வாழ்வியல் சிந்தனைகள்

01

இல்லாததை நினைத்து ஏங்காமல், இருப்பதை வைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

02

பேசிக்கொண்டே இருப்பவர்கள் விரைவில் வெறுக்கப்படுவார்கள்! மௌனமாக இருப்பவர்கள் மட்டுமே அதிகம் தேடப்படுவார்கள்!!

03

லட்சியம் - அலட்சியம் இரண்டிற்கும் ஒரு எழுத்து மட்டுமே வித்தியாசம்! லட்சியம் உன்னை முன்னே கூட்டிச்செல்லும்! அலட்சியம் உன்னை பின்னே தள்ளிச் செல்லும்!!

04

தோல்விக்கு முன் யோசித்தால் வெற்றி கிடைத்திருக்கும், தோல்விக்கு பின் யோசித்தால் சாதனை படைக்க முடியும்!

05

அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால் சிறிய குட்டையைக்கூட கடக்க முடியாது - சாணக்கியர்

06
பலர் பங்கெடுத்துக் கொள்ளும் போதுகடின வேலையும் எளிதாகுகிறது
07

எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும் நீங்கள் தாங்கி தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள்- அண்ணா

08

எதிர் பார்த்தபோது கிடைக்காத வெற்றி, எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்விதான்- ஹிட்லர்

09

பொருட்களை பயன்படுத்துங்கள் நேசிக்காதீர்கள்! மனிதனை நேசியுங்கள் பயன்படுத்தாதீர்கள்!

10

பேசவேண்டிய நேரங்களில் அமைதியாக இருந்து விட்டால், அமைதியான நேரங்களில் நிம்மதியாக இருக்க முடியாது!

11

நீர் இருக்கும் வரை வேர்கள் ஓய்வதில்லை, மனதில் வலிமை இருக்கும் வரை மனிதன் தோற்பதில்லை!

12

வெற்றி என்பது உன்னை உலகிற்கு அறிமுகம் செய்வது, தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது!

13

குறை சொல்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள், ஏனென்றால் உங்களை நீங்களே செதுக்கி கொள்வதற்கு அவர்கள்தான் உளி கொடுக்கின்றனர்.

14

அவரவர் செயல்களின் அணுகுமுறைகளைப் பொறுத்தே வெற்றி, தோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றன.

15

புறத்தில் உளள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது!-  டாக்டர் ராதாகிருஷ்ணன்

16

உன்னைப்பற்றிய உன் எண்ணமே, நீ யார் என்பதை உலகிற்குக் காட்டும்!

17

எதுவும் இல்லாதபோது சமாளிக்கும் திறமையும், எல்லாம் உள்ள போது நீ நடந்துக்கொள்ளும் முறையுமே, வெற்றியை தீர்மானிக்கிறது.

18

அவமானத்துக்கு இரண்டு குணங்கள் உள்ளன. கோழையை தற்கொலை செய்ய வைக்கிறது. வீரனை வாழ்ந்து காட்ட வைக்கிறது.

19

உனக்கு மற்றவர்கள் எதைச் செய்யக் கூடாதென்று எதிர்பார்க்கின்றாயோ, அதை நீ மற்றவர்களுக்கு செய்யாதே!- டால்ஸ்டாய்

20

நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள், நாம் எப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. - விவேகானந்தர்

21

அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணிவிடாதே! பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி!- புத்தர்

22

பிறந்து விட்டோம் என்று வாழாதீர்கள்! இனி பிறக்கப்போவதில்லை என்று நினைத்து வாழுங்கள்!!

23

எண்ணங்களில் கவனம் வையுங்கள், அவை சொற்களாகின்றன. சொற்களில் கவனம் வையுங்கள், அவை செயல்களாக மலர்கின்றன.

24

நேரம் வீணாகிறதே என்று பதற்றப்பட வேண்டிய அவசியம் அற்றவர்கள் புத்தகங்களை வாசிப்பவர்கள் மட்டுமே - பேரறிஞர் அண்ணா

25

நான் மட்டுமே வாழ வேண்டும் என்னும் நிர்பந்தத்தோடு தனி தீவுக்கு அனுப்பினாலும் போவதற்கு நான் தயார், புத்தகங்களோடு போக அனுமதித்தால் - ஜவஹர்லால் நேரு

26

ஒரு புத்தக சாலையை விட வேறு எங்கே, மனித மனம் இவ்வளவு இளகியதாக இருக்க முடியும் - எச். ஒய். பீச்சர்

27

ஒரு புத்தகத்தை கையில் எடுக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். நீங்கள் கையால் எடுத்திருப்பது உண்மையில் ஒரு மனிதனின் இதயத்தை. - வால்ட் விட்மன்

28

தனிமை தரும் அற்புத சுகங்களில் ஒன்று புத்தகம் வாசிப்பதுதான்!

29

கோபத்தை அன்பினாலும், தீமையை நன்மையினாலும் வெல் - புத்தர்

30

ஒரு சொட்டுகூட ரத்தம்  வராமல், ஒருவரைக் கொன்று விடும் ஆற்றல் மிக்க கூர்மையான ஆயுதம் மனிதனின் நாக்குதான் – புத்தர்

31

மிகவும் கடினமான வேலையில் ஈடுபட்டுக்கொண்டு, அதைத் திறமையாகவும் செய்யும் மனிதனுக்கு, எல்லா பரிசுகளும் தானாகவே வந்து சேரும் - பெர்னார்ட் ஷா