இன்றைய சிந்தனைக்கு...

புறத்தில் உளள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது!-  டாக்டர் ராதாகிருஷ்ணன்

சிந்தனைகள் தொகுப்பு

01

ஈட்டி முனையில் சாதிக்க முடியாததைக் கூட, இதயக் கனிவால் சாதிக்க முடியும்

02

இடையூறுகளும், துன்பங்களுமே மனிதனை மனிதனாக மாற்றுபவை

03

ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை, அவன் வாழும் முறையில் தான் உள்ளது

04

அர்த்தமற்ற சொற்களாலான பேச்சுகளை விட 
அர்த்தமுள்ள ஒரே ஒரு சொல் மேலானது 

05

உலகில் உள்ள கல்விக் கூடங்களே நான் செல்லும் ஆலயங்கள்.
அங்குள்ள குழந்தைகளே நான் வணங்கும் தெய்வங்கள் - நேரு

06

அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் 
ஆனந்தத்தைக் கொண்டு வரும்

07

உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்

08

முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் 
யாரோ ஒருவன், எங்கேயோ செய்து கொண்டுதான் இருக்கிறான்

09

விழுவதெல்லாம் எழுவதற்குத் தானே தவிர, அழுவதற்காக அல்ல

10

எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்யுங்கள்
எதைப் பேசினாலும் சிறப்பாகப் பேசுங்கள்
எதை எழுதினாலும் சிறப்பாக எழுதுங்கள்

11

நல்ல காரியங்கள் வெற்றி பெற சில ரகசியங்கள் உள்ளன. அவை அளவற்ற பொறுமை, முடிவில்லாத விடாமுயற்சி மற்றும் தொடர் முயற்சி

12

தாமரை இலை போல் உலகில் இருங்கள். தாமரையின் வேர்கள் சேற்றில் இருந்தாலும் அதன் இலையும், மலரும் எப்போதும் தூய்மையாக இருக்கும்

13

துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு. 
ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்து விடாதே

14

கட்டளையிடும் பதவி வேண்டுமானால் 
முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள்

15

தன்னைத்தானே மிக நன்றாக எவன் சரி செய்து கொள்கிறானோ, அவனே நீண்ட காலம் வாழ்கிறான்

16

மூன்று விஷயங்கள் நமக்கு வேண்டும். உணர ஒரு இதயம், சிந்திக்க மூளை, பணி புரியக் கரங்கள்

17

அழுக்கை அழுக்கால் கழுவ முடியாது. வெறுப்பை வெறுப்பினால் தீர்க்க முடியாது

18

லட்சியத்தில் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களோ அதே அளவு கவனத்தை, லட்சியத்தை அடையும் வழியிலும் செலுத்துங்கள்

19

நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுவாகவே நீங்கள் மாறுகிறீர்கள்! 
நீங்கள் பலசாலி என்று நினைத்தால் பலசாலி ஆவீர்கள்! 
பலவீனன் என்று நினைத்தால் பலவீனன் ஆவீர்கள்!!!

20

மகத்தான காரியங்களுக்கு மகத்தான நம்பிக்கைகளே பிறப்பிடம். நம்பிக்கை நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை - இதுதான் வெற்றியின் ரகசியம்

21

நாம் பெறும் வெற்றிகள் தற்செயல் விபத்துக்கள் அல்ல. தொடர் முயற்சியின் பயன்கள்

22

சொற்களில் பயனுள்ள சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும். பயனில்லாதச் சொற்களைச் சொல்லவே கூடாது

23

விளக்குகள் வித்தியாசப்படலாம், ஆனால் ஒளி ஒன்றுதான், மனசாட்சியே உயிரின் ஒளியாகும்

24

எல்லா உயிர்களிடத்தும் அன்பாய் இருங்கள், ஆனால் மனிதரிடத்தில் மட்டும் விழிப்பாய் இருங்கள்

25

வாய்ப்புக்காக காத்திருக்காதே, 
உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள். 

26

அழகைப் பற்றி கனவு காணாதீர்கள். அது உங்கள் கடமையைப் பாழக்கி விடும். கடமையைப் பற்றி கனவு காணுங்கள். அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்

27

பின்னோக்கி இழுக்கப்பட்ட அம்பு வேகமாக முன்னேறி இலக்கை அடைவது போல பின்னோக்கிச் செல்லும் வாழ்க்கையிலும் பாடம் கற்றப் பின் முன்னேறி வெற்றியடைய முடியும்

28

நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான திறமையில்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்புகள் உள்ளன. 

29

உலகம் உன்னை அறிந்துகொள்ளும் முன், உன்னை நீயே உலகிற்கு அறிமுகம் செய்து கொள்

30

நேர்மையாய், துணிவாய், உண்மையாய் உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்

31

கேள்வி கேட்பது தான் கற்றலின் பிரதான குணாதிசியம். எனவே கேள்வி கேட்டுக் கொண்டே இருங்கள்