Videos

Full View
cruds.institution.fields.id
Full View

தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலைகள்

நடனம், இசை, மொழி போன்றே ஒவ்வொரு இன அல்லது மக்கள் குழுவும் தனித்துவமான தற்காப்புக் கலை மரபை கொண்டிருக்கின்றது.

தென்னிந்தியாவில் இருந்த நாடுகள் தம்மோடும் பிறரோடும் தொடர்ந்து போர்களில் ஈடுபட்டதால் போரியலின் ஒரு அம்சமாக தற்காப்புக் கலைகள் வளர்த்தெடுக்கப்பட்டன.

தமிழர் தற்காப்புக் கலைகள் (Tamil martial arts) பல்லவ, சேர, சோழ, பாண்டிய நாட்டுப் போர் மரபில் தோன்றிய சண்டை அல்லது தற்காப்பு வழிமுறைகள், மரபுகள், நுட்பங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை குறிக்கின்றன எனலாம்.

1.சுவடிகள் (வெற்றுக்கை கலைகள்)

2.தமிழர் தற்காப்புக் கலைகள் (ஆயுதங்கள் பயன்படுத்தும்    கலைகள்)

சுவடிகள்:

1.கம்பு சூத்திரம்

2.குறந்தடி சிலம்பம்

3.நடசாரி

4.பதார்த்த குண சிந்தாமணி

5.அகத்தியர் பூரண காவியம்

6.வெற்றுக்கை கலைகள்

7.வர்மக்கலை

8.அடிதட - (Kickboxing)

9.குத்து வரிசை (Kuttu Varisai (Hand and Foot Combat))

10.மல்யுத்தம் (Grappling)

11.களரிப்பயிற்று 

தமிழர் தற்காப்புக் கலைகள் (ஆயுதங்கள் பயன்படுத்தும் கலைகள்):

1.சிலம்பம்

2.முச்சாண் (Short Staff)

3.இரட்டை முழங்கோல் (Double Stick)

4.இரட்டை வாள் (Double Swords)

5.வாள் (Single Sword)

6.வாள், கேடயம் (Sword/ Shield)

7.வெட்டரிவாள் (Machete)

8.கத்தரி (Small Dagger)

9.பீச்சுவா (Double Edged Kris)

10.சுருள் பட்டை (Spiral Steel Whip)

11.சூலம் (Trident)

12.மடுவு (Deer Horns)

13.சுருள் கொம்பு (Spiral Horns)

14.வளரி (Boomerang)

15.வில் அம்பு (Archery)

16.ஊது குழாய் (blow gun)

தமிழர் போரியல்:

பிற மனித குழுக்கள் போலவே தமிழர் வாழ்விலும் போர் ஒரு தொடர் அம்சமாக இருக்கின்றது. தமிழர் தம்மிடையேயும் பிறருடனும் போர் செய்தற்கான காரணங்கள், தமிழர் போர் மரபுகள், தமிழர் போர் நுட்பங்கள் மற்றும் உத்திகள், தமிழ் போர். தமிழர் சம்பந்தப்பட்ட போர் வரலாறு, தற்கால ஈழப்போர் ஆகியவற்றை ஆயும் இயல் தமிழர் போரியல் எனலாம்.

வரலாறு:

தமிழர் தொல்காப்பியக் காலந்தொட்டே போர்க்கருவிகளைக் கையாள்வதிலும், அவற்றை வடிவமைத்துக் கொள்வதிலும் பழக்கமுடையவராக இருந்துள்ளனர்.

" வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மாலையும் தேரும் மாவும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய"

                      - தொல்காப்பியம், பொரு. மரபி. 628.

பண்டைக்காலத்தில் நிலப்படைகள்:

1. கரிப்படை (யானைப்படை)

2.பரிப்படை (குதிரைப்படை)

3.தேர்ப்படை

4.காலாட்படை

தமிழர் மரபுசார் போர்க்கருவிகள்:

முதன்மைக் கருவிகள்;

1.வாள்

2.வில்

3.வேல்

மற்றயவை:

வளரி,

அடார்,

அரம்,

அரிவாள்,

ஆயுதக்காம்பு,

எஃகு,

கண்ணாடி தைத்த கேடகம்,

கணிச்சிப்படை,

கலப்பை,

கழிப்பிணிப் பலகை,

காழெஃகம்,

கிளிகடிகருவி,

குந்தாலி,

குறடு,

கேடகம்,

கோடாலி,

சக்கரம்,

சிறியிலை எஃகம்,

சேறுகுத்தி,

தறிகை,

துடுப்பு,

நவியம்,

படைவாள்,

பூண்கட்டிய தண்டு,

மழு,

வாள்,

வில்,

வேலுறை

- Imran
Full View

வெற்றுக்கை கலைகள் (சுவடிகள்)

வர்மக்கலை:

வர்மக்கலை(Varma kalai) என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது.

இது முற்றிலுமாக அழியும் நிலையில் உள்ளது. முற்காலத்தில் குரு-சிஷ்ய முறையில் கற்பிக்கப்பட்ட நிலையில், இதை தவறாக பயன்படுத்தியன் காரணமாக

இது குருக்காளால் கற்பிக்கப்படாமல் முற்றிலுமாக அழியும் நிலையை எட்டிவிட்டது.

வர்மம் உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்மம் எனப்படும்.

1. உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும், நரம்புகள், மூட்டுகள், தசைநார், தசைகள் அல்லது உறுப்புகள் போன்றவை. அதாவது உயிர்நிலைகளின் ஓட்டம் எனக் கூறுவர். 108 வர்மங்களில் # 12 படு வர்மங்களும் (மரணம் ஏற்படுத்தக்கூடியவை), # 96 தொடு வர்மங்களும் உள்ளன. வர்ம தாக்கத்திற்கு மாற்றீடாக மேற்கொள்ளப்படும் வர்மம் மயக்க நிலையிலிருந்து சுகமளிக்கக்கூடியது.

2. வர்ம முனைகள்,

கழுத்துக்கு மேல் 25

கழுத்திலிருந்து தொப்புள் வரை 45

தொப்புள் முதல் மூலாதாரம் வரை 9

இரு கைகளிலும் 14

இரு கால்களிலும் 15

ஆக மொத்தம் 108

குத்துவரிசை:

குத்துவரிசை ஒரு தமிழர் தற்காப்புக் கலை. இது தமிழ்நாட்டிலும், தமீழீழத்திலும் பயிலப்படுகிறது. உடல் உறுப்புகள் அனைத்தையும் இந்த கலை ஈடுபடுத்துகிறது.

மற்போர்:

மற்போர் என்பது இரண்டு ஆட்கள் ஆயுதங்கள் இல்லாமல் ஈடுபடும் ஒருவகைப் போர் அல்லது தற்காப்புக் கலை ஆகும். இது உலகின் பல்வேறு சமூகங்களுக்கு இடையேயும் உள்ள ஒரு கலை வடிவம். இந்திய மரபிலும், தமிழர் மரபிலும் மற்போர் சிறப்புற்று இருந்தது. "மல்:என்பதற்கு வலிமை, மற்றொழில், எனப் பொருள் வழங்குகின்றன தமிழில், இம் மற்போர் தமிழ் இலக்கியங்களில் 'மல்லாடல்' என வழங்கப்படுகின்றது. மற்போர் இன்று ஒரு விளையாட்டாக, அரங்கக் கலையாகப் பெரிதும் பயிலப்படுகிறது. இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.

