Videos

Full View
cruds.institution.fields.id
Full View

புத்தகம் வாசிக்கும் பழக்கம்

வாசிப்பு என்பது அன்றாட வாழ்க்கையில் இயல்பான ஒரு செயல்பாடாக இருக்க வேண்டும். அன்றாடம் குளிப்பது, சாப்பிடுவது மாதிரி. ஆனால், நம் சமூகம் இப்படி நினைப்பதில்லை. பள்ளிப் படிப்பு வேலைக்கான உத்தரவாதம் என்று நம்புகிறார்கள்; ஆனால், வாசிப்பது வாழ்க்கைக்கான ஊட்டம் என்று பலரும் கருதுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பள்ளி, கல்லூரிப் படிப்புக்குப் பிறகு வாசிக்கும் பழக்கம் ஒருவருக்கு இருக்கிறது என்றால், முதலில் குடும்பத்தினரும், பிறகு இந்தப் பழக்கத்தை முக்கியமில்லாதது என்றே கருதுகிறார்கள்.

            இப்போ இருக்கற இந்த டெக்னாலஜி நிறைந்த உலகத்துல யாருக்குமே நிற்க்கக்கூட நேரமில்லை எப்படி உட்காந்து புத்தகம் வாசிப்பது. உலகமே கைக்குள்ள வந்துருச்சு நம்ம ஏன் புத்தகம் படிக்கனும்.

            நம்ம ஏன் புத்தகம் படிக்கனும் அப்ப்டிங்கிறதுல ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கு. நம்மளோட மூளை ஒரே நேரத்துல பல வேலைகளை செய்யும் திறன் கொண்டது. நம்ம எல்லாருமே தசாவதானி தான். கார் ஓடிட்டே படுவோம், பேசுவோம் கேட்டா எல்லாமே பழக்கம் தான்னு சொல்லுவோம். இருந்தாலும் நம்மளோட Concentration level என்னனு நம்ம யாருக்குமே தெரியாது. ஒரு புத்தகத்தை முறையா, ஏதோ போற போக்குல இல்லாம முழு கவனத்தோடு படிக்கும் போது தான் நம்மளோட கவன சிதறல் பத்தி நமக்கு புரியும்.

            ஒரு புத்தகத்துக்குள்ள முழுசா போனா தான் அந்த புத்தகம் நமக்கு தரவேண்டிய கருத்த முழுசா தரும். அதெல்லாம் சாமி வரம் கொடுக்கிற மாதிரி தான் அவளோ சுலபமாலாம் கிடைக்காது.தவம் இருக்கனும். ஆமாங்க புத்தகம் வசிப்பது ஒரு விதமான த்யானம் நம்ம மனதை ஒரு நிலை படுத்த உதவும். அதை ஒரு தவம் போல செய்யனும்.

            அது திடீர்னு ஒரு நாள் அப்படியே வராது. புத்தகம் வாசிக்கர பழக்கம் உருவாக்கனும் ஒவ்வொருத்தர் உள்ளேயும். நமக்கு வரலேன்னாலும் பரவால்ல நம்ம அடுத்த தலைமுறையாவது அதை கத்துக்கட்டும். சின்ன குழந்தைலேந்தே புத்தகம் வாசிக்க சொல்லி கொடுக்கனும். தினமும்  10 நிமிடம் புத்தக நேரம் ஒதுக்குங்க. நீங்களும் கூட சேர்ந்து படிங்க. அது அவங்களோட வாழ்க்கைல மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

            புத்தகம் வாசிப்பவர்கள் எங்கு செல்லவும் தயங்குவதில்லை, துணை தேடுவதே இல்லை. புத்தகம் ஒரு நல்ல நண்பன். யாராலும் சூழ்ச்சி பண்ணி நம்மகிட்டேந்து பிறக்கவே முடியாத ஒரு அருமையான நபர். புத்தகம் பேசும், அவன் நம்மில் ஒருவன்.

புத்தகத்தை நேசிப்போம் வாசிப்பை சுவாசிப்போம்

- Sowmiya Rengarajan
Full View

நூலகங்கள்

“ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகின்றது" என்கின்றார் பேரறிஞர் விக்டர் கியூகோ. நாட்டில் அதிகளவான நூலகங்கள் அமைக்கப்படும் போது அந்நாட்டில் குற்றங்கள் குறைகின்றன. மனிதனை சிறந்த முறையில் வழிநடத்துவதில் நூல்களிற்கு அளப்பரிய பங்கு உண்டு.

