இன்றைய சிந்தனைக்கு...

உன்னைப்பற்றிய உன் எண்ணமே, நீ யார் என்பதை உலகிற்குக் காட்டும்!

சிந்தனைகள் தொகுப்பு

01

எழுந்து நில், தைரியமாக இரு, வலுவாக இரு, உன் தோள்களில் முழு பொறுப்பையும் எடுத்துக் கொள்

02
வாய்ப்பு கதவைத் தட்டாவிட்டால், நீயே கதவை உருவாக்கு
03
திறந்த மனதோடு இருக்க ஒரு நல்ல புத்தகத்தைத் திறக்க வேண்டும்
04
முன்னேற்பாட்டுடன் இருப்பது, வெற்றியின் திறவுகோல்
05
உங்கள் குறிக்கோள்கள் உயர்ந்தவையாக இருக்கட்டும். அவற்றை அடையும் வரை ஓயாதீர்கள்
06
எப்போதும் நல்லதையே செய்யுங்கள் இப்போது நீங்கள் எதை விதைக்கிறீர்களே, அதைத்தான் பின்னர் அறுவடை செய்ய முடியும்
07
தன்னம்பிக்கையும், தளராத உழைப்பும் தான் தோல்வியைக் கொல்வதற்கான மருந்துகள்
08
எது சுலபமோ, அதைச் செய்வதை விட எது சரியானதோ அதைச் செய்ய வேண்டும்.
09
வாழ்க்கை நம்மை எந்த இடத்தில் விதைக்கிறதோ அந்த இடத்தில் நாம் கருணையோடு மலர்ந்திடுவோம்
10
பலமும், மேன்மையும் நம்மை வாழவைக்கும் பலவீனமும், கோழைத் தனமும் நம்மை வீழவைக்கும்
11
கடலளவு கோட்பாட்டை விட ஒரு துளி செயலே சிறந்தது.
12
தன்னம்பிக்கை உள்ள ஒரு மனிதன் தான், மற்றவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பார்
13
வெற்றி பெற வேண்டுமா? நீங்கள் பேசுவதை விட, மற்றவர்கள் பேசுவதை உற்றுக் கேளுங்கள்!
14
எதிர்மறை சிந்தனை உடையவர்கள் எல்லாச் சூழ்நிலையிலும் உள்ள சிரமங்களைக் காண்கிறார்கள். நேர்மறைச் சிந்தனை உடையவர்கள் எல்லாச் சிரமங்களிலும் உள்ள வாய்ப்பை உணர்கிறார்கள்
15
கருணை என்னும் மொழியைக் கண் தெரியாதவர் பார்க்க முடியும், காது கேளாதவர் கேட்க முடியும்
16
முன்னேறுவதற்கான ரகசியம், தொடங்குவதில் தான் இருக்கிறது
17
மனிதனுக்கு வரும் துன்பங்கள் அனைத்தும், அவன் நாவிலிருந்து தான் ஆரம்பமாகின்றன
18
உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் முயற்சி செய்பவர்களுக்கு எல்லாக் கதவுகளும் உடனே திறக்கும்
19
ஏன் என்று கேட்பது தான் முன்னேற்றத்திற்கு அடிப்படை அறிவு வளர்ச்சிக்கு அதுவே வித்து
20
முடியாது என்பது மூடத்தனம் முடியுமா என்பது அவநம்பிக்கை முடியும் என்பதே தன்னம்பிக்கை
21
கர்வமுள்ளவன் வெற்றியை இழக்கிறான் பொறாமைக்காரன் வெற்றியை இழக்கிறான் ஆனால் கோபக்காரனோ தன்னையே இழக்கிறான்
22

படுத்துக் கிடப்பவனுக்குப் பகல கூட இரவு தான், ஆனால் எழுந்து நடப்பவனுக்கு திசை எல்லாம் உதயம் தான்

23
வெற்றி என்பது தானாக வருவதில்லை அது வியர்வைத் துளிகளின் விளைச்சல்
24
சிரமங்களைக் கடந்தால் தான் சிகரங்களைத் தொடமுடியும்
25
முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் உன்னைச் சிறைப்பிடிக்கும் எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்
26
தன்னைத் தானே வென்றவர்களால் தான் பிரச்சனைகளையும் வெல்லமுடியும்
27
காற்று நிரம்பிய பலூன் உயரே செல்கிறது காற்று நிரப்பப்படாத பலூன் முடங்கிக் கிடக்கிறது
28
உளிப்படாத கல் சிலையாவதில்லை உழைப்பில்லாக் கனவு நனவாவதில்லை
29
சிறிய பொறுப்புகளைச் சிறப்பாகச் செய்தால் பெரிய பொறுப்புகள் உங்களை நாடி வரும்
30
முதன்மையாக இருப்பதல்ல வெற்றி முன்னேறிக் கொண்டே இருப்பது தான் வெற்றி
31
சிந்தித்ததைச் சொல்வது மட்டுமல்ல கல்வி சிந்திக்க வைப்பது தான் சிறந்த கல்வி