இன்றைய சிந்தனைக்கு...

கொஞ்சம் கொஞ்சமாக நான் தேர்ந்தெடுத்து திரட்டிய நூல்களே என் அறிவுக்கு அடித்தளம் அமைத்தன. எனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிப்பவை புத்தகங்களே - கிப்பன்

சிந்தனைகள் தொகுப்பு

01
அகந்தையை அழித்துவிட்டால் அடக்கம் தானாக வந்துவிடும் - புத்தர்
02
வாழ்க்கையில் வலிமை என்பது பிறரை மன்னிக்கும் தன்மையே ஆகும்.
03
இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக்கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமையே! - மகாகவி பாரதியார்
04
அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்துவிட்டாலே தோல்விகள் உன்னைவிட்டு ஒதுங்கிக்கொள்ளும் - அப்துல் கலாம்
05

துணிவு இல்லையேல் வாய்மை இல்லை. வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை - மகாத்மா காந்தி

06
உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையை தியாகம் செய்யக்கூடாது
07
துருப்பிடித்து தேய்வதை விட,உழைத்து தேய்வது மேலானது
08

மதங்கள் இல்லாத, சாதிகள் இல்லாத புதிய உலகத்தை உருவாக்குவோம்.

09

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை. வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை

10
தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொண்டுஅதை கற்றுக் கொள்ள முயற்சியுங்கள்
11
நல்லவற்றை கூட்டிக் கொள்! தீயவற்றை கழித்துக்கொள்!அன்பை பெருக்கிக் கொள்! வாழ்க்கையை வகுத்துக் கொள்!
12

மனிதனுக்கு அனுபவ அறிவு இருந்தால்தான் எதிர்கால வாழ்வை நன்றாக, வளமாக, சிறப்பாக,பயனுள்ளதாக வைத்துக்கொள்ள முடியும்!

13
மாணவர்களின் தொண்டு மனப்பான்மை, கட்டுப்பாடுஆகியவற்றை வளர்ப்பது ஆசிரியர்களின் கடமையாகும்- டாக்டர் ராதாகிருஷ்ணன்
14

மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பருவம் இளமை பருவமே தவறுகள் நற்பண்புகள் இரண்டுமே உருவாகும் பருவம் இதுவே

15

நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது. நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது- கன்ஃபூஷியஸ்

16

உண்மையைக் கடைப்பிடிக்கும் மனிதன் அதிர்ஷ்டம் இல்லாதவனாக இருந்தாலும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான்- அரிஸ்டாட்டில்

17

எந்த கப்பலும் துறைமுகத்தில் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் அதற்காக கப்பல் கட்டப்படுவதில்லை, கடலில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு பயணம் செய்வதற்கு தான் கப்பல் தயாரிக்கப்படுகிறது

18

நான் சந்திக்கின்ற மனிதர்களிடமிருந்து எல்லாம் புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்- எமர்சன்

19

அனுபவங்கள் எல்லோருக்கும் ஏற்படுகின்றன. ஆனால் அந்த அனுபவங்களால் ஏற்பட்ட படிப்பினையை மறக்காதிருப்பவரே முன்னேற்றமடைகிறார்.

20

திறமைசாலிகளை நைல் நதியில் தள்ளினாலும் மீனைக் கவ்விக்கொண்டு கரைக்கு வந்துவிடுவார்கள்

21

ஒரு துளி மையினால் எழுதும் கருத்துக்கள் ஓராயிரம் பேரைச் சிந்திக்க வைக்கும் - வால்டேர்

22

நூலகம் ஒரு தனி உலகம். அதன உளளே சென்று வந்தால் அறிஞனாகலாம், கவிஞனாகலாம், கலைஞனாகலாம்

23

கொஞ்சம் கொஞ்சமாக நான் தேர்ந்தெடுத்து திரட்டிய நூல்களே என் அறிவுக்கு அடித்தளம் அமைத்தன. எனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிப்பவை புத்தகங்களே - கிப்பன்

24

ஆரோக்கியம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்

25

வெற்றியை சிந்தியுங்கள், வெற்றியை உருவகப்படுத்திப் பாருங்கள், வெற்றியை உருவாக்குவதற்கு தேவையான சக்தி உங்களிடம் செயல்பட தொடங்கும்.

26

ஈடுபாடில்லாத எந்த காரியத்திலும் ஜெயிக்க முடியாது. ஈடுபாடுடன் செய்யும் எந்த காரியமும் தோற்காது.

27

பிச்சை கேட்பது குற்றமல்ல. அது அறிவு பிச்சையாக இருக்கட்டும், தேடுவது குற்றமல்ல. அது புதிய கண்டுபிடிப்பாக இருக்கட்டும். மடிவது குற்றமல்ல. அது போர்க்களமாக இருக்கட்டும்

28
வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்.தோல்விக்குப் பிறகு தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!
29

வெற்றி என்பது கடின உழைப்பு என்ற சக்கரத்தில் ஓடும் வாகனம், ஆனால் தன்னம்பிக்கை என்ற எரிபொருள் இல்லாமல் பயணம் சாத்தியமில்லை - கிரிக்கெட் வீரர் சேவாக்

30

இரண்டு சதவீதம் கற்பனையும் தொண்ணூற்று எட்டு சதவீதம் கடும் உழைப்பும் உள்ளவனே மேதையாக இயலும்.- மில்டன்