Videos

Full View
cruds.institution.fields.id
Full View

நீச்சல்

 

நீச்சல் என்பது நீரினுள் எந்தவித கருவிகளும் இல்லாமல் பக்க உறுப்புகளின் அசைவின் மூலம் மிதந்து, நகரும் செயலாகும்.

பயன்கள்:

நீச்சல் பழக்கம் புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தருகிறது. குளிப்பதற்கும், மீன்பிடிப்பதற்கும், உடற்பயிற்சிக்கும் மற்றும் விளையாட்டாகவும் நீச்சல் பழக்கம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

- Imran
Full View

வரலாறு

வரலாற்றிற்கு முந்திய காலமான கற்காலம் தொட்டே நீச்சல் கலை மனிதர்களிடம் இருந்ததற்கான ஆதாரங்கள் 7000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் மூலம் காணக்கிடைக்கின்றன.

கில்கமெஷ் காப்பியம்,

இலியட்,

ஒடிசி,

விவிலியம்

போன்ற எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் 2000 கி.மு.விலிருந்து கிடைக்கின்றன.

1538ல் நிக்கோலஸ் வேமன் என்ற ஜெர்மனியரார் முதல் நீச்சல் புத்தகம் வெளியிடப்பட்டது.

1800களில் ஐரோப்பாவில் நீச்சல்கலையை விளையாட்டாக பயன்படுத்த தொடங்கினார்கள்.

1896ல் ஏதென்ஸ் நகரில் நடந்த முதலாம் கோடைகால ஒலிம்பிக் போட்டியில் நீச்சற் போட்டிகளும் சேர்க்கப்பட்டது. 1908ல் பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. பிற்காலத்தில் பல வடிவங்களில் நீச்சல் கலை மேம்படுத்தப்பட்டது

- Imran
Full View

நீச்சற் குளம்

நீச்சற் குளம் என்பது, தொட்டி போன்ற அமைப்புக்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள செயற்கைக் குளம் ஆகும். இது, நீச்சல் தொடர்பான போட்டி, பொழுதுபோக்கு, நீர்ப் பாய்ச்சல் அல்லது வேறு குளியல் தேவைகளுக்குப் பயன்படுகிறது

நீச்சற் குளங்கள் பல வடிவங்களில் உள்ளன. போட்டிகளுக்குப் பயன்படக்கூடிய நீச்சற் குளங்கள் பெரும்பாலும் செவ்வக வடிவம் கொண்டவை. போட்டிகளுக்கும், போட்டிகளுக்கான பயிற்சி அளிப்பதற்கும் பயன்படுவதனால் பாடசாலைகள், விளையாட்டுச் சங்கங்கள் போன்ற இடங்களில் காணப்படும் குளங்கள் செவ்வக வடிவம் உள்ளவையாகவே அமைக்கப்படுகின்றன. இவற்றின் நீள, அகலங்களும் குறிப்பிட்ட விதிகளுக்கு அமையவே இருப்பது வழக்கம். பொழுது போக்குத் தேவைகளுக்கான குளங்கள் பல வகையான வடிவங்களில் அமைக்கப்படுவது உண்டு. இத்தகைய குளங்களைத் தனியார் வீடுகளிலும், தங்கு விடுதிகளிலும் காண முடியும். இவ்வாறான நீச்சற் குளங்கள் பல இடங்களில் நிலத் தோற்ற வடிவமைப்பின் ஒரு பகுதியாகவே அமைவதுண்டு. இதனால் இவை செயற்பாட்டுத் தேவைகளை மட்டுமன்றிச் சூழலை அழகூட்டுவதற்கும் உதவுகின்றன.

- Imran
Full View

நீச்சற்போட்டி

நீச்சற்போட்டி என்பது பிற நீர் விளையாட்டுக்களான நீரில் பாய்தல், ஒருங்கிசைந்த நீச்சல் மற்றும் நீர் போலோ போன்றவற்றிலிருந்து வேறுபட்டது; அனைத்து நீர் விளையாட்டுக்களிலும் நீந்துவது தேவையாயிருப்பினும் நீச்சற்போட்டிகளில் குறிக்கோளாக வேகம் மற்றும் உடற்திறன் இவையே முதன்மையாக விளங்குகின்றன.

நீச்சற்போட்டிகள் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் அவை துவங்கிய 1896 முதல் இடம் பெற்று வருகின்றன. இதனை உலகளவில் பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு கட்டுப்படுத்தி வருகிறது. உடற்சக்தியைச் செலவழிக்கும் உடற்பயிற்சிகளில் நீச்சல் முதன்மை வகிப்பதாகக் கருதப்படுகிறது.

- Imran
Recent Question Papers & Keys

Comments