நீ சாகும் வரையில் அல்ல, மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
15
பொறுமை என்பது கசப்பு, அதன் கனிகளோ இனிப்பு
16
ஆயிரம் முறை சிந்தனை செய்யுங்கள். ஆனால் ஒரு முறை முடிவெடுங்கள்
17
தோல்வியில் கவலை கூடாது. வெற்றியில் கர்வம் கூடாது.
18
தெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் ஆரம்பம்
19
பொய்க்குக் கால்கள் இல்லை, சிறகுகள் உண்டு
20
நல்ல அகம் நல்ல முகத்தை காட்டும்!
21
சிரிக்கும் நேரத்தில் எல்லாம் ஓர் ஆணி, உங்கள் சவப்பெட்டியில் இருந்து நீக்கப்படுகிறது
22

பணிவும், அடக்கமும், உயர்ந்த மனிதனின் சிறந்த பண்புகள்

23
அறிவு ஒரு கருவூலம், கேள்விகளே அதன் திறவுகோல்கள்
24
கோபத்தோடு எழுகிறவன், நஷ்டத்தோடு தான் உட்காருவான்
25

பிறரைத் தூக்கி விடக் குனிபவனே உலகில் உயர்ந்த மனிதன்

26
யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்
27
விழிப்பதற்கே உறக்கம், வெல்வதற்கே தோல்வி, எழுவதற்கே வீழ்ச்சி
28
சண்டைக்கு இருவர் தேவை. அதில் நீங்கள் ஒருவராய் இருக்காதீர்கள்
29
உலக அனுபவ அறிவே மிகச்சிறந்த அறிவு ஆகும்
30
மருந்துகளில் சிறந்தவை ஓய்வும், உண்ணா நோன்புமே!