வாழ்வியல் சிந்தனைகள்

01

பலூன் மேலே பறக்க அதன் நிறம் முக்கியமல்ல, அதன் உள்ளே உள்ள காற்றுதான் அதனை மேலே உயர்த்துகிறது. அதுபோல உன்னுடைய முக அழகைவிட உன் சிந்தனையும் உழைப்புமே உன்னை மேலே உயர்த்தும் !!! 

02

வெற்றிக்கு இரண்டே வழிகள் !
1. செய் !   2. செய்து மடி !!  மற்றவை பற்றி கவலைப்படாதே

03

வழங்குபவர்களாக மாறுங்கள் வாங்குபவர்களாக இருக்காதீர்கள்

04

ஒரே முயலைப் பிடிக்கக் கவனத்தைச் செலுத்துங்கள் !
எல்லா முயல்களையும் பிடிக்க நினைத்தால் எதையும் பிடிக்க முடியாது

05

தான் படித்த நூலறிவை எவன் தன் வாழ்க்கைக்குப் பயன்படுத்துகிறானோ அவனே புத்திசாலி

06

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை குப்பை மேடுதான் லட்சியம் இல்லாத இதயம் வெறும் சதைக் கோளம் தான்

07

வெற்றியின் அகராதியில் மூச்சு விடுபவர்கள் மட்டும் மனிதர்கள் இல்லை, முயற்சி செய்பவர்கள் மட்டுமே மனிதர்கள்

08

நெருஞ்சி முள் தாண்டினால் தான் குறிஞ்சி மலர் பறிக்க முடியும்

09

வாழ்வில் நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் ஒரு படிப்பினை இருக்கிறது. அது எது என கண்டுபிடிப்பது உன் புத்திசாலித்தனம்

10

உலகை வெல்வதற்கு உலகைத் தெரிந்து கொள்வது முக்கியமல்ல, உன்னை அறிந்து கொள்வது தான் முக்கியம்

11

அதிகமாய்க் கவனிப்பது, அதிக துன்பத்தை அனுபவிப்பது, அதிகமாய் படிப்பது - இவையே அறிவின் தூண்கள்

12

அறிவாலும், ஆற்றலாலும் ஆகாத காரியம் இல்லை
அறிவும் ஆற்றலும் சேர்ந்தால் வெற்றி நிச்சயம்

13

மூத்தோர் சொல்லும், முது நெல்லிக் கனியும் முன்னர் கசக்கும், பின்னர் இனிக்கும்

14

உலகமே என் நாடு நன்மையைச் செய்வதே என் சமயம்

15

வேகத்தடை - ஒட்டத்தைக் கட்டுப்படுத்தும் மனத்தடை - வெற்றியைக் கட்டுப்படுத்தும்

16

நம்பிக்கை நிறைந்த ஒருவர், யார் முன்னேயும், எப்போதும் எதற்காகவும் மண்டியிடுவது இல்லை

17

கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பதல்ல - உன்னைத் தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே கனவு

18

உன் மனது எதை விரும்புகிறதோ, அது நிச்சயம் உன்னை வந்து சேரும்

19

வெற்றி பெற்றவரின் கதைகள் உங்களுக்குத் தகவல்களை மட்டுமே அளிக்கும். தோல்வி அடைந்தவர்களின் கதைகள்தான் வெற்றி பெறுவதற்கான வழிகளைச் சொல்லும்

20

தன்னம்பிக்கையும், தளராத உழைப்பும் தான் தோல்வியைக் கொல்வதற்கான மருந்துகள்

21

செதுக்கும் போது தான் கல் கூட சிலையாகிறது. 
உழைக்கும் போது தான் வியர்வை கூட வெற்றியாகிறது

22

விதியை நம்புகிறவன் தான் பயப்படுவான் மதியை நம்புகிறவன் தான் உருப்படுவான்

23

வெற்றி பெற்றவன் திறமைசாலி அதைவிட தோல்விகளைத் தாங்கி கொண்டவனே பலசாலி

24

அனுபவங்களை நிறைய கற்று கொண்டால் அதுவே ஆயிரம் யானைகளின் பலமாகும்

25

தோல்விக்குக் காரணம் முயற்சியின்மை வெற்றிக்குக் காரணம் நம்பிக்கை

26

அழகான உருவத்தை விட அழகான நடத்தையே நல்லது

27

பேசும் முன் கேளுங்கள், எழுதும் முன் சிந்தியுங்கள், செலவு செய்யும் முன் சம்பாதியுங்கள்

28

நாவை அடக்க முடியாதவன் மனதை அடக்க முடியாது

29

எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கித்தான் வாய்ப்புகள் தேடி வரும்

30

ஒவ்வொருவரும் இந்த உலகை மாற்ற நினைக்கின்றனர். ஆனால் யாரும் தன்னை மாற்ற நினைப்பதில்லை

31

தயிரை கடைந்தால் வெண்ணெய் திரண்டு வருவது போல் புத்தகம் படிக்க படிக்க அறிவு வளரும்