"ஒரு கோடி பணம் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என பத்திரிகையாளர்கள் மகாத்மா காந்தியிடம் வினவிய போது ஒரு நூலகம் அமைப்பேன்" என்றாராம் மகாத்மா. ஒவ்வொரு மனிதனும் சிறந்த மனிதனாக மாறுவதற்கு நூலகத்தின் பங்கு இன்றியமையாதது.

உங்கள் மனதுக்குப் பிடித்த இன்பமயமான ஓர் இடத்தின் பெயரைச் சொல்லுங்கள் என்று ஆப்ரகாம் லிங்கனிடம் கேட்ட போது என் மனதிற்குப் பேரின்பத்தை அள்ளி அள்ளி வழங்கும் ஒரே இடம் நூலகமே என்று கூறியுள்ளார்.வீடு தோறும் நூலகம் வேண்டும் என்றார் அண்ணா.

இந்த மின்னணு யுகத்தில் கூட கணினி, இணையம், இணைய தளம், மின்னணு நூலகம் ஆகியவற்றின் மூலம் தேவையான செய்திகளைப் பெறமுடியும் என்றாலும் நூலகம் தனக்குரிய இடத்தை இழந்து விடவில்லை. எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் புத்தகத்தைக் கையிலெடுத்துப் படிப்பதில் ஒரு தனிச்சுகம் உண்டு. இன்டர்நெட்டில் ஒன்றைப் படிக்க வேண்டும் என்றால் பல அம்சங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஆனால் புத்தகம் கையில் இருந்தால் படிப்பதற்கு ஒரு தடையும் இல்லை. உட்கார்ந்து படிக்கலாம், கொஞ்சம் சாய்ந்தவாறு படிக்கலாம், மொட்டை மாடியில், படிக்கட்டில், வயல் வரப்பில், பிரயாணத்தில் என்று எங்கும், எப்படியும் படிக்கலாம்.

நூலகத்தின் அவசியம்:

ஒரு நாட்டில் பாடசாலைகள், சமயஸ்தலங்கள் அமைப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் நூலகங்கள் அமைப்பதும் மிகவும் அவசியம்.

ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென நமது முன்னோர்கள் குறிப்பட்டுள்ளார்கள். ஆனால் நூலகம் இல்லா ஊரில் குடியிருப்பதனை தவிர்ப்பதே சிறந்ததாகும்.

நூல்கள் மனிதனிற்கு அறிவை வழங்குவதோடு, அவர்களிற்கு தாம் அறிந்த விடயங்களை மேலும் தெளிவுபடுத்திக் கொள்ள உதவுகின்றன. தற்காலத்தில் அதிகமானோர் தமக்கு தேவையான நூல்களை கொள்வனவு செய்து தமது வீட்டிலேயே நூலகம் அமைத்து வருகின்றனர்.

ஆனால் அனைத்து வகையான நூல்களையும் வாங்கி சேமிப்பதென்பது அனைவராலும் இயலாத காரியம். அதற்கு பெரும் பணமும், அதிக நேரமும், இடவசதியும் தேவைப்படும்.

அதற்கான வசதி இல்லாதவர்களுக்கு கிராமம், பாடசாலை தோறும் நூலகங்கள் அமைப்பது அவர்களும் நூல்களை வாசித்து அறிவை விருத்தி செய்ய உதவியாக இருக்கும்.

நூலகத்தின் வகைகள்

நூலகங்கள் பொதுவாக அமைதியான சூழலை கொண்டு காணப்படும். இவை நிர்வாகம் செய்யப்படும் இயல்புகளை பொறுத்து பல வகைகளாக காணப்படும் அவையாவன.

பொதுநூலகம், கல்வி நூலகங்கள், விசேட நூலகங்கள், பாடசாலை நூலகங்கள் போன்றவையாகும்.

பொதுநூலகங்கள் எல்லாவகையான துறைசார்ந்த நூல்களையும் கொண்டு காணப்படும்.

