Videos

Full View
cruds.institution.fields.id
Full View

எழுத்துக்களை உச்சரிக்க

யுக்தி 1:1

நம் தாய் மொழியாம் தமிழ் மொழியினை வீட்டிலேயே கேட்;டும் பேசியும் வந்த குழந்தைக்கு வாசிக்கவும் எழுதவும் கற்றுக் கொடுப்பதே பள்ளியின் வேலை.

இதற்காகத்தான் தமிழ் எழுத்துக்களை (alphabets)  அறிமுகப்படுத்துவதையே ஒவ்வொரு பள்ளியும் தன் முதல் வேலையாகச் கொண்டுள்ளது. தமிழ் வகுப்புகளில் அ, ஆ- வை ஆரம்பித்து எழுத்துக்களை அறிமுகப்படுத்துகிறது.

இருப்பினும் பேசுவதும் கேட்பதும் எல்லாக் குழந்தைகளும் முறையாய்ப் பெற்றிட உச்சரிப்புப் பாடல், கதை கேட்டல், படம் பார்த்துக் கதை சொல்லுதல் போன்ற செயல்பாடுகள் நிறையவே வகுப்பறையில் நடத்தப்பட வேண்டும்.

அதன்பின்பே எழுத்துக்களை அறிமுகப்படுத்திட வேண்டும்.

எழுத்துகளின் உச்சரிப்பை அறிமுகப்படுத்தும்போது சைகைகளுடன் அறிமுகப்படுத்தினால் குழந்தைகள் எளிதாக உச்சரிப்பதை நினைவிலும் கொள்வர்.

உதாரணமாக,

குழந்தைகள் தத்தம் இடுப்பில் கைகளை வைத்து

வலப்பக்கமாய் இடுப்பை வளைத்து க, கா, எனவும்

இடப்பக்கமாய் இடுப்பை வளைத்து கி, கீ, எனவும்

கைகளைப் பறவை போல் அடித்து

வலப்பக்கமாய் வளைந்து கு, கூ எனவும்

கைகளைப் பறவை போல் அடித்து

இடப்பக்கமாய் வளைந்து கெ, கே எனவும்

இரு கைகளையும் தட்டி கை எனவும்

இரு கன்னத்திலும் நடுவிரல்களை

வைத்து வலப்பக்கமாய் சாய்ந்து கொ, கோ எனவும்

இரு கன்னத்திலும் நடுவிரல்களை

வைத்து இடப்பக்கமாய் சாய்ந்து கௌ எனவும்

நெற்றியில் ஆள்காட்டி விரலால் பொட்டு வைத்து

குதித்துக் கொண்டே க் எனவும்

ஆசிரியர் எழுத்துகளை உச்சரித்துக் கொண்டே ஒவ்வொரு சைகைகளாக செய்து காண்பிக்க குழந்தைகளும் அவ்வாறே உச்சரித்துக் கொண்டே சைகைகளைச் செய்திட வேண்டும்.

ஐந்து அல்லது ஆறு முறை இப்படி ஆசிரியர் குழந்தைகளுக்கு சொல்லிப் பழக்கிட வேண்டும்.

குழந்தைகளுக்கு, சைகைகளுடன் உச்சரிப்பு எனச் சேர்ந்து வருவதால் அதன் ரிதம் எளிதாக மனதில் பதிகிறது. குழந்தைகள் எளிதில் இதனைப் புரிந்துகொள்வர்.

5 அல்லது 6 முறை முடிந்தவுடன் ஆசிரியர் எழுத்துக்களை உச்சரிப்பதை நிறுத்திவிட்டு, வெறுமனே சைகை மட்டும் செய்து குழந்தைகள் ஒவ்வொரு அசைவுக்கும் உரிய எழுத்துகளைச் சரியாக உச்சரிக்கச் செய்திட வேண்டும். இதுவும் 5 அல்லது 6 முறை நடக்கலாம்.

எல்லாக் குழந்தைகளும் புரிந்து சரியாய்ச் செய்கிறார்களா எனக் கண்காணிக்க விரும்பினால், நான்கு நான்கு குழந்தைகளாய் இதனைச் செய்திட வைக்கலாம்.

குழந்தைகள் சரியாய்ச் செய்வதாய் உறுதியான பின்பு ஆசிரியர் தான் உச்சரிப்பதை நிறுத்தியதைப் போலவே தனது சைகைகளையும் நிறுத்திவிட்டு குழந்தைகள் தாமாகவே சைகை மற்றும் உச்சரிப்பைச் செய்திடப் பணிக்க வேண்டும்.