தமிழர் மரபில் மற்போர்:

மல்லாடல் பிற்காலத்தில் குஸ்தி என்ற சொல்லாலும் குறிக்கப் படுகிறது. மற்போராளிகளைப் பயில்வான் என்றும் குறிப்பர். மற்போர் விளையாட்டு நம்நாட்டில் நெடுங்காலமாகப் பயிலப்பட்டு வருகிறது. பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம பல்லவன் மற்போரில் சிறந்தவனாக இருந்ததால் அவனுக்குச் சிறப்புப் பெயராக மாமல்லன் என்ற பெயர் ஏற்பட்டது. அவன் பெயராலே மாமல்லபுரம் என்ற ஊர் பெயர் ஏற்பட்டது.

 கோதா:

மற்போர் களத்திற்கு கோதா என்பது பெயராகும். இந்த கோதாவை எவ்வாறு தயார்ப்படுத்தினார்கள் என்றால் , செம்மண் கொண்டுவந்து கொட்டி அதில் ஒரு பருக்கைக்கல் கூட இல்லாமல் சுத்தமாக்கி மென்மையாக்கி, அதன் மீது நல்லெண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய், தயிர், பால், போன்றவற்றை இயன்றவரை ஊற்றி அந்த மண்ணை ஒரு வட்டை கொண்டு நன்றாக அடித்து, கட்டியாக்கி, வெயிலில் உலரவிட்டு, ஒரு கிழமை கழித்து அது நல்ல கட்டாந்தரையான பின்னர் தரையை நன்றாக மறுபடியம் இடித்து, மண்ணை தூள்தூளாக்கி விடுவார்கள். பின்னர் அதில் மற்போர் புரிந்தால் மென்மையாக இருக்கும்.

களரிப்பயிற்று:

களரிப்பயிற்று என்பது பழந்தமிழகத்தில் தோன்றிய ஒரு தற்காப்புக் கலையாகும். இது அடிமுறை என்றும் அழைக்கப்படும். இன்று இது கேரளாவிலும் பயிலப்படுகிறது எனினும், நெடுங்காலமாக தமிழர் பயன்றுவந்த விருத்தி செய்த தமிழர் தற்காப்புக் கலைகளில் இதுவும் ஒன்று.இந்தக் கலை பற்றிய பழைய ஏடுகள் தமிழிலேயே உள்ளன என்பது இதற்கு சான்றாகும். களரிபயத்து அடித்தல், உதைத்தல், கொழுவிப் பிடித்தல், தொடர்தாக்குதல் நகர்வுகள், ஆயுதங்கள் ஆகியவற்றையும், உடற்பிடித்தல் மூலிகைகள் போன்ற மருந்துவ நுணுக்கங்களையும் உள்ளடகிய ஒரு முழுமையான கலையாகும்.

களரிப்பயிற்று முறைகள்:

வாள், கத்தி, சுருள்வாள், மான்கொம்பு, கண்டகோடாலி, மழு போன்ற ஆயுதங்களை களரி விளையாட்டில் பயன்படுத்துவர். களரி, வடக்கன் களரி, தெக்கன் களரி என இருவகைப்படும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துகுடி ஆகிய பகுதிகளிலும் கேரளாவிலும் இக்கலை வடிவம் உள்ளது. களரி வீரர்கள் களரி நிகழ்வின் போது கடவுள், குரு, ஆயுதம், களம் ஆகியவற்றை வணங்கி பின் துவங்குவர். களரி கற்றுக் கொடுக்கும் ஆசான் அல்லது குரு மருத்துவம் தெரிந்தவராகவும் இருப்பார்.

அடிமுறை:

அடிமுறை என்பது தமிழ்நாட்டுத் தற்காப்புக் கலை-விளையாட்டுகளில் ஒன்று. அடிமுறை விளையாட்டில் கையாலும் காலாலும் தாக்கி எதிராளியை வீழ்த்துவர்.

அடிமுறையில் அடவுகள்:

அடிமுறை பயில்வோருக்கு 18 அடவுகள் சொல்லித் தரப்படும். அடவு என்பது முன்னும் பின்னும் கால்-தப்படி வைத்துக் கையை ஓட்டும் பாங்கு. இதில் எதிராளி வலிதாங்க மாட்டாமல் விழுவார்.

அடிமுறையில் பாணிகள்:

அடிமுறைத் தற்காப்பு விளையாட்டில் ஒற்றைச்சுவடு, அங்கச்சுவடு என இருவேறு பாணிகள் உண்டு

அங்கச்சுவடு

  • தேக்வொண்டோவில் உள்ள கால்உதை
  • கராத்தேயில் உள்ள கைக்குத்து
  • ஜுட்ஜூவில் உள்ள உள்பூட்டுகள்
  • ஜூடோவில் உள்ள தூக்கி எறிதல்
  • குங்பூவில் உள்ள கைவெட்டு
  • வர்மக்கலையில் உள்ள வர்ம-உறுப்பு தாக்கம்

ஆகிய அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கமாய்க் கொண்டிருப்பதுதான் அடிமுறை விளையாட்டின் அங்கச்சுவடு.

பாவலா

  • முன்னால் ஓரடிப் பாவலா
  • பின்னால் ஓரடிப் பாவலா
  • என்று இப்படி ஈரடி, மூவடி, நாலடிப் பாவலாக்களும் உண்டு.

மற்றும் முன்னுடான், பின்னுடான், துள்ளுடான் என்னும் பாங்குகளும் இதில் உண்டு.

- Imran
Full View

தற்காப்பு கலை ஆயுதங்கள் -1

திரிசூலம்:

 

திரிசூலம் என்பது இந்து மற்றும் புத்த தொன்மவியலில் இறையின் ஆயுதமாக கருதப்படுகிறது. இவ்வாயுதம் தெற்காசிய நாடுகள் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படுகிறது.

இந்து சமயத்தில் வழிபடப்படும் கடவுளர்களான சிவன்காளிதுர்கை முதலான தெய்வங்கள் வைத்திருக்கும் ஆயுதமாகத் திரிசூலம் காணப்படுகின்றது. இது ஆணவம்கன்மம்மாயை எனும் மும்மலங்களை அழிக்கும் திருவருட்சக்தியின் அடையாளமாக காட்டப்டுகின்றது. தீய சக்திகளை அழிப்பது என்பது இதன் கோட்பாடாகும்.

