இன்றைய சிந்தனைக்கு...

நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம்! நம்பிக்கை உடையவன் வீழ்வது கடினம் !!

சிந்தனைகள் தொகுப்பு

01
உங்களால் நம்பிக்கையுடன் கனவு காண முடியும் என்றால் கனவில் கண்டதை நிஜத்திலும் செயல் வடிவில் செய்து முடிக்க முடியும் - பில்கேட்ஸ்
02

நீ எண்ணி துணிந்த பின்பு உலகம் முழுவதும் வாளெடுத்து வந்து எதிர்த்து நின்ற போதும் உன்னுடைய இலட்சியத்தை கைவிடாதே.

03
உலகில் உள்ள மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி இகழ்ந்தாலும் சரி நீ உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவேனும் பிறழாமல் கவனமாக இருக்க வேண்டும் -சுவாமி விவேகானந்தர்
04
தனியாக இருக்கும் போது சிந்தனையிலும் கூட்டத்தில் இருக்கும் பொழுது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும் !!
05
உயரத்தில் செல்ல உயரத்தில் உள்ளவர்களை நோக்கிடு. உயரத்தில் சென்று தாழ்வில் உள்ளவர்களை நோக்கிடு.
06
வெற்றி வந்தால் பணிவு அவசியம்! தோல்வி வந்தால் பொறுமை அவசியம்! எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்! எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்!
07
வெற்றி என்பது உன் நிழல் போல நீ அதை தேடிப்போக வேண்டியதில்லை நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது உன்னுடன் வரும்
08

என் முயற்சிகள் என்னைப் பலமுறை கைவிட்டதுண்டு! ஆனால் நான் ஒருமுறை கூட முயற்சியை கைவிடவில்லை - எடிசன்

09
இன்னாரை போல வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதை விட நம்மை போல் வாழ வேண்டும் என்று பிறர் எண்ணும் அளவிற்கு நாம் வாழ்ந்து காட்டுவதே சிறப்பு
10
உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும்வழி, விடாமுயற்சியும், தொடர்ந்த உழைப்பும்.
11
துவண்டு விடாதீர்கள், முதல் தடவை உங்களை ஒதுக்கலாம். இரண்டாவது தடவை நீங்கள் ஒளி வீச போவது உறுதி.
12
அறிவு என்பது சிறகை போன்றது. அந்த சிறகை கொண்டு நாம் வெற்றி வானில் பறக்கலாம்.
13
சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை. துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.
14
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல விடா முயற்சியினால் தான்
15
சொன்ன ஒரு சொல், விடுபட்ட அம்பு, கடந்து போன வாழ்க்கை, நழுவ விட்டுவிட்ட சந்தர்ப்பம், ஆகிய நான்கும் மீண்டும் திரும்பவராது.
16
நேற்று அசாத்தியமாக இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம் - காந்தி
17
அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது. - புத்தர்.
18

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய் - சுவாமி விவேகானந்தர்.

19
தோல்வியின் அடையாளம் தயக்கம்! வெற்றியின் அடையாளம் துணிச்சல்! துணிந்தவர் தோற்றதில்லை !! தயங்கியவர் வென்றதில்லை!!
20
நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம்! நம்பிக்கை உடையவன் வீழ்வது கடினம் !!
21
எப்போதும் அச்சத்தோடு இருப்பவன் கோழை! எதையும் துணிந்து எதிர்கொள்பவனே வீரன்!!
22

100 தடவை நீ தோற்றாலும், அது தோல்வியல்ல 100 தடவையும் எது தவறு என்பதை கற்றுக்கொண்டுள்ளாயல்லவா!

23
ஆசிரியரின் பணி கல்வியை போதிப்பது மட்டுமல்ல! கல்வியை கற்றுக்கொள்வதும்தான்!!
24
கடினமான செயல்களைக் சிறியதாகவும், புகழ் பெற்ற செயல்களை எளிமையாகவும் கையாளப் பழக வேண்டும். இதுவே உண்மையான வெற்றிக்கு அறிகுறி
25
நேர் வழியில் அடைய முடியாததை, ஒரு நாளும் குறுக்கு வழியில் அடைந்து விட முடியாது
26
கண்ணால் காணாத இறைவனுக்காக உழைப்பதைவிட கண்ணால் காணும் மனிதனுக்காக உழைப்பதே மேலானது
27
எதிர்காலத்தில், என்ன நடக்குமோ? என்று கவலை கொண்டே இருப்பவனால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது.
28
எதுவும் செய்யாமல் இருப்பதை விட ஏதாவது செய்வதே நல்லது அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை.
29

வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய்.

30
வெற்றியை அடைய எத்தனை படிகள் என்று மலைக்காதீர்கள். எல்லா படிகளும் கடக்க கூடியவையே
31
இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமானால், நீ யாரையும் திரும்பி பார்க்காதே