நிறைவாய் இருப்பின் அடுத்து ச, சா வரிசையைச் சொல்லித் தரலாம்.

ஆனால் இம்முறை ஆசிரியர் ச, சா, சி, சீ, சு, சூ என இறுதி வரை சொல்லித் தர வேண்டியதிருக்காது.

, சா என ஆரம்பித்த விட்டாலே போதும், குழந்தைகள் தாமாகவே மீதம் உள்ள எழுத்துகளை உச்சரித்துவிடும் அற்புதத்தைக் காணலாம்.

குழந்தைகளைப் பாராட்டி அடுத்தடுத்த வரிசைகளைச் சொல்லிடத் தூண்டுங்கள்.

, ஆ வரிசையை ஆரம்பித்து ஃ வரை முடிப்பது போலவே எல்லா வரிசைகளையும் க, கா என ஆரம்பித்து ‘க்’ என மெய்யெழுத்துடன் முடிக்க வேண்டும்.

இம்முறையினால் ஒரே வாரத்தில் குழந்தைகள் அனைவரும் 247 தமிழ் எழுத்துகளையும் உச்சரித்துவிடும் அதிசயம் நடக்கும்.

(ஆ) குறில் ஃ நெடில் வித்தியாச உச்சரிப்பு

க - குறுகிய ஓசையுடன் தலைக்கு கீழ் பக்கமாக ஒரு அசைவு கொடுத்து உச்சரித்து காட்டுதல்.

கா - நீண்ட ஓசையுடன் தலையை மேல் பக்கமாக சாய்த்து அல்லது நீட்டி அசைவு கொடுத்து உச்சரித்துக் காட்டுதல்.

இங்ஙனமே பிற எழுத்துக்களையும் உச்சரித்து காட்ட வேண்டும். கூடவே அந்த எழுத்துகளைக் கொண்ட வார்த்தைகளையும் உதாரணமாக உச்சரித்துக் காட்டலாம்

இங்ஙனமே பிற வரிசை எழுத்துக்களையும் உச்சரித்துக் காட்டி குறில், நெடில் வித்தியாசங்களை குழந்தைகள் உணரவைக்க வேண்டும்.

பாடப்புத்தகத்தில் அ, ஆ என்கிற வரிசைக்கு மட்டும் இத்தகைய வார்த்தை உதாரணங்கள் படங்களுடன் விவரித்து காட்டப்பட்டுள்ளன. ஆனால் க, கா, , சா போன்ற பிற வரிசைகளுக்கும் இவ்வாறான உதாரணங்கள் காட்டப்படுவது குழந்தைகளுக்கு மிகுந்த தெளிவைக் கொடுக்கும். ஆனால் குறில் நெடில் உச்சரிப்பை கழுத்தை கீழ் சாய்த்து மேலே நீட்டி சரியாக செய்கிறார்களா என்பதையும் கவனித்தல் வேண்டும்.

(இ) குழந்தைகளை இரு குழுவாகப் பிரித்து ஒரு குழுவிற்கு குறில் குழு என்றும் மற்றொரு குழுவிற்கு நெடில் குழு என்றும் பெயரிடுங்கள். குறில் குழுவிலிருந்து ஒருவர் குறில் எழுத்தில் தொடங்கும் எழுத்தைக் கொண்டு ஒரு வார்த்தை சொல்ல உடனே நெடில் குழுவினர் அவ்வெழுத்துக்கான நெடில் எழுத்தைக் கொண்டு ஆரம்பிக்கும் வார்த்தையை சொல்ல வேண்டும். சரியாக செய்யும் போது அக்குழுவிற்கு  மதிப்பெண் கொடுத்து பாராட்டுங்கள்.

அங்கனமே அடுத்த முறை நெடில் குழுவில் ஒருவர் ஒரு நெடில் எழுத்துக் கொண்டு ஆரம்பிக்கும் வார்த்தையை உச்சரிக்க உடனே குறில் குழுவினர் அவ்வெழுத்துக்கான குறில் எழுத்தைக் கொண்டு ஆரம்பிக்கும் வார்த்தையை சொல்ல வேண்டும்.

ஊதாரணமாக,

 

 

         

     குறிப்பு: இந்த எழுத்துக்கள் எல்லாம் குழந்தைகள் அறியவில்லை எனினும் தன் சுற்றத்தில் தாங்கள் கேட்ட வார்த்தைகளைக் கொண்டே அவர்கள் அந்த குறில் ஃ நெடில் உச்சரிப்புகளை உணர செய்ய இது உதவும்.