அது போல கல்வி நூலகங்கள் கற்றலுடன் தொடர்புடையவர்கள் வாசிக்க கூடிய நூல்களை கொண்டு காணப்படும். இதனை ஆசிரியர்கள் மாணவர்களே அதிகம் பயன்படுத்துவர்.

பாடசாலை நூலகங்கள் இவை பாடசாலையில் அமைந்து காணப்படும் இங்கு பாடசாலை மாணவர்களுக்கு தேவையான நூல்கள் காணப்படும்.

இவ்வாறு தேவைகளின் அடிப்படையில் நூலகங்கள் அளவிலும் தொழிற்பாட்டிலும் வேறுபட்டவையாக காணப்படும்.

Full View

படிப்பதும் தியானமே

புத்தகம் படிப்பது கூட ஒரு வகையான தியானம்தான். தியானம் என்றால் தன்னை மறத்தல். புறவுலக தாக்கங்கள் ஏதுமின்றித் தன்னையே மறந்திருக்கிறநிலை நூல்களை ஆழ்ந்து படிக்கும் போது ஏற்படும். என்னைப் பொறுத்த வரை புத்தகங்களுக்குள் புகுந்து கொண்டால் புற உலகை மறந்து விடுகிற ஆனந்த நிலையை அவ்வப்போது அனுபவிக்கிறேன். ஆழ்ந்து படிக்கிற அத்தனைப் பேருக்கும் இத்தகு அனுபவம் இருக்கும். இதுவும் ஒரு வகைத் தியானம் என்பதில் தவறேதுமில்லை.

புத்தகப் பிரியர்களுக்கு நெஞ்சம் கவர்ந்த நூல்கள் கிடைத்து விட்டால் போதும், எதைப் பற்றியும் இலட்சியம் செய்யாமல் வாசித்துக் கொண்டே இருப்பார்கள். பேருந்துகளில், தொடர் வண்டிகளில், பூங்காவின் இருக்கைகளில் இப்படி அமர்ந்து படிக்க இடம் கிடைக்கும் இட மெங்கும் வாசித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்க்க முடியும். வாசிக்கிறசுகம் அவர்களை ஆனந்தத்தின் எல்லைக்கு அழைத்துச் சென்று விடும். சிலர் வீட்டிற்குச் சென்றால் கழிப்பறையில் கூட புத்தகம் இருக்கும். புத்தகத்தை சரஸ்வதியாக்கி பூசையறையில் வைத்து வாசிக்காமல், பூசை போடுவதை விட நேசிக்கிற புத்தகத்தைக் கழிப்பறையில் வாசிப்பதில் ஒன்றும் குற்றமில்லை. அது வாசிக்கப்படுகிறதா? என்பது தான் முக்கியம். எங்கே வாசிக்கப்படுகிறது என்பதன்று.

Full View

Scholars about BOOK READING

‘காலம் எனும் பெருங்கடலில் நம்மைக் கரை சோ்க்கும் கலங்கரை விளக்குதான் புத்தகங்கள்’ என்றாா் எட்வின் பொ்சி.

 ‘பிறா் தன்னை ஏமாற்றும்போது, புத்திசாலி மனிதன் புத்தகங்களின் துணையை நாடுகிறான்’ என்பது ஆண்ட்ரூ லாங்கின் கூற்றாகும் .

‘உடலுக்கு உடற்பயிற்சி போலவே வாசிப்பு என்பது நம் மனதிற்கும் அறிவுக்குமான பயிற்சியாகும்’ என்று ரிச்சா்ட் ஸ்டீல் என்பவா் கூறினாா்.

"வாசிப்பு ஒரு முழுமையான மனிதனை உருவாக்குகிறது” என்பது பிரான்சிஸ் பேகனின் கருத்தாகும்.

"Today a reader, tomorrow a leader." – Margaret Fuller

"Show me a family of readers, and I will show you the people who move the world." – Napoleon Bonaparte

"A book is a garden, an orchard, a storehouse, a party, a company by the way, a counsellor, a multitude of counsellors." – Charles Baudelaire

"Reading should not be presented to children as a chore, a duty. It should be offered as a gift." – Kate DiCamillo

"If you don’t like to read, you haven’t found the right book." – J.K. Rowling

"Books and doors are the same thing. You open them, and you go through into another world." – Jeanette Winterson

Recent Question Papers & Keys

Comments