Full View
cruds.institution.fields.id
Full View

7 – 12 மாத குழந்தை வளர்ச்சி

முதல் பிறந்தநாள் நெருங்கும்போது குழந்தைகளின் வளர்ச்சி குறையத் தொடங்குகிறது. உங்கள் மருத்துவர் பிறந்ததிலிருந்து உங்கள் குழந்தையின் எடை, நீளம் மற்றும் தலையின் அளவு (சுற்றளவு) ஆகியவற்றை அளந்து அவற்றை வளர்ச்சி அட்டவணையில் வைத்துள்ளார். உங்கள் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் முதலில் பார்க்க வேண்டிய இடம் இதுதான். 

மருத்துவரிடம் வளர்ச்சி அட்டவணையைப் பார்க்கும்போது, ​​உங்கள் குழந்தையின் வளர்ச்சியை மற்ற குழந்தைகளின் வளர்ச்சியுடன் ஒப்பிடாமல், அவருடைய சொந்த வளர்ச்சியுடன் ஒப்பிடுங்கள். உங்கள் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும் வரை, பொதுவாக கவலைப்பட எந்த காரணமும் இல்லை.

  • எடை: ஒவ்வொரு மாதமும் சராசரியாக 0.5-1 பவுண்டு அதிகரிப்பு; 4 முதல் 5 மாதங்களில் இரண்டு மடங்கு பிறப்பு எடை மற்றும் 1 வருடத்தில் பிறப்பு எடை மூன்று மடங்கு
  • உயரம்: ஒவ்வொரு மாதமும் சராசரியாக ½ அங்குல வளர்ச்சி
  • தலை அளவு: ஒவ்வொரு மாதமும் சராசரியாக ¼ அங்குல வளர்ச்சி

 

Full View

குழந்தையின் வளர்ச்சி மைல்கற்கள் (7 - 9)

ஏழாவது மாதம்:

இதைப் பேசத் தொடங்கும் மாதம் என்றே சொல்லலாம்… ‘மா…’, ‘பா…’ போன்ற சப்தங்களை எழுப்புவதுடன், அழுகை, கோபம், மகிழ்ச்சி ஆகியவற்றை வெவ்வேறு சப்தங்கள் மூலம் வெளிப்படுத்தும். கைகளை ஊன்றி எழுந்து நிற்க முயற்சிக்கும். தானாகவே எழுந்து உட்கார்ந்தும் விடும். பெற்றோர் குழந்தைகளின் கைகளைப் பற்றி நிற்க வைத்தால் தள்ளாடியபடி நிற்கும். அத்துடன் சேர்த்து நடைப் பயிற்சியும் அளிக்கலாம். கண்ணாடியில், தன் முகத்தை அடையாளம் கண்டுகொள்ளத்தொடங்கும். ஒவ்வொரு முக உணர்வுகளை வெளிப்படுத்தித் தன்னைத் தானே பார்த்து மகிழும்.

எட்டாவது மாதம்:

விளையாட்டுப் பொம்மைகளுடன் நெருக்கமாக இருக்கும். எட்டாவது மாதத்தில், முன்பு இருந்ததை விடப் பேச்சில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். ‘மா’ என்று சொல்லிய குழந்தை ’மா… மா‘ என்றும், ‘பா… பா’ என்றும் தொடர்ச்சியாகப் பேசத்தொடங்கும். நெருங்கியவர், புதியவர்களைப் பிரித்து அடையாளம் காணத்தொடங்கும். புதிய நபர்களை அச்சத்துடன் அணுகும். விரலை வாயில் வைக்கும் பழக்கமும் ஏற்படத்தொடங்கியிருக்கும். தானாக எழுந்து உட்கார்ந்து, விளையாட்டுப் பொம்மைகளைத் தேடி எடுத்து அதனுடன் பேசுவது, விளையாடுவது என விதவிதமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்.

 

ஒன்பதாவது மாதம்:

ஒன்பதாவது மாதத்தில், உட்காரத் தொடங்கிய குழந்தை நகரத்தொடங்குகிறது. அத்துடன், எதாவது பிடிமானங்கள் கிடைத்தால் தானே எழுந்து நிற்கவும் செய்கிறது. காலில் போதுமான பலம் இருக்கும் குழந்தைகள் இந்தக் காலகட்டத்தில் நடந்துவிடும்.