- Eronimous
Full View

எழுத்து வடிவம் அறிமுகப்படுத்த

யுக்தி 2:1 வடிவம் உருவாக்குதல்

1) , டா, டி, டீ... என அந்த வரிசையைக் குழந்தைகள் ஒரு முறை சைகையுடன் சொல்லிடச் செய்யுங்கள்.

2) ட எனக் கரும்பலகையில் எழுதிப் போட்டு அதன் வடிவத்தினை உச்சரித்து அறிமுகப்படுத்துங்கள்.

3) பின்பு குழந்தைகளை வரிசையாயகப் பாம்பு போல நிற்க வையுங்கள், வரிசையின் முன்னால் நிற்கும் குழந்தை வழிகாட்டிட குழந்தைகள் கரும்பலகையில் எழுதியுள்ள ‘ட’ வடிவம் போன்று வகுப்பறையில் ஒரு நிமிடத்திற்குள் நிற்க வேண்டுமெனச் சொல்லுங்கள்.

கரும்பலகையில் எழுதியுள்ள ‘ட’ வடிவத்தினைக் கவனித்து கொண்டே நிற்க முற்படுவார்கள் (ஆசிரியர் சிறிது உதவியும் செய்யலாம்).

சரியாய் நின்றவுடன் குழந்தைகளைப் பாராட்டி கைதட்டி, இந்த வடிவத்தின் பெயர் என்னவென்று கேட்டு அவர்கள் ‘ட’ என உச்சரிக்கச் செய்யுங்கள்.

அவர்களை வரிசைப் படுத்தி மீண்டும் ஒரு முறை ஆசிரியர் உதவி இல்லாமல் ‘ட’ வடிவத்தில் வந்து உட்காரச் சொல்லுங்கள்.

சரியாகச் செய்தால் பாராட்டுங்கள் (இல்லையெனில் மீண்டுமாய் அவ்வாறு ‘ட’ வடிவத்தில் வந்து குதிக்கச் செய்யுங்கள்).

இப்போது கரும்பலகையில் உள்ள ‘ட’ வடிவத்தினை அழித்துவிட்டு,

அவர்களாகவே ‘ட’ வடிவத்தில் வந்து குனிந்து நிற்கச் செய்யுங்கள்.

சரியாகச் செய்தால் பாராட்டி விட்டு, அடுத்து எழுத்து ‘ட்’ வடிவத்தைக் கரும்பலகையில் எழுதி உச்சரித்து குழந்தைகளை வந்து நிற்கச் சொல்லுங்கள்.

இவ்வாறு குழந்தைகளையே பயன்படுத்தி எழுத்து வடிவம் அமைக்கச் செய்யும்போது எல்லாக் குழந்தைகளும் மிக ஆர்வமாய்க் கற்றலில் ஈடுபடுவர்.

இந்த எழுத்துக்களை அறிமும் செய்யும்போது

என முதலில் ஆறு எழுத்துகளின் வடிவத்தை அறிமுகம் செய்யுங்கள்.

யுக்தி : 2:2 வாசித்தல்

குழந்தைகள் தற்சமயம் 6 எழுத்து வடிவங்களை அறிந்துள்ளார்கள். அந்த எழுத்து வடிவங்களை எழுதி உச்சரித்து வாசிப்பு பழக்கத்தை ஆரம்பிப்பதே இந்த யுக்தி.

உதாரணமாக  ஒவ்வொரு எழுத்தாக ப, , ட், , ம என ஆசிரியர் கரும்பலகையில் எழுதி அதன் வடிவத்தை கண்டுணர்ந்து குழந்தைகள் சரியாக உச்சரிக்கிறார்களா என முதலில் கண்டுணர வேண்டும்.

பின்பு,

ஆக எழுத்துக்களின் சேர்க்கை எல்லாமே வார்த்தையாக இருப்பதில்லை என அவர்கள் உணர இது உதவும்.

யுக்தி 2.3 எழுத்து வடிவம்

மாணவர்களை வகுப்பறைக்கு உள்ளேயே அல்லது வகுப்பறைக்கு வெளியிலேயோ சற்று உற்று நோக்கச் செய்து ட, , ம வடிவம் ஏதாவது, எங்காவது தென்படுகிறதா என கண்டு பிடிக்கச் செய்யுங்கள்.