கடா (mace):

கடா என்பது இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த ஒரு சுத்தி அல்லது மழுங்கிய சூலாயுதம்.  மரம் அல்லது உலோகத்தால் ஆனது, இது ஒரு தண்டு மீது ஏற்றப்பட்ட ஒரு கோளத் தலையைக் கொண்டுள்ளது, மேல் ஒரு ஸ்பைக் உள்ளது.  இந்தியாவிற்கு வெளியே, தென்கிழக்கு ஆசியாவிலும் கடா ஏற்றுக்கொள்ளப்பட்டது, அங்கு அது இன்னும் சிலாட்டில் பயன்படுத்தப்படுகிறது.

இந்து கடவுளான ஹனுமானின் முக்கிய ஆயுதம் கடா.  அவரது வலிமைக்காக அறியப்பட்ட ஹனுமான் பாரம்பரியமாக இந்திய துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மல்யுத்த வீரர்களால் வணங்கப்படுகிறார்.  விஷ்ணு தனது நான்கு கைகளில் ஒன்றில் கயும் மோடகி என்ற ஒரு கடாவையும் கொண்டு செல்கிறார். மகாபாரத காவியத்தில், போராளிகள் பலராமா, பீமா, துரியோதனா, ஜராசந்தா மற்றும் பலர் கடா எஜமானர்கள் என்று கூறப்பட்டது.

வேல்:

 என்பது இந்துக்களின் கடவுளான முருகனின் கைகளில் காணப்படும் தெய்வீக ஆயுதமாகும். பண்டைத் தமிழர்கள் போரில் பயன்படுத்திய ஆயுதமான ஈட்டியும் கிட்டத்தட்ட வேல் போன்றதாகும்.

தமிழர் பண்பாட்டில் வேல்:

பண்டையத் தமிழர்கள் வேலை ஆயுதமாகப் பயன்படுத்தினர். "வெற்றிவேல், வீரவேல்" என்பது அக்காலத்துப் போர்க்களங்களில் முழங்கப்படும் முழக்கமாக இருந்தது. தற்காலத்திலும் முருகன் கோவில் திருவிழாக் கால ஊர்வலங்களில் கடவுளைப் போற்றும் வகையிலும் பக்தர்களை உற்சாகப்படுத்தவும் இம்முழக்கம் முழங்கப்படுகிறது. தமிழ் இந்துக்களின் பெயர்களில் சக்திவேல், ராஜவேல் பழனிவேல் போன்ற வேல் என முடியும் பெயர்களும் வேல்முருகன், வேலப்பன், வேலம்மாள் என்ற பெயர்களும் அதிகமாக காணப்படுகின்றன. முருகன் பக்திப் பாடல்களிலும் வேல் என்ற வார்த்தை அதிகமாகப் பயன்படுவதைக் காணலாம்.

பிச்சுவா

பிச்சுவா (Bichuwa அல்லது bichawa) என்பது இந்திய துணைகண்டத்தில் தோன்றிய ஒரு குத்துவாள் ஆகும். இது அலை போன்று வலைந்த குறுகிய கூர்மையான கத்தியாகும். தேள் கொடுக்கை ஒத்த இதன் தோற்றத்தால் இதற்கு இந்திப் பெயரான பிச்சுவா என்ற பெயர் உண்டானது.

இந்தக்கத்தியானது தென்னிந்திய திராவிடர்கள் உருவாக்கிய ஆயுதமான மட்டுவு அல்லது ஹார்ன் டாகரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஆயுதமாகும். மேலும் பிச்சுவா கத்தியானது எருமைக் கொம்பின் வடிவத்தை தன்னகத்தே கொண்ட கத்தி ஆகும். பிசுவாவின் துவக்கக்கால எடுத்துக்காட்டுகளானது, இடைக்காலத்தில் தென்னிந்தியாவில் நிலவிய விஜயநகர பேரரசில் இருந்து கிடைக்கிறது. இதைத் தயாரிப்பது ஒப்பீட்டளவில் எளிதானது என்பதால், 20 ஆம் நூற்றாண்டிலும் பிச்சுவா ஒரு அலங்காரக் குத்துவாளாகத் தொடர்கிறது.

அமைப்பும் பயன்பாடும்:

பிச்சுவா கத்தியானது பொதுவாக லேசாக வளைந்த வெட்டுப் பகுதியைக் கொண்டு இருக்கும். இது பொதுவாக சுமார் 30 சென்டிமீட்டர் நீளமுடையதாக இருக்கும். சில பிச்சுவாக்கள் கைப்பிடியில் கைவிரல்களை பாதுகாக்கும் கண்ணிகளைக் கொண்டிருக்கும். 

தென்னிந்தியாவில் மத்தியக் காலத்தில் காணப்பட்ட பிச்சுவாக்களின் கைப்பிடியில் யாளியின் உருவத்தைக் கொண்டு வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும். சில பிச்சுவாக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தகடுகளைக் கொண்டதாக இருக்கும்.

இந்த ஆயுதத்தில் சிறியவற்றை இடுப்பில் எளிதாக மறைத்துவைத்துக் கொள்வர். பாக் நாகாவுடன் இணைந்தவாறு உள்ள பிச்சுவாக்கள் உண்டு. பிச்சுவாவின் கைப்பிடியில் பாக் நாகா நகங்கள் சேர்க்கப்பட்தாகவோ அல்லது பாக்நாதாகவில் பிச்சுவா கத்தி இணைக்கப்பட்டதாகவோ இருக்கும். இந்த இந்த கலவையான ஆயுதமானதுபிச்சுவா பாக் நாகா என அழைக்கப்படும். 17ஆம் நூற்றாண்டில் மராத்திய தலைவரான சிவாஜியால் அப்சல் கானை படுகொலை செய்ய இது பயன்படுத்தப்பட்டது. சிவாஜியின் ஆயுதமானது பவானி அல்லது "உயிர் கொடுப்பான்" என்ற பெயரால் அழைக்கப்பட்டது. ஆனால் இது அவரது வாளின் பெயர் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலம்பம்:

சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறைகால் அசைவுகள்உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும்.

முறை:

சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், தற்காலத்தில் ஆண்கள்பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழாகோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும். இக்கலை திருவள்ளூர் , திருநெல்வேலிதூத்துக்குடிகன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது.

பயன்கள்

பயிற்சியாளர் அல்லது சிலம்பம் மற்றும் காய் சிலம்பம் (குத்துவரிசை) போன்ற தசை விரைவு மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மை, கையும் கண்ணும் ஒருங்கிணைப்பு, காலும் கண்ணும் ஒருங்கிணைப்பு, உடல் சமநிலை, தசை ஆற்றல், வேகம், தசை வலிமை மேம்படுத்த சுகாதார நலன்கள் பெறும் வழக்கமான பயிற்சி, சுற்றோட்டத் தொகுதி பொறுமை, தசை வலிமை

வரலாறு

மக்கள் தம்மை சிங்கம்புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்திகோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுத்தினர்.

தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டிகத்திவேல்வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும். முற்காலத்தில் இக்கலையை சத்திரியர்கள் பயன்படுத்தினர். தற்போது இது ஒரு சில பள்ளிகளிலும், தனியார் அமைப்புகளாலும் கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம்பெறுகிறது.

சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன. வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத்தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.

- Imran
Full View

தற்காப்பு கலை ஆயுதங்கள் - 2

வில் - அம்பு:

வில்லும் அம்பும், இவ்விரண்டும் ஒருங்கிணைந்து, எய்யும் ஆயுத அமைப்பாக அறியப்படுகின்றது. வில்வித்தை என்பது ஓர் அற்புதமான கலை மற்றும் திறமை ஆகும்.

அமைப்பு:

வில் என்பது வளைவான வடிவமுடைய, காற்றியக்க எறிகணையான அம்புகளை எய்ய உதவும் சாதனம் ஆகும். வில்லின் இருமுனைகளின் இணைப்பை நாண் என்பர், நாணை பின்னிழுக்கும் போது வில்லின் முனைகள் வளைக்கப்படும். நாணை விடுவிக்கையில், வளைக்கப்பட்டிருக்கும் கிளையின் நிலையாற்றல், அம்பின் திசைவேகமாக மாறும். வில்லிலிருந்து அம்புகளை எய்யும் கலையை அல்லது விளையாட்டைவில்வித்தை என்பர்.

இன்று, வில்லும் அம்பும் பிரதானமாக வேட்டையாடுதலுக்கும் விளையாட்டுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

வில்லை தயாரிப்பவரை வில்செய்வோன் (bowyer) எனலாம்அம்புகளை தயாரிப்பவரை அம்பன் (fletcher) எனலாம் —அல்லது உலோக அம்புமுனைகளை தயாரிப்பவரை அம்புக்கொல்லன் எனவும் குறிப்பிடலாம்.

வில்லின் பாகங்கள்:

வில்லின் அடிப்படைக் கூறில், இரு வளைந்த  இழுபடக்கூடிய கிளைகளை (பாரம்பரியமாக மரத்தில் செய்யப்படும்), இணைக்கும் வகையில் தண்டு இருக்கும். கிளைகளின் இரு முனைகளை இணைக்கும் நாரை/கம்பியைநாண் என்பர்.நாணை பின்னிழுப்பதன் மூலம், வில்லாளி அமுக்குவிசையை கிளைகளின் உட்புறத்திலும், இழுவிசையை கிளைகளின் வெளிப்புறத்திலும் ஒரே வேளையில் செலுத்துகிறார். நாணை இழுத்துப் பிடிக்கையில் சேமிக்கப்படும் ஆற்றல், அம்பை எய்கையில் வெளிப்படுக்கிறது.[citation needed] நாணை முழுமையாகவும் நிலையாகவும் இழுத்துப் பிடிக்க தேவைப்படும் விசையைத்தான், வில்லின் சக்தி என்பர்; இதை இழு-எடை என்றும் சொல்வர். இழு-எடை அதிகரிக்க, வில்லின் சக்தியும் அதிகரிக்கும், அதாவது அதைகொண்டு வழக்கமான அம்பை அதிக வேகத்துடனும், கனமான அம்பை வழக்கமான வேகத்தோடும் எய்ய முடியும்.

வில்லின் பாகங்கள் மேலும் துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இரு கிளைகளில், மேலுள்ளதை மேல்கிளை என்றும்; கீழுள்ளதை, கீழ்கிளை என்றும் குறிப்பிடுவர். ஒவ்வொரு கிளையின் முனையிலும், நாணை அதனுடன் இணைக்க நாண் பள்ளம் / குதை இருக்கும். தண்டுப்பகுதியை, வில்லாளி வில்லை பிடிக்கும் இடமான பிடிஅம்பு மனை மற்றும் காண்குழி என பிரிக்கலாம். அம்பு மனை என்பது, குறி வைக்கையில்அம்பைத் தாங்க, பிடிக்கு மேலுள்ள ஒரு சிறு விளிம்பு. தண்டின் பிடிக்கு மேலுள்ள, அம்பு மனையைக் கொண்ட பகுதியை காண்குழி என்பர்.

கையால் இழுத்துப் பிடிக்கப்படும் வில்களில், அதிகபட்ச இழு-எடையை தீர்மானிப்பது வில்லாளியின் பலம்தான். எந்த அளவுக்கு நாணை பின்னிழுக்க முடிகிறதோ, அதற்கு நிகரான நீளம் கொண்ட அம்பை அதிலிருந்து எய்ய இயலும், வில்லாளியின் அளவைப் பொருத்துதான், வில்லின் இழு-நீளம் .

ஒரு கலப்பு வில்லின் கிளைகளை உருவாக்க சில மூலப்பொருட்கள், கலவையாக பயன்படுத்தபடுகிறது. இதுதான் வில்லின் கிளைகளின் செயல்பாட்டிற்கு ஏற்றவாறு சிறப்பு வாய்ந்த மூலப்பொருட்கள் பயன்படுத்த வகைசெய்தது. பண்டைய கலப்பு வில்லில், பரிமாண நிலைத்தன்மைக்காக 'மரத்தை' உள்ளகமாகவும், 'கொம்பை' அழுத்த ஆற்றலை சேமிக்கவும், மற்றும் இழுவிசை ஆற்றலை சேமிக்கவல்ல தசைநார் ஆகியவற்றை பயன்படுத்தப்பட்டன. இத்தகைய வில்களில், கிளையின் முனை திடமாக இருப்பதால், வெளிவளை முனை போன்ற விளைவை அளிக்கும்.இவ்வில்லின் அரபுப் பெயர் 'சியாஆகும்.

நவீன வில்கள் பல்லடுக்கு மரம், கண்ணாடி இழை, உலோகங்கள்மற்றும் கரிம நார் போன்ற மூலபொருட்களால் ஆக்கபடுகின்றன.

அம்புகள் :

பொதுவாக, ஒரு பக்கத்தில் அம்புமுனையும், மறுபக்கமத்தில் நிலைநிறுத்தி மற்றும் நாண் பள்ளமும் கொண்ட ஓர் எளிய கோல்தான்  அம்பு எனப்படுகிறது.நவீன அம்புகள் கரிம நார், அலுமினியம், நார்க்கண்ணாடி மற்றும் மரத்தால் ஆனவை. கரிமத்தாலான கோல்கள் இலகுவாகும், வளையாமலும் இருக்கும், ஆனால் விலையுயர்ந்தது. அலுமினியத்தால் ஆன கோல்கள், கரிம கோல்களைவிட விலை மலிவானது, அனால் பயன்படுத்தும்போது வளையக்கூடும். மரத்தாலான கோல்கள்தான் மிகச் சிக்கனமான தேர்வாகும், அனால் இவை எப்போதும் ஒரே எடை மற்றும் அளவில் இருப்பதில்லை, மேலும் மற்ற கோல்களுடன் ஒப்பிடுகையில் எளிதில் உடையக்கூடியது. கலச்சாரங்களை பொறுத்து அம்பின் நீளம் வேறுபடும். நவீன அம்புகளின் நீளம் 22 இன்ச் (56 செ.மீ.) முதல் 30 இன்ச் (76 செ.மீ.) வரை இருக்கும்.