பெரிய பொருட்கள் மட்டுமின்றி, சிறு சிறு பொருட்களையும் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலைப் பயன்படுத்திப் பிடித்துத் தூக்க முயற்சிக்கும். பூச்சிகளைப் பார்த்தால் நகர்ந்து துரத்த முயற்சிக்கும்.

தான் விளையாடிக்கொண்டிருந்த பொருள் காணாமல் போனால், அது இருக்கும் இடத்தைத் தேடி அலையத் தொடங்கும். பெற்றோரோ அல்லது யாராவது பார்த்தால், எதுவுமே செய்யாதது போல உட்கார்ந்து கொள்ளும்.

தேடிய பொருள் கிடைக்கவில்லை என்றால், அது கிடைக்காது என்பதையும் இந்தப் பருவத்தில் அதனால் உணர முடியும். பெரியவர்களின் செய்கையை உள்வாங்கி அதை அப்படியே செய்யும். பெரும்பாலும் தாயின் செய்கைகள் குழந்தைக்கு இந்தப் பருவத்தில் பழக்கப்படத் தொடங்கும்.

பிரிவை உணரும். தாயோ, தந்தையோ அல்லது குழந்தையைப் பார்த்துக்கொண்ட யாரோ ஒருவரோ, விட்டு விலகும்போது அவர்களின் பிரிவை நன்கு உணர்ந்து சோகத்தை வெளிப்படுத்தும். அவர்களைத் தன்னுடன் இருக்க வலியுறுத்தும்.

Full View

குழந்தையின் வளர்ச்சி மைல்கற்கள் (10 - 12)

பத்தாவது மாதம்:

பத்தாவது மாதத்தில், பழங்களைச் சாப்பிடக் கொடுக்கலாம். அதைச் செரிக்கும் அளவுக்கு ஜீரண மண்டலம் வளர்ச்சி அடைந்திருக்கும். உடல் வளர்ச்சியும் தொடக்க நிலை நிறைவுபெறும் நிலைக்குச் சென்றிருப்பதால், தானாகவே எழுந்து நிற்கும். எந்த பிடிமானமும் இல்லாமல் எழுந்து நிற்க முயற்சிக்கும். இதுவரை வழக்கமாக இருந்த சிரமங்களையெல்லாம் புரிந்துகொண்டு குழந்தை வலிக்கு வரும். அதன் புரிதல் திறன் அதிகமாகி இருக்கும். உதாரணமாகச் சாப்பிட வைப்பதற்கோ, குளிக்க வைப்பதற்கோ உங்கள் குழந்தை சிரமம் கொடுத்துக்கொண்டிருந்தால், அதை இனி ஆனந்தமாகச் செய்யத் தொடங்கியிருக்கும்.

நீங்கள் சொல்லும் பொருளை அடையாளம் காண முயற்சிக்கும். எதையாவது எடுக்கச் சொன்னால், அதை எடுக்க முயற்சிக்கும். அதன் எடை குறித்ததெல்லாம் யோசிக்காது!

நாம் கொடுக்கும் கட்டளைகளை நன்கு புரிந்துகொள்ளும். வெளியே கிளம்பும்போது ‘டாடா பைபை’ எனக் கையசைத்து விட்டுக் கிளம்பிப் பழக்கப்படுத்தினீர்கள் என்றால், அதை உடனே பிடித்துக்கொண்டு, தானே அடுத்தடுத்த முறை செய்யத்தொடங்கும். இனிமையான இசையை ஒலிக்கச் செய்தால், அதற்கேற்ப தன் உடலை அசைத்து அசைத்து ஆடும்.

பதினொன்றாவது மாதம்:

இந்தக் காலகட்டத்தில், கையில் எதாவது பொருட்களைப் பிடித்து எழுந்து நடக்க முயற்சிக்கும். சில குழந்தைகள் தானாகவே எழுந்து நிற்க முயற்சிக்கும். ஆனால் பெரும்பாலான குழந்தைகளால் இந்தப் பருவத்தில் நிற்கவோ நடக்கவோ முடியாது.