உதாரணமாக ஜன்னல், கதவு, சுவர் மூலை போன்ற இடங்களில் ட, ப வடிவங்கள் இருப்பதை அவர்கள் கண்டுனர முடிகிறதா என வாய்ப்பு கொடுங்கள்.

அங்ஙனம் ஏதாவது செய்தி தாளோ அல்லது பத்திரிகையையோ குழந்தைகளை இருவர் கொண்ட குழுவாக பிரித்து அவர்கள் கையில் கொடுத்து ஒரு பக்க அளவில் இந்த எழுத்துக்கள் எத்தனை இடங்களில் உள்ளது என்பதை வட்டமிட்டோ, கோடிட்டோ, கட்டமிட்டோ காட்டிட சொல்லுங்கள்.

குழந்தைகள் இருவர் கொண்ட குழுவாகச் செயல்படுவதால் தன்னம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் ஈடுபடுவர். தங்களை அறியாமலேயே செய்திதாள், பத்திரிக்கையை வாசிக்கும் கலாச்சாரத்திற்குள் செல்வர்.

அங்ஙனமே வகுப்பறையில், பள்ளி வளாகத்தில் இந்த எழுத்துக்கள் உள்ள இடங்களை கண்டுபிடித்து வரவும் செய்யலாம்.

இதையும் ஒரு குழு செயல்பாடாகச் செய்யலாம்.

உதாரணமாக இருவர் கொண்ட முதல் குழுவை வகுப்பறையில் தேடி கண்டு பிடிக்கவும் அடுத்தக் குழுவை பள்ளி அலுவலகத்தில் போய் கண்டுபிடிக்கவும் செய்திட்டு பின்பு அக்குழுக்களுக்கான இடங்களை மாற்றி கொடுத்து ஏற்கனவே அந்தந்த குழுக்கள் கண்டுபிடித்தது சரியா என கண்டு படிக்கச் செய்யலாம். இப்படியே மற்ற குழுக்களுக்கும் இடங்களை மாற்றி மாற்றி கொடுத்து தேடி கண்டுபிடிக்க வைக்கும் போது அவர்களின் கூர்ந்து நோக்கும் திறன் மேம்படும்.எழுத்து வடிவம் அறிமுகப்படுத்த...

 

 

- Eronimus
Full View

​​​​​​​வார்த்தை தேடல்

, , , ட், ப், ம் என்கிற ஆறு எழுத்துக்களின் வடிவம் மற்றும் உச்சரிப்பை கற்ற குழந்தைகள் தற்போது அவைகளை பயன்படுத்தி வார்த்தைகள் உருவாக்க வேண்டும்.

உதாரணமாக,

இங்ஙனமே மேற்கண்ட எழுத்துகளுக்குள் ஒளிந்திருக்கும் பிற மூன்று வார்த்தைகளையும் நீங்களாகவே தேடி கண்டு பிடித்து அவ்வார்த்தைகளுக்கான பொருள் கூற வேண்டும். அங்ஙனமே வெறும் சப்தத்தைக் குறிக்கும் இரண்டு வார்த்தைகள் உள்ளன அவற்றையும் கண்டு பிடிக்க வேண்டும். மேலும் ஏற்கனவே அறிந்துள்ள அ, ஆ வரிசையிலுள்ள 12 எழுத்துக்களையும் சேர்த்து வேறு என்ன புது வார்த்தைகள் கிடைக்கிறது எனவும் கண்டு பிடியுங்கள்.

மேற்கண்ட 6 எழுத்துக்களின் வடிவம், உச்சரிப்பு முறையாக கற்ற குழந்தைகளை நாம் தற்போது அடுத்த மூன்று எழுத்துக்களை அறிந்திட முற்படுத்தலாம்.

ட - இது ட என்பது தெரியும். இதற்கு அருகே ‘ா என துணைக்கால் இட்டால் ‘டா’ என்ற நெடில் ஓசையில் ஒலிக்க வேண்டும்.

ட அருகே ‘ா துணைக்கால் இட்டால் அது ‘டா’ என நெடிலாகும் என்றால் ப அருகே ‘ா என துணைக்காலிட்டால் அது என்னவாகும்.

பா என்கிற நெடில் ஓசையாகும் ம அருகே துணைக்கால் ‘ா இட்டால் அது ‘மா’ என்கிற நெடில் ஓசையாகும்.

இந்த மூன்று எழுத்துக்களை அறிமுகம் செய்த பின் அவற்றைக் கொண்டு வார்த்தைகளை உருவாக்கலாம்.

