இன்றைய சிந்தனைக்கு...

புறத்தில் உளள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது!-  டாக்டர் ராதாகிருஷ்ணன்

சிந்தனைகள் தொகுப்பு

01

வித்தியாசமாகச் சிந்திப்பது, புதியன கண்டறிவது, புதிய பாதையில் பயணிப்பது, முடியாததை முடித்துக் காட்டுவது -இவை துணிவு மிக்க இளமையின் சிறப்பு அடையாளங்கள்

02

ஒரு நாடு அந்த நாட்டின் கல்வி கூடங்களில் தான் உருவாக்கப்படுகிறது

03
தெரிந்ததைத் தெரியும் என்றும், தெரியாததைத் தெரியாது என்றும் சொல்வது தான் அறிவு
04

கல்வியே ஆன்மாவின் உணவு. அது இல்லாமல் போனால் நம் சக்திகள் அனைத்தும் நின்று போய் விடும்

05
இயலாது என்ற சொல்லை நான் மிக மிக எச்சரிக்கையுடன் கையாளக் கற்றுக் கொண்டேன்
06

உலகில் உள்ள சக்திகளில் மிக வலுவானது கல்வி ஒன்று தான்

07
உலகின் புனிதமான இடங்கள் இரண்டு- ஒன்று தாயின் கருவறை மற்றொன்று பள்ளிக் கூடத்தின் வகுப்பறை
08

வித்தியாசமாகச் சிந்திப்பது, புதியன கண்டறிவது, 
புதிய பாதையில் பயணிப்பது, முடியாததை முடித்துக் காட்டுவது 
- இவை துணிவு மிக்க இளமையின் சிறப்பு அடையாளங்கள்

09
உங்கள் எதிர்காலத்தை உங்களால் மாற்றி அமைக்க முடியாது ஆனால் உங்கள் பழக்கத்தை நீங்கள் மாற்றிக் கொண்டால் அது உங்கள் எதிர் காலத்தை மாற்றி அமைத்து விடும்
10

வெற்றி என்பது உன் நிழல் போல நீ அதைத் தேடிப் போக வேண்டியதில்லை நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது அது உன்னுடனேயே வரும்

11

நாட்டின் அதீத மூளை கொண்ட மாணவர் வகுப்பறையின் கடைசி இருக்கையிலிருந்து கூட வர முடியும்

12
சிக்கல்களை எதிர்கொள்ளும் போது தான் பல திறமைகள் வெளிப்படுகின்றன
13
எழுமின், விழிமின், கருதிய கருமம் கை கூடும்வரை உழைமின்
14

கெட்டிக் காரத்தனம் என்பது ஒரு பங்கு அறிவும், 99 பங்கு கடின உழைப்பும் சேர்ந்ததாகும் 

15
வாழ்வது ஒரு முறை, வாழ்த்தட்டும் தலைமுறை
16
யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா
17

கேளுங்கள் கொடுக்கப்படும் ! தட்டுங்கள் திறக்கப்படும் !! 
தேடுங்கள் கண்டடைவீர்கள் !!!

18
காலம் என்பது கண் போன்றது கடமை என்பது பொன் போன்றது
19
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல, விடாமுயற்சியினால் செய்ப்பட்டவை
20

தன்னம்பிக்கை உள்ளோர் ரோஜா மலரை மட்டும் பார்ப்பர், முட்களைப் பார்க்க மாட்டார்

21
மாணவர்கள் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே ஒழுக்கமானவர்களாக மாறவேண்டும் இல்லையேல் கல்வி கற்பதற்காகச் செலவழித்த செல்வமும், நேரமும் வீண்
22
மகிழ்ச்சியோ, துயரமோ மனநிலையே காரணம்
23
அமைதியாக உட்கார்ந்திருப்பவனை விட ஆபத்தைக் கண்டு ஓடுபவனே ஆபத்திற்கு உள்ளாகிறான்
24
துன்பம் யாருக்கும் சொந்தமில்லை இன்பம் யாருக்கும் நிரந்தரமில்லை
25
மனிதன் உணவின்றி 40 நாள், நீரின்றி 3 நாள்,காற்று இன்றி 3 நிமிடம் உயிர் வாழலாம். ஆனால் நம்பிக்கையின்றி மூன்று நொடி கூட உயிர் வாழ முடியாது
26
ஓட்டப்பந்தயத்தில் ஓடும் ஒருவன் மற்றவர்களைக் கவனிக்காமல் ஓடினால் நிச்சயம் வெற்றி பெறுவான்
27

ஒரு மனிதனின் மிகச் சிறந்த நண்பர்கள் 
அவனது பத்து கை விரல்களே!!!

28

எதிர்பார்ப்பு இல்லாவிட்டால் ஏமாற்றத்திற்கு அவசியம் இல்லை .

29
உடல் நலமுள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாமே இருக்கும்
30

அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று