அம்புகள் பலவகைப்படும், அவற்றில் சில வெளிக்கூம்பு, உட்கூம்பு, இடைதடித்த அம்பு, நெடுந்தூர எய்தல் அம்பு, மற்றும் இலக்கு அம்பு ஆகும்.வெளிக்கூம்பு அம்பு, நிலைநிருத்திகளுக்குப் பின்னால் மிகத் தடித்தும், பின் அம்புமுனையை நோக்கி படிப்படியாக அதன் தடிமன் குறையும். உட்கூம்பு அம்பு, அம்புமுனைக்குப் பின் மிக தடித்தும், நாண் பள்ளத்தை நோக்கி படிப்படியாக தடிமன் குறையும். இடைதடித்த அம்புநடுவில் மிகுதியாக தடித்திருக்கும்.போர்/வேட்டை அல்லாது  இலக்கை தாக்க பயன்படும் அம்பை இலக்கு அம்பு என்பர். பொதுவாக இவை எளிய அம்புமுனைகளைக் கொண்டிருக்கும்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக, அம்பைத் தொடுக்காமல், வெறும் நாணை எய்யக்கூடாது; அம்பில்லாமல் எய்கையில், வில்லின் ஆற்றல் முழுவதும் வில்லின் கிளைகையே தாக்கும். இது வில்லிற்கு சேதத்தை விளைவிக்கும்.

அம்புமுனைகள் :

அம்புமுனைகளின் வகைகள்: இலக்கை தாக்க வடிவமைக்கப்பட்ட கூர்முனையையே அம்புமுனை என்பர். பொதுவாக, இவை கணைக்கோலின் பிடிகுழியுள் இணைக்கப்படும் தனி உருப்படி ஆகும். கடந்தகாலத்தில் தீக்கல், எலும்பு, கொம்பு அல்லது உலோகத்தை அம்புமுனைகளாக பயன்படுத்தப்பட்டன. பல நவீன அம்புமுனைகள் எஃகால் ஆனவை. மரம் மற்றும் இதர பாரம்பரிய பொருட்களால் ஆனவையும் இன்றும் அவ்வப்போது உபயோகப்படுத்தபடுகிறது. பற்பல அம்புமுனை வகைகள் உள்ளன, அதில் பொதுவானவை துளைக்கும்முனை (போட்கின் முனை), அகன்றமுனை, மற்றும் கணைமுனை.துளைக்கும்முனை என்பது உலோகத்தால் ஆன கவசத்தை ஊடுருவுவதற்காகவே வடிவமைக்கப்பட்ட ஈட்டி போன்ற அமைப்புடையது.

பொதுவாக அகன்றமுனை முக்கோண அல்லது இலை வடிவம் கொண்ட கூரான வெட்டும் முனையுடன் இருக்கும். அகன்றமுனைகள் பொதுவாக வேட்டையாட பயன்படுத்தப்படும். கணைமுனை என்பது ஓர் எளிய கூரான/மழுங்கிய உலோகக் கூம்பை அம்பின் முனையின் மேலே பொருத்தியபடி இருக்கும். முக்கியமாக, இவ்வகை முனை குறி வைத்து இலக்கை சாய்க்கப் பயன்படும். கணைமுனையும் கணைக்கோலும் ஒரே விட்டத்தை கொண்டிருக்கும். இவைகளைத்தவிர இதர முனைகளும் உள்ளனமழுங்கியமுனை என்பது இலக்கை துளைக்காமலும் பற்றிக்கொல்லாமலும் இருக்க, அம்புமுனை தட்டையாக   வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இவ்வகை முனைகள் விளையாட்டிற்கும் பறவைகளை வேட்டையாடவும் பயன்படும்.மற்றொரு வகையான பற்முனைபின்புறம் துரித்திகொண்டிருக்கும் பற்கள் உடையது. இதனால் தசைகளை ஊடுருவியப்பின் பிடுங்கி எடுக்கையில் தசையை கிழித்து மேலும் சேதத்தை உண்டாக்கும். இவ்வகை முனைகள் போர்களத்திலும் வேட்டையிலும் பயன்படுத்த பட்டது.

நாண்கள் :

நாண்களில், தொடுக்கும் புள்ளி குறிக்கப்பட்டிருக்கும், இப்புள்ளியில் இருந்துதான் அம்புகள் வில்லில் இருந்து ஏவப்படும்.இப்பகுதி பொதுவாக, வில்லாளியின் விரல்களால் ஏற்படும் தேய்மானத்தை குறைக்க, நூல் சுற்றப்பட்டிருக்கும். நாணின் ஒரு முனையில் நிரந்தரமான சுருக்கு முடிச்சும், மறுமுனையில் தற்காலிக முடிச்சாக கட்டப்படும். பாரம்பரியமாக இந்த முடிச்சை வில்லாளியின் முடிச்சு என்பர், ஆனால் இது ஒரு உருளை முடிச்சு ஆகும். இந்த முடிச்சை சரிசெய்து நாணின் நீளத்தை மாற்ற இயலும்.

வில்லின் வகைகள் :

மரபுச் சின்னவியலில் வில்லும் அம்பும் 

வெளி வளைமுனை வில்: வில்லின் முனைகள் வில்லாளியை விட்டு விலகி, வெளிப்புறமாக வளைந்திருக்கும். நாணை இழுக்கையில் இந்த வளைவு நேராகி, நாணை விடுவிக்கையில் மீண்டும் வளைந்த நிலைக்கு திரும்பிவிடும். இவ்வமைப்பு அம்பிற்கு கூடுதல் திசை வேகத்தை அளிக்கும்.

வெளிவளை கிளை வில்: இயல்புநிலையின் போது, வில்லின் கிளைகள் முற்றிலுமாக வில்லாளியை விட்டு விலகி, வெளிப்புறமாக வளைந்திருக்கும்.

ஒருமர வில் : முழுவதுமாக ஒரே மரத்தைக் கொண்டு தயாரித்த வில்.

நீள்வில்: இதுவும் ஒருமர வில் தான். ஆனால், இதன் நீளம் ஏறக்குறைய வில்லாளியின் உயரத்திற்கு இருக்கும். பொதுவாக 5 அடி (1.5 மீ.) நீளம் இருக்கும். பாரம்பரிய ஆங்கிலேய நீள்வில்யூ மரத்தால் ஆனவை, ஆனால் இதர மரங்களும் பயன்படுத்தப்படும்.

தட்டை வில்: கிளைகள் உருளையாக அல்லாமல் தட்டையாக இருக்கும். பல தொல்குடி அமெரிக்க சமூகங்களில், இது பாரம்பரியமான மற்றும் மிகவும் ஆற்றல் மிக்க வடிவமாக இருந்தது.

கலப்பு வில்: ஒன்றிற்கும் மேற்பட்ட மூலப்போருட்களால் தயாரிக்கப்படும் வில்.