உயிர் எழுத்துக்களை பயன்படுத்தும்போது ஆட ஓட, ஆம், ஓம், உம், ஓடம், ஆட்டம், ஓட்டம், கூட்டம், அப்பம், ஆப்பம், ஒப்பம் என்பன போன்று வார்த்தைகளை குழந்தைகளே உருவாக்கத் தூண்டலாம். இதனையும் ஒரு விளையாட்டு போல் செய்யலாம் குழந்தைகளை இரு குழுவாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிலும் ஒரு குழந்தை முன்னே வந்து தான் கண்டு பிடித்த வார்த்தைகளை கரும்பலகையில் எழுத வாய்ப்பு கொடுத்து அது சரியானதும் பொருள் உள்ளதுமாக இருக்கும் பட்சத்தில் மதிப்பெண் கொடுத்தும் உற்சாகப் படுத்தலாம். எந்தக் குழு அதிகமான சரியான வார்த்தைகளை கண்டு பிடித்துள்ளதோ அந்தக் குழுவை வெற்றிக் குழு என அறிவிக்கலாம். குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பர் அல்லது பங்கேற்க முயற்சிப்பர்.

குறில் நெடில்

ஆனால் அவ்வார்த்தைகள் அனைத்தும் ப, பா, , டா, , மா, ட், ப், ம் என்கிற ஒன்பது எழுத்துக்களால் ஆனதாகவும் அ, ஆ போன்ற உயிர் எழுத்துக்களால் ஆனதாகவும் இருக்க வேண்டும்.

ஊதாரணமாக,

 

 

- Eronimus
Full View

செயல் முறை விளக்கம் - 1

செயல் 2:5

ட மேல் ‘     ’  என்கிற குறியீட்டை இட்டால் அது டி எனப்படும் என்றால்

ப மேல் ‘     ’ என்கிற குறியீட்டை இட்டால் அது யபி என்றாகும்

ம மேல் ‘     ’ என்கிற குறியீட்டை இட்டால் அது மி என்றாகும்.

டி வரும் வார்த்தைகளை தேடிக் கண்டுணர்ந்து உச்சரியுங்கள்.

ஆடி, பாடி, மாடி, தேடி, ஓடி, வாடி, நாடி, கோடி, பாட்டி, மாட்டி காட்டினான் ஆட்டினான்.

பி வரும் வார்த்தைகள்

பிம்பம், பிடி, அம்பி, தம்பி, தேம்பி, கூப்பி, அப்பினான், உப்பி , ஒப்பி , துப்பினான்.

மி வரும் வார்த்தைகள்

அம்மி, மின்னல், மிச்சம், மிகுதி, மிகுந்த, மிளிர்ந்த, மிளிரும்.செயல் 2.6

ட மேல் ‘   என்கிற குறியீட்டை இட்டால் அது டீ என்றாகும் எனில்

ப மேல் ‘  ’ என்கிற குறியீட்டை இட அது பீ என்றாகும்

ம மேல் ‘    ’ என்கிற குறியீட்டை இட அது மீ என்றாகும்.

டீ வரும் வார்த்தைகளை உச்சரியுங்கள் குழந்தைகள் தேட முற்பட்டு சில பல வார்த்தைகளை சொல்ல முனைவார்கள்.

ஊதாரணமாக

ஓடி இங்கு டி தான் வருகிறதே பொழிய டீ உச்சரிப்பு வரவில்லை என்பதை சுட்டிக் காட்டுங்கள்.

டீ என உச்சரிப்பு வரும் வார்த்தைகளை உங்கள் வீட்டிலுள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து வாருங்கள் என வீட்டுச் செயல்பாடு (ர்ழஅந யளளபைnஅநவெ) கொடுங்கள். தேடி கண்டுபிடிக்கத் தூண்டுங்கள் பீ, மீ வரும் வார்த்தைகள்.

பீர்க்கங்காய், பீறியது, பீற்றிளாள், பீமன், பீச்சினார்.

மீண்டார், மீட்பர், மீத்தேன், மீறி, மீள்திறன்.

செயல்: 2:7

குழந்தைகள் இதுவரை

, ஆ உயிரெழுத்து 12 ம்

, டா, டி, டீ, ட்

, பா, பி, பீ, ப்

, மா, மி, மீ, ம் என

15 எழுத்தும் ஆக மொத்தம் 27 எழுத்துகளை அறிந்துள்ளார்கள்.

இந்த 27 எழுத்துக்களையும் கொண்டு எத்தனை பொருள் உள்ள வார்த்தைகள் உருவாக்க முடிகிறது என பார்ப்பதே இந்த செயல்பாடு.

