Videos

Full View
cruds.institution.fields.id
Full View

4 – 6 மாத குழந்தை வளர்ச்சி

ஒரு குழந்தை எதிர்பார்த்தபடி வளர்கிறதா என்பதை அறிய மருத்துவர்கள் மைல்கற்களைப் பயன்படுத்துகின்றனர். 4-மாத மற்றும் 6-மாத வளர்ச்சிக்கு இயல்பானதாகக் கருதப்படும் ஒரு பரவலான வரம்பு உள்ளது, எனவே சில குழந்தைகள் மற்றவர்களை விட முன்னதாகவோ அல்லது பிற்காலத்திலோ திறன்களைப் பெறுகிறார்கள். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் பின்னர் மைல்கற்களை அடையலாம். உங்கள் குழந்தையின் முன்னேற்றம் பற்றி எப்போதும் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள், குறிப்பாக கவலைகள் இருந்தால்.

எல்லா குழந்தைகளும் வெவ்வேறு விகிதத்தில் வளரக்கூடும், பின்வருபவை 4 முதல் 6 மாத வயதுடைய சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான சராசரியைக் குறிக்கிறது:

  • எடை: ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1 முதல் 1¼ பவுண்டுகள் அதிகரிப்பு; 4 முதல் 5 மாதங்களில் பிறப்பு எடை இரட்டிப்பாகும்
  • உயரம்: ஒவ்வொரு மாதமும் ½ முதல் 1 அங்குலம் வரை சராசரி வளர்ச்சி
  • தலை அளவு: ஒவ்வொரு மாதமும் சராசரியாக ½ அங்குல வளர்ச்சி
Full View

குழந்தையின் வளர்ச்சி மைல்கற்கள்

நான்காவது மாதம்:

உடல் ரீதியான வளர்ச்சி குறிப்பிட்ட அளவுக்கு எட்டியிருப்பதால், புரண்டு படுப்பது, நகர்ந்து செல்ல முயலுவது, இரண்டு கைகளையும் பயன்படுத்தி கண்ணில் படும் பொருட்களையெல்லாம் எடுக்க முயற்சிக்கும். கீழே படுத்திருக்கும்போது இரண்டு கால்களையும் பயன்படுத்தி உதைக்கும் வகையில் முன் பின் அசைக்கும். சில குழந்தைகள் புரண்டு படுக்கும்.

ஐந்தாவது மாதம்:

ஏறத்தாழ எல்லா குழந்தைகளுமே ஐந்தாவது மாதத்தில், புரண்டு படுத்து விடும். கை கால்களை அசைத்து நகரவும் தொடங்கும். நீச்சல் அடிப்பது போல எப்போதும் சுறுசுறுப்பாக கைகளையும் கால்களையும் அசைத்துக்கொண்டே இருக்கும். கைகளால் பிடிக்கக் கூடிய அளவுள்ள பொருட்களை எடுத்து விடும். பெயர் சொல்லிக் கூப்பிட்டால், திரும்பிப் பார்க்கும் அளவுக்கு நினைவில் வைத்துக்கொள்ளும். வழக்கமாகப் பார்க்கும் மனிதர்களுக்கும், புதிய மனிதர்களுக்குமான வித்தியாசத்தை உணர்ந்து கொள்ளும்.

குழந்தையிடம் பேச்சுக் கொடுப்பவர்களுக்குப் பதிலளிக்கக்கூடிய வகையிலான சப்தத்தை எழுப்பும். கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் வாயில் வைக்கத் தொடங்கும்.

ஆறாவது மாதம்:

ஆறாவது மாதத்தில், இதுவரை இருந்த உடல் வளர்ச்சி இருக்காது. எடை அதிகரிக்கும் வேகமும், உடல் வளர்ச்சி வேகமும் குறைந்திருக்கும். எப்படி தகவலைப் பகிர்வது என்று குழந்தை நன்கு தெரிந்து கொள்ளும். திட உணவுகளை ஜீரண உறுப்புகள் செரிக்கத் தொடங்கி விடும். சில குழந்தைகள், பெற்றோர் உதவியின்றி எழுந்து உட்கார முயலுவார்கள். இந்தக் காலகட்டத்திலும் குழந்தைகளின் தினசரி தூக்கம் சராசரியாக ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை இருக்கும்.

Recent Question Papers & Keys

Comments