 உடல் முழுமையான வளர்ச்சி பெற்றிருக்காததால், ஏதேனும் பிடிமானத்தின் உதவியுடனோ பெற்றோரின் உதவியுடனோ மட்டுமே அதனால் நிற்க முடியும். ஜீரண மண்டலம் வளர்ச்சியடைந்திருப்பதால், எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளைச் சாப்பிடத் தொடங்கும்.

ஆனால், அதைக் காலை மற்றும் மதிய உணவாகக் கொடுப்பதே சிறந்தது. ஏனென்றால் பகலில் விளையாடுவதால் அவை செரிமானமாக எளிதாக இருக்கும்.

பன்னிரண்டாவது மாதம்:

ஒரு வயதில், பிறந்தபோது இருந்த மூளையின் அளவு இரண்டு மடங்காக வளர்ச்சி பெற்றிருக்கும். அப்போது தானாகவே எழுந்து நிற்கத் தொடங்கியிருக்கும். ஒன்றிரண்டு அடிகள் முன் எடுத்து வைக்க முயற்சிக்கும். சாதாரணமாக நடக்க முடியாது. நிறையக் குழந்தைகள் சராசரியாக 14வது மாதத்தில்தான் தானாகவே நடக்கத் தொடங்குகின்றன.

கை தட்டுதல் மூலம் சப்தம் எழுப்பினாலோ, அல்லது கையசைத்தாலோ மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். பெற்றோரின் கவனத்தை ஈர்க்க, ‘மா…மா’ என்றோ அல்லது ஏதாவது சப்தம் எழுப்பியோ கவனத்தை ஈர்க்கும். கவனம் விலகினால், மீண்டும் ஈர்க்க முயற்சிக்கும். ஒரு பொருளை எடுத்த இடத்தில் வைக்க முயற்சிக்கும். உதாரணமாகப் பெரியவர்கள் காபி குடிப்பதைப் பார்த்துப் பழகிய குழந்தை, விளையாட்டுப் பொருட்களில் கப் அண்டு சாசர் இருந்தால், அதை எடுத்து அவர்களைப் போலவே குடிக்க முயன்று, மீண்டும் சரியாகச் சாசரில் வைக்கும்.

மற்ற உணவுகளைச் சாப்பிட்டாலும், ஒரு வயது வரை எந்த காரணத்துக்காகவும் தாய்ப்பாலை நிறுத்தவே கூடாது. வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்துமே தாய்ப்பாலிலிருந்துதான் கிடைக்கின்றன. அதனால் மட்டுமே நோய்ப் பாதிப்பிலிருந்து தப்பி, குழந்தை பாதுகாப்பாக வளர்கிறது.

Full View

குழந்தைகளின் பற்களின் வளர்ச்சி

தாயின் வயிற்றிலே தோன்றிவிடும் நிரந்தர பற்கள், பின் குழந்தையாக வெளிவந்ததும் 3 அல்லது 6 மாதங்களில் பற்கள் வெளியே முளைத்து வரத் தொடங்குகின்றன. குழந்தைகள் தாயின் வயிற்றில் கருவாக இருக்கையிலே 6-8வது வாரத்திலேயே பால் பற்கள் தோன்றி விடுகின்றன. கருவில் 14-வது வாரம் நிறைவடையும்போது, ஈறுகளும் பால் பற்களும் குழந்தைகளின் உடலுக்குள் தோன்றிவிடும். அதுபோல 20-வது வாரத்திலே நிரந்திரப் பற்களும் உருவாகின்றன. இப்படி 20-வது வாரத்துக்குள் குழந்தையின் உடலில் பற்கள் தோன்றவில்லை என்றால், அந்தக் குழந்தைகளுக்கு பல் முளைக்கும் வாய்ப்புகள் இல்லை.