குழந்தைகளை இருவர் இருவராக கொண்ட குழக்களாக பிரித்து விடுங்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் (சுமார் 10 நிமிடம்) அவ்விருவரும் இணைந்து எத்தனை வார்த்தைகள் உருவாக்க முடியுமோ அத்தனை உருவாக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் எந்தக் குழு அதிகமான, பொருத்தமான, பொருள் உள்ள வார்த்தைகளை உருவாக்கினார்களோ அவர்கள் இருவரையும் வகுப்பு முன்னே அழைத்து பாராட்டு வழங்கியோ பரிசு அளித்தோ சிறப்பிக்கலாம்.

எ.காட்டு

அம்மி, அப்படி, ஆடி, ஆட்டி, பாட்டி, பாடி, பட்டி, மாட்டி, மாடி, அப்பி, ஓம்பி, பிம்பம், படி, பிடி, மீட்பர்.

- Eronimus
Full View

செயல் முறை விளக்கம் - 2

செயல்: 2:7

ப - ன் கீழ் ‘ | ’ என்கிற குறியீட்டை சேர்க்க அது பு என்றாகும் எனில்

ம - ன் கீழ் ‘     ’ என்கிற குறியீட்டை சேர்க்க அது மு என்றாகும்.

ஆனால் ட கீழ் நேரிடையாக இக்குறீயீடு சேர்க்கப்படாமல் டு என ட ன் படுக்கை கோடு நீக்கப்பட்டு | என்கிற நேர்க் கோட்டுடன் ‘     ’ குறியீடு சேர்க்க அது டு என்றாகும்.

பு வரும் வார்த்தைகளை உச்சரியுங்கள் அன்பு, புண், புண்ணாக்கு, புதிர், வம்பு, தெம்பு, புகழ்.

மு வரும் வார்த்தைகள்

முன்னால், முதுகு, முத்தம், முற்றம், முறம், முகம், முருங்கை.

டு வரும் வார்த்தைகள்

குண்டு, மண்டு, நண்டு, வண்டு, பாடு, ஆடு, கொண்டாடு, மன்றாடு

செயல் 2:8

இரண்டெழுத்து கொண்ட வார்த்தைகள் அதிலும் இரண்டாவது எழுத்து எப்பவும் ‘டு’ என்றே முடியும் வார்த்தைகள். குழந்தைகள் ஆளுக்கொன்றாக யோசித்து சொல்வதற்கு வாய்ப்பு தர வேண்டும்.

உதாரணமாக,

ஆடு, மாடு, மேடு

ஓடு, கூடு, நாடு

தேடு, பாடு, சூடு

வாடு, ஏடு, மூடு

சாடு, தோடு, ஈடு

காடு, கேடு, போடு

வீடு, கோடு, நீடு

இடு, கொடு, சுடு, தடு

தொடு, படு, வடு, விடு

மடு, நடு

செயல் 2:9

ப -ன் கீழ் ‘  ூ ’ என்கிற குறியீடு சேர்ந்து பூ என்றாகும் எனில்

ம - ன் கீழ் ‘      ’ என்கிற குறியீடு சேர்ந்து மூ என்றாகும்

 

ட - ன் கீழ் ‘           ’ என்கிற குறியீடு சேர்ந்து டூ என்றாகும் அன்றோ

பூ’ ல் தொடங்கும் வார்த்தைகள் ஆளுக்கொன்று தேடி சொல்ல வேண்டும். ‘பூ’ பூச்சி, பூதம், பூகோளம், பூமி, பூத்திருக்க, பூணை, பூசை, பூனூல், பூட்டு.

மூல் தொடங்கும் வார்த்தைகளை யோசித்து குழந்தைகள் ஆளுக்கொன்ற சொல்ல வேண்டும். மூட்டை, மூடி, மூன்று, மூச்சு, மூவேந்தர், மூஞ்சி, மூக்கன்.

அய்யனமே ‘டூ’ பயன்படும் வார்த்தைகளை குழந்தைகள் யோசித்து சொல்ல வாய்ப்பு கொடுத்தால் வார்த்தைகள் கிடைக்காமல் சிரமப்படுவர். இதன் மூலம் தமிழ்மொழியில் டூ ன் பயன்பாடு மிகக் குறைவு என்பதை குழந்தைகள் உணரசெய்யலாம்.