மடிப்பு வில்: எளிதாக எடுத்துச்செல்லும் வசதிக்காக மடிக்கக்கூடிய வில், பொதுவாக இதில் 3 பாகங்கள் இருக்கும்: 2 கிளைகள் மற்றும் ஓர் தண்டு.

கப்பிமுனை வில்: இயந்திர உதவியுடன் நாணை இழுக்கவல்ல வில். பொதுவாக, இவ்வுதவி கிளைகளின் முனையில் உள்ள கப்பிகள் மூலம் பெறப்படுகின்றன. 

- Imran
Full View

தற்காப்பு கலை ஆயுதங்கள் - 3

அருவாள்

அருவாள் அல்லது அரிவாள் என்பது தென் இந்தியாவில் உள்ள ஒரு வெட்டுகத்தி வகையாகும். இது குறிப்பாக தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் பொதுவாக காணப்படுகிறது. இது ஒரு கருவியாகவும், ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. தமிழர்கள் இதை கருப்பசாமியின் அடையாள ஆயுதமாக வைத்திருக்கின்றனர்.

அமைப்பு:

அருவாளானது பொதுவாக 3-6 அடி நீளம் (கை அரிவாள் 1.5 அடி) கொண்டதாக உள்ளது. இதன் கைப்பிடியில் இருந்து வெட்டுவாய்ப்பகுதியானது நீண்டு பின்னர் தட்டையாக விரிவடைகிறது. இது தமிழகத்தில் வேளாண் பணிகளுக்கு பயன்படுத்தும் வெட்டுக் கத்தியின் நீண்ட வடிவமாகும். மேலும் இது எதிர் வளைவுடய ஒரு வாள் என்று கருதப்படுகிறது. இதன் குட்டை வடிவமானது தேங்காய்களை எளிதாக வெட்ட பயன்படுத்தப்படுவதாகவும், நீண்ட வடிவமானது போர் ஆயுதங்கள் போன்றவை. சிறிய வடிவிலான அருவாள்கள் பொதுவாக சிற்றூர்களில் காணப்படுகிறது. இதன் வெட்டுவாய்ப்பகுதி பெரும்பாலும் நேராக நீண்டதாகவும் அதன் முனையில் ஒரு வளைவைக் கொண்டதாகவும் இருக்கும். கத்தியின் நேராக பகுதியானது ஒரு வழக்கமான கத்தி போன்று, வெட்டப் பயன்படுத்தப்படுகிறது.

பயன்பாடு:

பொதுவாக வேளாண் மக்கள் பயிர்களை அறுக்க அரிவாள் போன்று பயன்படுத்துவது கொய்த்தருவாள் என்றும், இதைவிட நீண்டது வீச்சரிவாள் எனப்படுகிறது. இது மரங்களையும், புதர்களையும் அகற்றப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வீச்சரிவாளானது கிராமப் பகுதிகளிலும், நகர்ப்பகுதிகளிலும் கும்பல் சண்டைகளில் ஒரு தற்காப்பு ஆயுதமாக இன்னமும் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் நாட்டுப்புற தெய்வங்களான முனீசுவரன், மாரியம்மன் போன்ற தெய்வங்களுக்கு ஆடுகளை பலியிடும்போது அவற்றின் தலைகளை வெட்ட இந்த வீச்சரிவாள்கள் பயன்படுத்தப்படுகின்றன. காவல் தெய்வ வழிபாடுகளில் பயன்படுத்தப்படும் சில அருவாள்கள், 3.5 அடி நீளம் கொண்டவை.

கட்டாரி:

கட்டாரி (katar அல்லது katara, ) என்பது இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த ஒரு குத்துவாள் வகையாகும். இந்த குத்துவாளின் கைப்பிடியானது H வடிவில் இருப்பது இதன் தனிச்சிறப்பாகும். இதைப் பிடித்திருப்பவரின் முன்கையின் மேல் கத்தியின் குத்துப் பகுதி அமர்ந்திருக்கும்.

இந்தக் குத்துவாளானது இந்தியத் துணைக் கண்டத்தில் மிகவும் பிரபலமானதும், தனித்துவமானதும் ஆகும்.

வரலாறு:

தென்னிந்தியாவில் உருவான இந்த ஆயுதத்தின் பழமையான பெயரானது தமிழ்ச் சொல்லான கட்டாரி என்பதாகும். மேலும் இது குத்துவாள் என்ற பெயரிலும் தமிழில் அழைக்கப்படுகிறது. இது சமசுகிருதத்தில் கட்டாரா (कट्टार) அல்லது கட்டாரி என மருவியது. இருப்பினும் இந்தச் சொல்லானது பெரும்பாலும் நவீன ஹிந்தி மொழியில் காலனிய மொழிபெயர்பின் தொடர்ச்சியாக கட்டார் ("katar") என அழைக்கப்படுகிறது.

கட்டாரியை துணைக்கண்டத்தின் பிற மொழிகளான கன்னடத்தில் கட்டாரி (kahāri- ಕಠಾರಿ), மலையாளத்தில் கட்டார (കട്ടാര), மராத்தியில் கட்யாரா, (kayāra- कट्यार) பஞ்சாபியில் கட்டார் (kaṭār- ਕਟਾਰ), இந்தியில் கட்டாரா அல்லது கட்டாரி (कटार) என அழைக்கப்படுகிறது.

இதனை நம் தமிழ் மன்னர்கள் உடைவாளை போல் பயன்படுத்தி உள்ளனர்...

- Imran
Full View

தற்காப்பு கலை ஆயுதங்கள் - 4

ஈட்டி

ஈட்டி என்பதுமரம் அல்லதுஇரும்பினால் செய்யப்பட்ட ஒரு பண்டைய கால ஆயுதம் ஆகும். வேல் என்னும் ஆயுதமும், ஈட்டியும் ஒரே மாதிரியாக இருந்தாலும், இரண்டிற்கும் சிறிய வேற்றுமை உண்டு. வேல் நுனிக்குக் கீழே வட்ட வடிவத்தில் முடியும். ஈட்டி நேர்க்கோட்டில் முடியும்.

ஈட்டியின் சிறப்பு:போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும், கைகளில் ஈட்டி பொருந்திய கோலை காவலாளி வைத்து இருப்பார். அதுமட்டுமின்றி மீன் பிடிக்கவும் ஆதி காலத்து மனிதர்கள் ஈட்டியைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.

வரலாற்றில் அனைத்து மன்னர்களின் ஆட்சியிலும் ஈட்டி ன் பயன் இல்லாமல் இருக்க முடியாது.

வாள்:

வாள் என்பது கூரிய விளிம்பு கொண்ட, நீளமான அலகுடைய வெட்டுவதற்கும், குத்துவதற்கும் பயன்படும் ஓர் ஆயுதம் ஆகும்.

