இன்றைய சிந்தனைக்கு...

புறத்தில் உளள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது!-  டாக்டர் ராதாகிருஷ்ணன்

சிந்தனைகள் தொகுப்பு

01

ஒரு முறை வந்தால் அது கனவு, இரு முறை வந்தால் அது ஆசை பல முறை வந்தால் அது லட்சியம்

02

கிளி வளர்த்தேன், பறந்து போனது. அணில் வளர்த்தேன் ஓடிப்போனது. ஒரு மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்தன.

03

முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும். ஆனால் முயலாமை என்றும் வெல்லாது

04

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை துன்பங்களைச் சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை

05

தொலைக்காட்சி பார்ப்பதைக் குறையுங்கள், வீட்டுக்கு வீடு நூலகம் திறந்திடுங்கள் 

06

தோல்வி மனப்பான்மையைத் தோல்வி அடையச் செய்!
நீ வென்று விடலாம்!

07

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.
ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்

08

கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே அது உன்னைக் கொன்று விடும். 
கண்ணைத் திறந்து பார், நீ அதை வென்று விடலாம்

09

உலகில் மிக மோசமான விஷயம் - நம்மால் பிறர் கண்ணீர் சிந்துவது.
உலகில் மிக நல்ல விஷயம் - நமக்காக ஒருவர் கண்ணீர் சிந்துவது.

10

தொடர்ந்த பயிற்சியும், முயற்சியும் இருந்தால் சாதரணமானவரும் சாதனையாளர் ஆகலாம்

11

முதலில் கீழ்படிவதற்குக் கற்றுக்கொள்
தலைமை பதவி தானாக வரும்

12

நல்ல மனநிலையில் செய்கிற எந்த நல்ல செயலும் நிச்சயம் 100% நேர்த்தியுடன் இருக்கும்

13
தன்னையறிவது ஞானத்தின் தொடக்கம்
14

பலர் பங்கெடுத்துக் கொள்ளும்போது
கடின வேலையும் எளிதாகிவிடுகிறது

15

படிப்பு - ஒரு முழு மனிதனை உருவாக்குகிறது! 

கலந்துரையாடல் - எதற்கும் அவனை ஆயத்தமானவனாக்குகிறது! 

எழுத்து - அவனைத் துல்லிய மனிதனாக்குகிறது!

16

படிக்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பது மேலானது! 
ஏனெனில் அறியாமையே எல்லா இன்னல்களுக்கும் ஆணிவேராகும்!

17

பேரறிஞன் என்பவன் புத்தகங்களை மட்டுமல்ல, 
வாழ்க்கையையும் படிப்பவன்

18

மக்கள் மனதை ஆட்சி செய்யும் கலையே நாவன்மை

19

நன்மை செய்தவர்க்கு நன்மை செய்வது உலக வழக்கம் ஆனால் தீமை செய்தவர்க்கும் நன்மை செய்வது ஆன்றோர் வழக்கம்

20

தடம் பார்த்துச் செல்பவன் மனிதன்!
தடம் பதித்துச் செல்பவன் மாமனிதன்!!

21

படிப்பிலே சுறுசுறுப்பாக இருந்தால்தான்
உன் வாழ்க்கை விறுவிறுப்பாக இருக்கும்

22

கால் தவறினால் சரி செய்து கொள்ளலாம்,
நா தவறினால் சரிப்படுத்தவே முடியாது.

23

ஊக்கத்தோடு செயல்பட்டால் சகாரா பாலைவனத்திலும் சந்தனம் பயிரிடலாம்

24

உழைப்பில்லாமல் வாழ்வில் எவ்விதச் செழிப்பும் இல்லை

25

ஈடுபாடுதான் அன்றாட வேலைகளின் சுமையைக் குறைத்து, சுவையை அதிகரிக்கிறது

26

பிறர் உங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்கள் மற்றவர்களுக்கும் செய்யுங்கள்

27

அன்பு என்பது பொறுமையுள்ளது அது நன்மை செய்யும்

28

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது, பிறரை மகிழ வைத்துப் பார்ப்பதில்தான் உள்ளது

29

கைரேகை தேயத்தேய சேவை செய்பவர், கைரேகை பார்க்க வேண்டிய அவசியமில்லை

30

வரலாறு படிப்பதை விட வரலாறு படைப்பதே மேலானது