செயல் 2:10

குழந்தைகளை இரு குழுக்களாகப் பிரித்து அவற்றிற்கு குறில் ஃ நெடில் குழு எனப் பெயரிடுங்கள், பின்பு இப்போது நாம் கற்ற ப, பா

, பா, பி, பீ, பு, பூ

, மா, மி, மீ, மு, மூ

, டா, டி, டீ, டு, டூ

என்கிற 18 எழுத்துக்களில் குறில் எழுத்துக்களான ப, பி, பு, , மி. மு, , டி, டு என்பவைகளின் ஏதாவது ஒரு எழுத்தைப் பயன்படுத்தி குறில் குழுவினர் ஒரு வார்த்தை சொல்ல உடனடியாக நெடில் குழுவினர் அவ்வெழுத்துக்கான நெடில் வார்த்தைகளை பயன்படுத்தி வேறு ஒரு வார்த்தையை தேடி கண்டெடுத்து சொல்ல வேண்டும்.

சரியாகச் சொல்லும் குழுவிற்கு மதிப்பெண் வழங்கி சிறப்பிக்க வேண்டும். அடுத்த முறை நெடில் குழுவினர் ஒரு வார்த்தை சொல்ல குறில் குழுவினர் அவ்வெழுத்துக்கான குறில் எழுத்தை பயன்படுத்தி வார்த்தைகள் சொல்ல வேண்டும். இப்படியாக இவ்விளையாட்டை தொடர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் எந்தக் குழு அதிக மதிப்பெண் பெற்றுள்ளதோ அக்குழவை வெற்றிக் குழவாக அறிவிக்கலாம்.

டி, டு போன்ற எழுத்துக்களை பயன்படுத்தும் போது அதற்குரிய நெடில் எழுத்துக்களான டீ, டூ போன்ற எழுத்துக்கள் பயன்படும் வார்த்தைகள் கண்டெடுப்பது சிரமம் என்பதால் இவைகளை தவிர்த்து விடலாம்.

உதாரணம்,

செயல் 2:11

இதுவரை கற்றுள்ள

, ஆ – 12 எழுத்துக்கள்

, பா, பி, பீ, பு, பூ, ப் - 7

, மா, மி, மீ, மு, மூ, ம் - 7

, டா, டி, டீ, டு, டூ, ட் - 7

ஆக மொத்தம் 33 எழுத்துக்களை கொண்டு வார்த்தைகள் அமைத்து எழுத வேண்டும்.

வகுப்பை இரு குழுவாகப் பிரித்து அவைகளுக்கு மருதம், முல்லை என பெயரிடுங்கள்.

மருதம் குழுவிலிருந்து ஒரு நபர் முன்னே வந்து கரும்பலகையில் மேற்கண்ட 33 எழுத்துக்களைப் பயன்படுத்தி ஒரு வார்த்தை எழுத அது சரியெனில் அக்குழுவிற்கு ஒரு மதிப்பெண் வழங்கி பாராட்டி விட்டு இப்போது ‘முல்லை’ குழுவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அந்தக் குழுவினரும் சரியாக செய்தால் அவர்களுக்கும் மதிப்பெண் கொடுத்து இப்படியாக விளையாட்டைத் தொடரலாம். அதிக மதிப்பெண் பெற்றக் குழவினைப் வெற்றிக்குழுவாக அறிவித்து பாராட்டிடலாம். இது எழுத்துப் பயிற்சிக்கான விளையாட்டு என்பதை கவனத்தில் கொள்க.

உதாரணம்,

- Eronimus
Full View

செயல் முறை விளக்கம் - 3

செயல் 2:12

டெ, பெ, மே அறிமுகம்

ட’ ன் முன்னால் ‘என்கிற குறியீட்டை போட்டால் அது ‘டெ’ என்றாகிறது எனில்

ப’ ன் முன்னால் ‘குறியீட்டை இட்டால் அது ‘பெ’ என்றாகும்.

ம’ ன் முன்னால் ‘குறியீட்டை இட அது ‘மெ’ என்றாகிறது.

டெ’ பயன்படுத்தி அமையும் வார்த்தைகள்

டெங்கு, கண்டெடுத்து, மீட்டெடுத்தான், மீண்டெழுந்தான்.

பெ’ எழுத்தால் அமையும் வார்த்தைகளின் பட்டியல் சொல்லுங்கள்

பெட்டைக்கோழி, பெரியவன், பெருமை, பெண்கள், பெற்றவள், பெறு, பெருக்கல்

மெ’ எழுத்தால் அமையும் வார்த்தைகளின் பட்டியல் சொல்லுங்கள்.