அமைப்பு:இவ்வாயுதம் உலகின் பல நாகரிகங்களிலும் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டது. வாள் ஒரு நீண்ட அலகையும், ஒரு கைப்பிடியையும் கொண்டிருக்கும். இதன் அலகு நேராகவோ வளைவாகவோ அமையலாம். குத்தும் வாட்களின் அலகு முனை கூராகவும் வளையாமல் நேராகவும் அமையும்; வெட்டும் வாளின் அலகு ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கங்களிலுமோ கூரிய விளிம்புகளுடன் வளைந்தும் இருக்கும். வாளின் அலகு விளிம்புகள் வெட்டுவதற்கும், அலகின் கூர்முனை குத்துவதற்கும் ஏற்றவகையிலும் இருக்கும். பெரும்பாலும் வாட்கள் இந்த இருவகைப் பயன்பாட்டுக்கும் ஏற்ப வடிவமைக்கப்படுகின்றன.  தொன்மங்களிலும், இலக்கியத்திலும் வரலாற்றிலும் பல வாள்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர்களில் இருந்து அவற்றுக்கிருந்த மதிப்பைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.

உடைவாள் போன்ற குத்தும் கத்திகள் பின் குறுவாளாக மாறின. இவை இலக்கை வேகமாகவும் ஆழமான குத்துக்காயம் ஏற்படும்படியும் வடிவமைக்கப்பட்டன.

வரலாறு:

பண்டைய வரலாறு"வாள்கள்" எனக் கருதக்கூடிய ஆயுதங்கள் அல்லது கருவிகள் கி. மு 3300 அளவில் இருந்து கிடைக்கிறது. துருக்கியின் அர்சுலாந்தெப்பேயில் கிடைத்த வாட்கள் ஆர்செனிய வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. இவை 60 செமீ நீளங்கொண்டவையாக அமைந்தன.இவற்றில் சில வெள்ளியாலாகிய அகட்டுடன் அமைகின்றன.

காலங்கள்: 1.வெண்கல காலம், 2.இரும்பு காலம்.

உலக முழுவதும் போரின்பொழுதும், அரச விழாக்களின் பொழுதும் வாளுக்கு முதன்மை வாய்ந்த பங்குண்டு. தரைப்படையிலும் நாவாய்ப்படையிலும் விழாக்காலங்களிலும் அரசு முடிசூட்டு விழாவிலும் தேசிய சிறப்பு நாட்களிலும் கீழ்நிலையில் தொடங்கி, உயர்மட்ட அளவில் உள்ள போர்வீரர் வரை, பதவிக்கேற்ப சீருடை அணிந்து வாளேந்தி, அணிவகுப்புகளை மேற்கொள்வர்.

வாளின் வகைமையியல்:

ஒற்றை, இரட்டை விளிம்பின: மேலே விளக்கியது போல, நீள்வாள், அகல்வாள், பெருவாள், காயெலிக் கிளேமோர் வாள் என்பன காலகட்டத்தைச் சார்ந்து ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட வாளின் வகையைக் குறிப்பனவாகும்.

வாள்/ஜியான்: பெருபாலான ஆசிய நாடுகளில், வாள் (ஜியான் (jian) , ஜியோம் (geom.) (), கென் (ken)/சுருகி (tsurugi) (), பெடாங் (pedang)) என்பது இரட்டை விளிம்பு நேரலகு ஆயுதமாகும்; கத்தி அல்லது பட்டாக் கத்தி (தாவோ (dāo) , தோ (do) (), தோ (to)/கடானா (katana) (), பியாசு (pisau), கோலக் (golok)) ஒற்றை விளிம்பு வாளையே குறிப்பிடும்.

கிர்ப்பான்/காண்டா: சீக்கிய வரலாற்றில், வாளுக்கு உயர்வான மதிப்பு நிலவுகிறது. கிர்ப்பான் எனும் ஒற்றை விளிம்பு வாளும் காண்டா அல்லது தேகா எனும் இரட்டை விளிம்பு வாளும் பண்பாட்டுப் பெருமிதங்களாக கருதப்படுவனவாகும்.

சுரிகை வாள்: தென்னிந்தியாவின் சுரிகை வாள் இரட்டை விளிம்பு வாளாகும். இது கேரளாவின் மரபு வாளாகக் கருதப்படுகிறது. இந்து சமயத்தில் வாள் வேட்டைக் கடவுளாகிய வேட்டக்கொருமகன் ஆயுதமாக வணங்கப்படுகிறது.

பின்கூர்வாளும் பால்சியனும்: ஒற்றை, இரட்டை விளிம்பு வாட்களுக்கு தனி மரபுப் பெயர்கள் உண்டு என்றாலும் அனைத்தும் சேர்ந்து வாள் எனும் ஒருசொல்லாலேயே வழங்கப்படுகின்றன. எடுத்துகாட்டாக, பின்கூர்வாள் என்பது ஒற்றை விளிம்பு வாளாகும் என்றாலும் அதற்கு பால்சியன் எனும் சிறப்புப் பெயரும் உண்டு.

ஒருகை அல்லது இருகை பயன்பாடு: இருகை வாள், இத்தாலி, கி.பி 1623. இருகை வாளின் படிவம்:  இருகை வாள் என்பது அதைக் கையாள இருகைகளும் தேவைப்படும் வாளைக் குறிப்பிடும். என்றாலும் அதன் உண்மையான பொருளில் இது 16 ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்த மிகப் பெரிய வாளையே குறிக்கிறது.

வரலாறு முழுவதும் பொதுவாக இருகை வாளை விட ஒருகை வாளே வழக்கில் இருந்தது. இதற்கு ஒரே விதிவிலக்கு சப்பானில் இருக்கும்வாட்கள் பொதுவான வழக்கில் இருந்துள்ளன என்பதேயாகும்.

ஒன்றரைக் கைவாள்: ஒன்றரைக் கைவாள் என்பது கொச்சையாக "சோரன் வாள் (bastard sword)" எனப்படுகிறது; இது ஒரு அல்லது இருகையால் கையாளக்கூடியதாக அமைந்த நீண்ட கைப்பிடியமைந்த வாளாகும். இந்த வாட்கள் இருகையாலும் முழுமையாக பிடிக்கப்படாவிட்டாலும் இரண்டாம் கையில் கேடயமோ அல்லது சுருட்குத்து வாளோ உடனமைந்திருக்கும்; அல்லது ஓங்கி அடிக்க இருகைகளும் பயன்படலாம்.

இதை நீண்ட வாள் அல்லது இருகை வாள் அல்லது கட்டாயமாக இருகைகளால் கையாளும் வாளோடு குழப்பிக்கொள்ளக்கூடாது

உருமி:

உருமி என்பது பல சுருள் பட்டைகள் ஒரு கைபுடியில் இணைக்கப்பட்ட ஆயுதம் ஆகும். இது சங்க

காலத்திலிருந்தே இருந்ததாகக் கருதப்படுகிறது . உருமி என்ற பெயர் மலையாள மொழியிலிருந்து வந்ததாகும்.

இது ஒரு எஃகு சாட்டையாக கருதப்படுகிறது. எனவே இந்த ஆயுதம் மற்றும் வாள் பற்றிய முன் அறிவு தேவை. இந்த காரணத்திற்காககளரிபயட்டு போன்ற இந்திய தற்காப்பு கலைகளில் உருமி எப்போதும் கடைசியாக கற்பிக்கப்படுகிறது .

