இன்றைய சிந்தனைக்கு...

புறத்தில் உளள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது!-  டாக்டர் ராதாகிருஷ்ணன்

சிந்தனைகள் தொகுப்பு

01
கலங்கிய தண்ணீரில் சூரிய பிம்பம் தெரியாது. அது போல தெளிவில்லாத உள்ளத்தில் சிறப்பான வாழ்வு கிடைக்காது
02
முள்ளைப் போல கடுமையாக இராதே! பூவைப் போல் மென்மையாக இரு!
03
பகைமை பகைமையால் தணியாது, அன்பினால் மட்டுமே தணியும்
04
வெற்றி பெற வேண்டுமானால் நிறையக் கேளுங்கள், குறைவாகப் பேசுங்கள்
05
வெற்றி பெறுவோம் என்று நம்புங்கள் இறுதி வரை போராடுங்கள் வெற்றி நிச்சயம்
06
தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல்-இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழி நடத்திச் செல்லும்
07
நாம் மனதை அடக்குவதில்லை. மனமே நம்மை அடக்கி ஆள்கிறது
08
ஆயிரம் மைல்கள் நடக்க வேண்டுமா? முதல் அடியை எடுத்து வையுங்கள்
09
சிறு தொகை சேர்ப்பதில் நீ அக்கறை செலுத்தினால் பெருந்தொகை தானே சேர்ந்து விடும்
10
செயலற்ற சிந்தனை வீணானது சிந்தனையற்ற செயல் மடமையானது
11
உடல் நலனுக்கும், மனமகிழ்வுக்கும், உடல் உழைப்பைப் போன்று உகந்தது வேறு இல்லை
12
வெற்றி, அஞ்சாமை மிக்க செயல், அது வீரரை நாடி அடிக்கடி வரும், கோழையின் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காது
13
எல்லாப் புத்தகங்களையும் விடச் சிறந்த புத்தகம் இந்த பரந்த உலகம் தான். உலகத்தைவிட உன்னதமான புத்தகம் வேறு கிடையாது
14
ஏன்? என்று கேட்பது தான் முன்னேற்றத்திற்கு அடிப்படை. அறிவு வளர்ச்சிக்கு அதுவே வித்து
15
ஊக்கமுடன் பணிபுரிவீர்! ஏற்றமிகு வெற்றியினை ஈட்டிடுவீர்!
16
எனது லட்சிய பூமி - எல்லாரும் இன்புற்று வாழும் பூமி
17
தன்னை வெல்பவனே தரணியை வெல்வான்
18
நம்பிக்கையைக் கைவிடாதே! அதுதான் வெற்றியின் முதல்படி
19
உடல்நலம் மிக்க மக்களைக் கொண்ட நாடுதான் முன்னேற முடியும்
20
இலக்கியம் மனிதனது அறிவை வளர்க்கிறது, நன்மை தீமைகளை எடுத்துக் காட்டுகிறது. மனிதனது சிந்தனையைக் கிளறி விடுகிறது
21
வாழ்க்கையில் நாம் உயர்ந்த பொருட்களைப் பெற வேண்டுமானால் சலியாத உழைப்பும், தளராத ஊக்கமும், விடா முயற்சியும் மிக மிக அவசியம்
22
கட்டிடத்திற்குச் செங்கல் போல, வாழ்க்கை முன்னேற்றத்திற்கு படிப்பு தேவை, திறமை தேவை, தேர்ச்சி தேவை
23
லட்சியத்தை நோக்கி நடப்பவன், திரும்பிப் பார்க்க மாட்டான்
24
எண்ணமே, எக்காலத்திலும் வாழ்க்கையின் சிற்பி
25
பொறுமையும், தன்னடக்கமும் வாழ்வை வெற்றியாக்கும்
26
உன்னுடைய கடைசி தவறே உன்னுடைய சிறந்த ஆசிரியர்
27
நீரின் மேல் நின்று பார்த்துக் கொண்டே இருந்தால் கடலைக் கடக்க முடியாது
28
நிம்மதிக்கான இரண்டு வழிகள் விட்டுக் கொடுங்கள் இல்லையெனில், விட்டு விடுங்கள்