பற்கள் முளைத்தல் என்பது உங்கள் குழந்தையின் முதல் வரிசைப் பற்கள் (பாற்பற்கள்) தெரியத் தொடங்குவதாகும். உங்கள் குழந்தையின் பற்களைப் பராமரித்தல், உங்கள் குழந்தையின் ஈறுகளினூடாக முதற்பல் வெளியே எட்டிப்பார்த்தவுடனேயே தொடங்குகிறது. ஆரோக்கியமான பற்கள், உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை முழுமையாக்குகின்றன.

பெரும்பாலும் முதற் பல் ஏறக்குறைய 6 மாதங்களில் தோன்றும். ஒவ்வொரு பிள்ளைக்கும் வித்தியாசமான காலகட்டத்தில் பல் வளரும். ஆயினும், உங்கள் பிள்ளைக்குப் பல் மிக விரைவாக 3 மாதங்களில் அல்லது மிகவும் தாமதமாகப் 12 மாதங்களில் தோன்றினாலும் கவலைப்படவேண்டாம்.

பெரும்பாலும், இரண்டு கீழ் முன் பற்கள்( கீழ் நடு வெட்டும்பற்கள்) தான் முதலில் தோன்றுபவை. இவற்றைத் தொடர்ந்து இரண்டு மேல் முன் பற்கள்( மேல் நடு வெட்டும்பற்கள்) தோன்றும். பெரும்பாலான பிள்ளைகளுக்கு 3 வயதாகும்போது 20 ஆரம்ப நிலைப் பற்களும் (அல்லது பாற்பற்கள்) இருக்கும். 5க்கும் 13 க்கும் இடைப்பட்ட வயதுகளில், நிரந்தரமான பற்களுக்கு இடமளிப்பதற்காக உங்கள் பிள்ளை ஆரம்ப நிலைப் பற்களை இழப்பாள்.

முக்கிய குறிப்புகள்:

  • உங்கள் குழந்தையின் பற்களைப் பராமரித்தல், உங்கள் குழந்தையின் ஈறுகளினூடாக முதற்பல் வெளியே எட்டிப்பார்த்தவுடனேயே தொடங்குகிறது.
  • ஆரோக்கியமான பற்கள், உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு முக்கியமான பங்கை வகிக்கிறது
  • உங்கள் குழந்தையின் வலிக்கு அசெட்டமினோஃபென் அல்லது ஐபியூபரோஃபின் மருந்துகளால் சிகிச்சை செய்யவும். ஒரு மருத்துவருடன் முதலில் ஆலோசிக்காது ASA மருந்தை ஒருபோதும் கொடுக்கவேண்டாம்.
  • ஒரு குளிர்ச்சியூட்டப்பட்ட துடைக்கும் துணியால் உங்கள் குழந்தையின் ஈறுகளைத் துடைப்பதன் மூலம் அல்லது ரப்பரினால் செய்யப்பட்ட டீத்திங் ரிங்கை உபயோகிப்பதன் மூலம் அவளது ஈறுகளின் வலியைத் தணிக்கலாம்.
  • பழச்சாறு மற்றும் சோடா போன்ற சீனி சேர்க்கப்பட்ட பானங்கள் பற்சிதைவை ஏற்படுத்தும். இந்த வகையான பானங்களை உங்கள் குழந்தை உட்கொள்வதை மட்டுப்படுத்தவும். மற்றும் அவள் ஒரு புட்டியுடன் படுக்கைக்குப் போவதை ஒருபோதும் அனுமதிக்கவேண்டாம்.
Full View

ஆரோக்கிய உணவு

அமெரிக்கர்களுக்கான உணவு வழிகாட்டுதல்கள் மற்றும் அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் ஆகியவை குழந்தைகளுக்கு 6 மாத வயது இருக்கும் போது தாய்ப்பாலைத் தவிர மற்ற உணவுகளை அறிமுகப்படுத்த பரிந்துரைக்கின்றன. 4 மாதங்களுக்கு முன் உணவுகளை அறிமுகப்படுத்துவது பரிந்துரைக்கப்படவில்லை. ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானது. உங்கள் குழந்தை தாய்ப்பாலைத் தவிர மற்ற உணவுகளுக்குத் தயாராக உள்ளதா என்று தெரிந்து திட உணவுகளை துவங்கவும் .