அமைப்பு: இதன் நீளம் தோராயமாக 122–168 செமீ (48–66 அங்குலம்) இருக்கும்.

பிளேடு முக்கால் முதல் ஒரு அங்குல அகலம் கொண்ட நெகிழ்வான முனைகள் கொண்ட எஃகு மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெறுமனே, கத்தியின் நீளம் 4 அடி முதல் 5.5 அடி வரை  கைத்தளத்தைப் போலவே இருக்க வேண்டும். பல கத்திகள் பெரும்பாலும் ஒரு கைப்பிடியுடன் இணைக்கப்படுகின்றன. இதில் 32 கத்திகள் வரை இருக்கலாம்.

மற்ற "மென்மையான" ஆயுதங்களைப் போலவே, உருமி வீரர்களும் ஒவ்வொரு ஊஞ்சலிலும் பிளேட்டின் வேகத்தைப் பின்பற்றவும் கட்டுப்படுத்தவும் கற்றுக்கொள்கிறார்கள், இதனால் நுட்பங்களில் சுழல் மற்றும் சுறுசுறுப்பான சூழ்ச்சிகள் அடங்கும். இந்த நீண்ட தூர சுழல்கள் பல எதிரிகளுக்கு எதிராக போராடுவதற்கு ஆயுதத்தை மிகவும் பொருத்தமானதாக ஆக்குகின்றன. பயன்பாட்டில் இல்லாதபோது, ​​உறுமியை இடுப்பில் பெல்ட் போல சுருட்டி அணிந்திருப்பார்கள், கைப்பிடியை அணிபவரின் பக்கத்தில் வழக்கமான வாள் போல இருக்கும். 

 

சேர , சோழ , பாண்டியர்களின் போர்களில் உருமி ஒரு தவிர்க்க முடியாத ஆயுதமாக இருந்துள்ளது.

மடுவு:

மடுவு, மரு அல்லது மடு என்பது மான் கொம்பால் உருவாக்கப்பட்ட ஒரு போர்க் கருவி ஆகும். இது தமிழர் தற்காப்புக் கலையில் பயன்படுத்தப்படும் ஒரு போர்க் கருவி ஆகும். தமிழர் தற்காப்புக் கலைகளான சிலம்பத்தில் பயன்படுத்தப்படும் பல ஆயுதங்களில் இதுவும் ஒன்று.

இந்த ஆயுதம் பொதுவாக இரண்டு கொம்புகளைக் கொண்டுள்ளது, அவை இரண்டு குறுக்குவெட்டுகளால் இணைக்கப்பட்ட எதிர் திசைகளில் சுட்டிக்காட்டுகின்றன, அவை ஒரு கைப்பிடியாகவும் செயல்படுகின்றன.  சிலம்பம் வல்லுநர்கள் இந்த ஆயுதத்தை தற்காப்பு அல்லது தாக்குதலுக்காக பல்வேறு முறைகளில் சிலம்பம் வீரர்களை வேலியிடும் எதிரிகளை எதிர்கொள்ள பயன்படுத்துகின்றனர்.  மடுவின் சண்டை எப்போதுமே சிலம்பம் வணக்கம் செலுத்தும் மரியாதையுடன் தொடங்குகிறது.  அதன் பிறகு மடுவு சண்டை தொடங்கும்.  வழக்கமாக, சிலம்பம் போராளிகள் மடுவை தாக்குதலை விட தற்காப்புக்காக பயன்படுத்த விரும்புவார்கள்,

 நுட்பம்: தரையிறங்கும் முறை என்பது மடுவு போராளிகளின் விருப்பமான தேர்வாகும், இதன் மூலம் மடுவை வைத்திருக்கும் நபர் தாக்குதலின் இடத்தைக் குறைக்கவும், ஒரே நேரத்தில் தாக்குதலுக்கு ஆளாகாமல் உடலைக் குறைக்கவும் எதிரியை விட தன்னைத் தாழ்த்திக் கொள்ள முயற்சிப்பார்.

நிலைப்பாடுகள்: மடுவுப் போரில் தவளைப் பாய்ச்சல், பாம்பு, எலி, புலி, யானை, கழுகு போன்ற விலங்குகளின் அசைவுகளின் அடிப்படையில் பல்வேறு நிலைப்பாடுகளும் நடைமுறைகளும் பயன்படுத்தப்பட்டன.

கால் பாடம்:

 சிலம்பம் மற்றும் களரி சண்டை பாணிகளில் பயன்படுத்தப்படும் கால்வேலைக்கு ஒத்ததாகும்.  காலடி வரிசை சிலம்பம் காலடியில் விவரிக்கப்பட்டுள்ள வீடு கட்டும் முறையில் செய்யப்படுகிறது.

மடுவு சல-வரிசை

மான் கொம்பின் பல்வேறு வடிவங்கள் அல்லது கட்டா இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பாணிகளுடன் உருவானது.  அசல் மான் கொம்பு அல்லது மடுவு சாலா-வரிசை இந்திய தற்காப்புக் கலைகளின் முன்னோடி வடிவமாகவும் அறியப்படுகிறது, இது பெரும்பாலும் கருப்பு பெல்ட் நிபுணர்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.  இந்த பாடத்தின் ஆரம்பம் பட்டப்படிப்பு முடிந்ததும் நடக்கும், அதைத் தொடர்ந்து "அரங்கேட்ரம்" என்று அழைக்கப்படும் கோவிலில் பாரம்பரிய சடங்குகள் நடக்கும்.  இந்த பட்டமளிப்பு விழாவிற்குப் பிறகு, பயிற்றுவிப்பாளர் குரு / ஆசன் தனது மாணவருக்கு சிலம்பம் தற்காப்புக் கலையின் அட்வான்ஸ் படிவத்தில் படிப்பை மேற்கொள்வார்.

வளரி(boomarang):

வளரி (Valari) என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கும், கால்நடைகளை திருடிச்செல்லும் திருடர்களைப் பிடிக்கவும் பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும்.

அமைப்பு: இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது.

பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்.

எறியப்படும் முறைகள்: வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.

பயன்: வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் சிவகங்கை, மற்றும் தற்போதைய பட்டுக்கோட்டைமதுரைஇராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன.

சிவகங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.

கள்ளர்கள்மறவர்கள் மற்றும் வலையர்கள் வேட்டையின் போது வளரியை பயன்படுத்தினார்கள். நாட்டார் கள்ளர்கள் திருமண சடங்கின் போது இருவீட்டார்களும், அவர்களின் பண்பாட்டின் அடையாளமாக வளரியை மாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள். வளரியை அனுப்பி மணமகளை அழைத்து வாருங்கள் “send the valari and bring the bride” என்று கூறியுள்ளார்கள்.

புதுக்கோட்டை மன்னர்கள் எப்போதும் தங்கள் ஆயுதக்கிடங்கில் வளரி ஆயுதங்களை இருப்பு வைத்திருந்தனர்.

- Imran
Recent Question Papers & Keys

Comments