மெட்டு, மெட்டி, மெல்ல, மெலிந்த மெதுவாக, மென்மை, மெச்சினாள், மெய்.

செயல்: 2:13

டே, பே, மே அறிமுகம்

ட’ ன் முன்னால் ‘என்கிற குறியீட்டை போட்டால் அது ‘டே’ என்றாகும் எனில்

ப’ ன் முன்னால் ‘போட்டால் ‘பே’ என்றும்

ம’ ன் முன்னால் ‘போட்டால் ‘மே’ என்றும் ஆகும்.

டே’ எழுத்து பயன்படுத்தப்படும் வார்த்தைகளை பட்டியலிடுங்கள்.

பட்டே, வண்டே, கேட்டேன், வீடே, கண்டேன்

பே’ எழுந்தால் தொடங்கும் வார்த்தைகளை பட்டியலிட சொல்லுங்கள்.

பேண், பேணா, பேரீச்சை, பேறு, பேசினார், பேதமை, பேழை, பேதி

மே’ எழுத்தால் தொடங்கும் வார்த்தைகளை குழந்தைகள் ஆளுக்கொன்று சொல்ல வேண்டும்.

மேன்மை, மே மாதம், மேடு, மேல், மேட்டிமை, மேடை, மேதை, மேசை, மேகம், மேற்கு.

செயல் 2:14

வகுப்பை இரு குழுவாகப் பிரித்து குறில் நெடில் வார்த்தைகளை அமைக்கும் செயல்பாடு இது. குழக்களுக்கு முறையை குறில் குழு, நெடில் குழு என பெயரிட்டு விளையாட்டை ஆரம்பிக்கலாம். சரியாக சொல்லும் ஒவ்வொரு முறையும் ஒரு மதிப்பெண் கொடுத்து குழுக்களை பாராட்டலாம்.

உதாரணமாக

         

செயல் 2:15

டை, மை, பை அறிமுகம்

ட’ ன் முன்னால் ‘என்கிற குறியீட்டை இட அது டை என்றாகும் எனில்

ம’ ‘ப’ எழுத்துக்கள் முன்னால் ‘என்கிற குறியீட்டை இட அவை முறையே மை, பை என்றாகும் அன்றோ.

டை’ என்கிற எழுத்து பயன்படும் வார்த்தைகள் ஆளுக்கொன்று சொல்லுக.

அடை, ஆடை, வடை, வாடை, கடை, காடை, இடை

மடை, மாடை, விடை, படை, பாடை, புடை, முடை, மூடை, மேடை.

மை’ என்கிற எழுத்து பயன்படும் வார்த்தைகளின் பட்டியலை சொல்லுக

அமை, ஆமை, இமை, ஊமை, சமை, சானம், சுமை, சீமை,

அன்மை, ஆன்மை, மை, மைனா

பை’ என்கிற எழுத்து பயன்படும் வார்த்தைகள் ஆளுக்கொன்றாக சொல்லவும்.

பைந்தமிழ், பைங்கிளி, பையன், பை, அன்பை, எலும்பை, வேம்மை, சபை

செயல் 2.16

கீழே கொடுக்கப்படும் குறிப்பைக் (உடரந) கொண்டு பொருத்தமான வார்த்தைகளை கண்டுபிடியுங்கள். நீங்கள் கண்டு பிடிக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எப்போதும் ‘டை’ என்கிற எழுத்தால் மட்டுமே முடிய வேண்டும்.

 

விடைகள்:

அடை, ஆடை, வடை, வாடை, மடை, மாடை, கொடை, கோடை, குடை, கூடை, கடை, காடை, சடை, சாடை, படை, பாடை, நடை, நாடை, முடை, மூடை, தடை, தாடை, தொடை, தோடை.

 

ஒளிந்திருப்பது எது?

அது ஒரு நான்கெழுத்து வார்த்தை. அதில் பின்வரும் மூன்றெழுத்துக்கள்’---ப்பம்’. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்திற்கு பொருத்தமான ‘---ப்பம்’ என முடியக்கூடிய வார்த்தை எழுவென கண்டுபிடியுங்கள்

அம்மா சுட்டாள்

அக்கா தின்றாள்

வயிறு நிறைந்ததும் வருவது

அரசனுக்குக் கட்டணும்

அதற்கான இசைவு

ஆலயத்தின் முகப்பில்

ஆண்டவன் இருப்பதோ

கசப்பு இலை

நாய்க்கு உரியது

 

- Eronimus
Recent Question Papers & Keys

Comments