உங்கள் குழந்தை வளர்ச்சிக்கு தயாராக உள்ளது என்பதற்கான இந்த அறிகுறிகளை நீங்கள் பார்க்கலாம்.

  • தனியாக அல்லது ஆதரவுடன் அமர்ந்திருக்கும். 
  • தலை மற்றும் கழுத்தை கட்டுப்படுத்த முடியும்.
  • உணவு கொடுக்கும்போது வாயைத் திறக்கும்.
  • உணவை மீண்டும் கன்னத்தில் தள்ளுவதை விட விழுங்குகிறது.
  • பொருட்களை வாயில் கொண்டு வரும்.
  • பொம்மைகள் அல்லது உணவு போன்ற சிறிய பொருட்களைப் பிடிக்க முயற்சிக்கிறது.
  • விழுங்குவதற்காக உணவை நாக்கின் முன்பக்கத்திலிருந்து பின்பக்கத்திற்கு மாற்றுகிறது.

குழந்தைக்கு முதலில் என்ன உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டும்?

உங்கள் குழந்தை 6 மாத வயதில் திட உணவுகளை உண்ண ஆரம்பிக்கலாம். அவர் அல்லது அவள் 7 அல்லது 8 மாத வயதிற்குள், உங்கள் குழந்தை வெவ்வேறு உணவுக் குழுக்களின் பல்வேறு உணவுகளை உண்ணலாம். இந்த உணவுகளில் குழந்தை தானியங்கள், இறைச்சி அல்லது பிற புரதங்கள், பழங்கள், காய்கறிகள், தானியங்கள், தயிர் மற்றும் பாலாடைக்கட்டிகள் மற்றும் பல அடங்கும்.

குழந்தைக்கு உணவளிக்க உதவும் குறிப்புகள்:

  • குழந்தைக்கு உணவளிக்கத் தொடங்கும் முன்பே, பிப்கள், ஈரமான துடைப்பான்கள்/நாப்கின்கள், உணவுப் பாத்திரங்கள் மற்றும் கரண்டிகள் போன்ற அனைத்து உணவுப் பொருட்களையும் எப்போதும் கையில் வைத்திருக்கவும்.
  • குழந்தையை உயரமான நாற்காலி/குழந்தைக்கு உணவூட்டும் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார வைத்தால், எப்போதும் குழந்தையைப் பயன்படுத்துங்கள்
  • ஊட்டத்திற்கு இடையில் குழந்தையை கவனிக்காமல் விடாதீர்கள்
  • கொடுக்கப்படும் உணவை குழந்தை வெறுத்தால் சாப்பிடும்படி கட்டாயப்படுத்தாதீர்கள்
  • அளவுக்கு அதிகமாக உணவளிக்க வேண்டாம்
  • ஒரு நேரத்தில் ஒரு தானிய உணவை மட்டும் உண்ணுங்கள்
  • குழந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய உணவுகளுக்கு இடையில் குறைந்தது 3 நாட்கள் இடைவெளியை வைத்திருங்கள்
Full View

Activities to Encourage Speech and Language Development

  •  Say sounds like "ma," "da," and "ba." Try to get your baby to say them back to you.  
  • Look at your baby when they make sounds. Talk back to them, and say what they say. Pretend to have a conversation.
  • Respond when your baby laughs or makes faces. Make the same faces back to them.
  • Teach your baby to do what you do, like clapping your hands and playing peek-a-boo.
  • Talk to your baby as you give them a bath, feed them, and get them dressed. Talk about what you are doing and where you are going. Tell them who or what you will see.
  • Point out colors and shapes.
  • Count what you see.
  • Use gestures, like waving and pointing.
  • Talk about animal sounds. This helps your baby connect the sound and the animal. Use words like "The dog says woof-woof."
  • Add on to what your baby says. When your baby says, "Mama," say, "Here is Mama. Mama loves you. Where is baby? Here is a baby." 
  • Read to your child. You don't have to read every word but talk about the pictures. Choose books that are sturdy and have large colorful pictures. Ask your child, "What's this?" and try to get them to point to or name objects. 
Recent Question Papers & Keys

Comments