இன்றைய சிந்தனைக்கு...

புறத்தில் உளள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது!-  டாக்டர் ராதாகிருஷ்ணன்

சிந்தனைகள் தொகுப்பு

01
மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் ஏற்பட முடியாது
02
உங்களைச் சிந்திக்க வைக்கும் புத்தகங்களே, உங்களுக்கும் பயன்படப் போகும் புத்தகங்கள்
03
உங்கள் குற்றம் குறைகளைப் போக்கிக் கொள்ளாத நிலையில் மற்றவர்களின் குற்றங்களைக் குறித்துப் பேசாதீர்கள்
04
நீங்கள் அணிவது பழைய சட்டை என்றாலும், வாங்குவது புதிய புத்தகமாக இருக்கட்டும்
05

வாழ்க்கையில் தோற்பவர்கள் இருவர்தான் 
1. யார் சொன்னாலும் கேட்பவன் 2. யார் சொன்னாலும் கேட்காதவன் 

06
வாய்ப்பு தானாக வராது, நாம் தான் அதை உருவாக்க வேண்டும்.
07
அன்பே இல்லாத மாளிகை காட்டு மிருகங்கள் வாழும் குகை
08
லட்சியம் இல்லாத மனிதன் திசையறியும் கருவி இல்லாத கப்பல் போன்றவன்
09
செய்வதற்கு எப்போதும் வேலை இருக்க வேண்டும், அப்போது தான் முன்னேற முடியும்
10
அறிவை மேலும் மேலும் கூர்மையாக்கிக் கொள்ள பயன்படும் கருவி கல்வியாகும்
11
நீண்ட பேச்சு பேசியவனுக்குத் திருப்தி அளிக்கலாம், ஆனால் கேட்பவர்களுக்குச் சித்ரவதையாகும்
12
ஒன்றாய் இணைய முற்படுவது நல்ல துவக்கம் ஒன்றாய் இருப்பது நல்ல வளர்ச்சி
13
இதமான பதில் சினத்தை ஓட்டும் கடுமையான பதில் சினத்தை கூட்டும்
14
இருள் இருள் என்று சொல்லிக் கொண்டு சும்மா இருப்பதை விட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றிட முயற்சி செய்
15
வாழ்வதில் தான் இன்பம், உழைப்பதில் தான் வாழ்வு
16
பேராசை - வறுமையைக் குறிக்கிறது, ஆசையின்மை - செல்வத்தைக் குறிக்கிறது
17
உனக்கேற்படும் கஷ்டங்களை நீ பொறுமையோடு சகித்துக் கொள். நிச்சயமாக இது வீரமிக்க செய்கையாகும்
18

பெரிய கப்பல் ஒன்றைச் சுக்கான் என்னும் சிறிய கருவியைக் கொண்டு எத்திசையில் வேண்டுமானாலும் செலுத்தலாம். அது போல் நாவடக்கத்தின் மூலம் நமது வாழ்வை எப்படி வேண்டுமானலும் திருப்பலாம். 

19
வெற்றி தோல்வி நம் கையில் இல்லை. முயல்வது மட்டும் தான் நம் கையில் உள்ளது.
20
சரியான அகப்பார்வை உள்ளவனிடம் தான், சாதனை மிக்க படைப்புகள் தோன்றுகின்றன
21
மாணவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம், அதன்மூலம் அவர்கள் தங்கள் நற்குணத்தை வளர்த்துக் கொள்ள முடியும்
22

அன்பு, இரக்கம், தியாகம் நிரம்பிய உள்ளம் நறுமணமலர் நிறைந்த நந்தவனம்! வெறுப்பு, கோபம், பொறாமை நிரம்பிய உள்ளம் துர்நாற்றம் உடைய குட்டையாகும்

23
எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றாக இருப்பது மனிதத் தன்மையின் சிறப்பாகும்
24
முதன் முதலில் சந்திர மண்டலத்திற்குப் போக உதவியது தன்னம்பிக்கை என்ற விண்கலமேயாகும்
25
ஒருவனின் சினமே அவனுக்குப் பகைவன் அவனிடமுள்ள அன்பே அவனுக்கு நண்பன்
26
பல பிரச்சினைகள் நாவால் ஏற்படுகின்றன, அடக்கமே நற்குணங்களின் பிறப்பிடம்
27
பொறுத்திருப்பதன் மூலம் எதையும் சாதிக்கலாம். தண்ணீரைக் கூட சல்லடையில் எடுத்துச் செல்ல முடியும், அது உறைகிற வரை காத்திருக்கும் பொறுமை இருந்தால்....
28

சவால்கள் வரும் போதுதான் நீங்கள் நினைத்திராத திறமை உங்களிடம் ஒளிந்திருப்பதை உணர்வீர்கள்

29
தான் செய்த உதவியைச் சொல்லிக் காட்டுகிறவன் அதன் நன்மையை இழக்கிறான்
30
தொட்டிலில் இருந்து இடுகாடு செல்லும் வரை அறிவைத் தேடுங்கள்
31
தெளிவான சிந்தனையே, சிறந்த ஆசிரியர்!