Videos

Full View
cruds.institution.fields.id
Full View

விவசாயம்

இந்தியாவின் வேளாண்மை பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இன்று இந்தியா விளைநில உற்பத்தி பரப்பி உலகளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 2007ஆம் ஆண்டு தகவலின்படி இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பில், வேளாண் மற்றும் தொடர்புள்ள துறைகளான காடுவளம் மற்றும் மரவேலைகள் 16.6 சதவீதத்தைக் கொண்டிருந்தது. 60 சதவீதம் விவசாயமே கொண்டும், ஒட்டுமொத்த உள்நாட்டுத் தயாரிப்பில் தன்னுடைய பங்கில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டபோதிலும், இன்றுவரை அதிக பொருளாதாரத்தை ஈட்டும் துறையாக இருந்து இந்தியாவின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார வளர்ச்சியில் ஒரு பெரும்பங்கினை வகிக்கிறது.

இயற்கை நமக்கு நிலம், நீர், காற்று ஆகியவற்றை இயற்கை விவசாயம் செய்வதற்கு வழங்குகிறது. பயிர் வளர்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து நமக்கு கிடைக்கின்றது. இன்று மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் சத்தான உணவுப் பொருள்களையும் இயற்கை முறையில் விளைவிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.

தமிழ் மக்கள் பழங்கால வேளாண்மை தொழிலாக நெல், கரும்பு, சிறுதானியங்கள், மிளகு, பருப்புவகைகள், தென்னை, அவரை, பருத்தி, வாழை, புளி, சந்தணம் போன்றவை தான் விலை விலங்களில் பயிர் செய்து வந்தார்கள். முதன்மை பயிராக பல வகை நெற்பயிர்களாக நடவு செய்தனார்.

குழந்தைகளுக்கு விவசாயம் செய்யக் கற்றுக்கொடுப்பதும், காடுகளை அறிமுகப்படுத்துவதும்தான் இன்று நாம் வருங்கால தலைமுறையினருக்கு செய்யக்கூடிய மிகச்சிறந்த வழிகாட்டுதலாக இருக்கமுடியும்.

இந்தியாவில் வேளாண்மையின் இன்றைய நிலை

இந்தியாவில் இன்றைய தலையாயப் பிரச்சனை விவசாய விளை நிலங்களின் ஆக்கிரமிப்பு. விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வளர்ந்ததால் , இன்று வழி வழியாக விவசாயத் தொழிலையே கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்த பல குடும்பங்களின் வாரிசுகள் அதனை விட்டு வேளியே வரத் துணிந்ததோடு அவ் விளை நிலங்கள் இன்று குடியிருப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும் உரு மாறிக் கொண்டிருக்கின்றன. விவசாய நிலங்களின் அளவு 37.05 சதவீதமாக குறைந்துவிட்டது என்ற அபாயகரமான செய்தி தமிழக அரசின் 11வது ஐந்தாண்டு திட்டத்திற்கான அணுகுமுறை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

Full View

வீட்டுத் தோட்டம்

வீட்டிலேயே தோட்டம் அமைக்க, பரந்துவிரிந்த இடம் தேவையில்லை. பால்கனி அல்லது மொட்டைமாடிகூட போதும். அந்த இடமும் இல்லையென்பவர்கள், வெயில்படும் இடத்தில் தொங்கும் செடிகள் அமைப்பது, வீட்டின் கைப்பிடிச் சுவர்களில் சிறிய தொட்டிகள் அமைத்து பராமரிப்பது என நிறைய வழிகள் இருக்கின்றன. பழைய குடம், கேன், வாளிகள், டயர்கள் என எதில் வேண்டுமானாலும் செடிகளை வளர்க்க முடியும். இதுபோன்ற பழைய பொருள்களில் செடிகள் வளர்ப்பவர்கள், 1,000 ரூபாய் செலவில் தோட்டம் அமைக்க முடியும்.

தோட்டம் அமைக்கும் முறை :

10 தொட்டிகளுடன் அமைக்கும் ஒரு சிறிய தோட்டத்திற்கு விதைகளை வாங்க 100 ரூபாய் வரை செலவாகும்.

10 தொட்டிகளுக்கு 2 கிலோ தென்னங்கழிவு போதுமானதாக இருக்கும். அதற்கு 50 ரூபாய் ஒதுக்க வேண்டும்.

புது தோட்டம் அமைப்பவர்கள், பஞ்ச கவ்யாவை விலைக்கு வாங்கலாம். அதற்கு 100 ரூபாய் ஒதுக்க வேண்டும்.

உரங்கள் தயாரிக்க முடியாதவர்கள், 5 கிலோ உரம் விலைக்கு வாங்கி வைத்துக்கொள்ளலாம். அதற்கு 50 ரூபாய் வரை செலவாகும்.

பூவாளி வாங்க 100 ரூபாய் செலவாகும்.

வளமான மண் இல்லை என்பவர்கள், அருகில் உள்ள நர்சரிகளில் 10 தொட்டிகளுக்கு மண் வாங்கி, உங்கள் பகுதியில் உள்ள மண்ணுடன் கலந்துகொள்ளலாம். ஒரு கிலோ மண் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 10 கிலோ வாங்கினால் 600 ரூபாய் செலவாகும்.

இதில், உங்களிடம் இருக்கும் பொருளுக்கு ஏற்ப உங்கள் பட்ஜெட்டை மாற்றியும் அமைத்துக்கொள்ளலாம். ஆனால், அதில் சின்னச் சின்ன நுணுக்கமான விஷயங்களை கையாள வேண்டும். அந்தத் தகவல்களைப் பகிர்கிறார்கள் மாடித்தோட்ட விவசாயிகள் சிலர்.

உரம் தயாரிப்பு

வீட்டுத்தோட்டம் வைப்பவர்கள், இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சத்தான காய்கறிகளைப் பெறமுடியும். வீட்டில் கிடைக்கும் காய்கறிக்கழிவுகள், முட்டை ஓடுகள், டீத்தூள் போன்றவையும் உரங்களே. இதுதவிர ஆட்டுச்சாணம், சாம்பல், மாட்டுச்சாணம், மண் புழு உரம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். செடிகள் செழித்துவரும்போது பூச்சி தாக்காமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம். ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மில்லி லிட்டர் பஞ்சகவ்யா கலந்து, வாரம் ஒருமுறை செடிகளுக்கு ஸ்பிரே செய்யலாம். பஞ்சகவ்யா வாங்க அல்லது தயார் செய்ய முடியாதவர்கள் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து, தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம் அல்லது வேப்ப எண்ணையைத் தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யலாம்.

Full View

நம்மாழ்வாரும் இயற்கை வேளாண்மையும்

இயற்கை வேளாண்மை கட்டுரை தமிழகத்தில் பல  லட்சக் கணக்கான மக்களின் மனதில் இயற்கை விவசாயம் , இயற்கை வேளாண்மை என்று மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் .கரூர் வானகத்தின் வாயிலாக பலருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்தவர் திரு கோ. நம்மாழ்வார் அவர்கள் . இவர் இயற்கை விவசாயம்பற்றிக் அதிகம் களம் இறங்கி  கற்றுக்கொண்டது பாண்டிச்சேரி ஆரோவில்லில் இருக்கும் பெர்னார்டு என்ற ஒரு வெளிநாட்டு இயற்கை விவசாயி அவர்களிடம் தான் . நம்மாழ்வார் அவர்களுக்கு உலக விவசாயம் மற்றும் மேற்கத்திய நாடுகளின் அதிகம் பயன் படுத்தும் விவசாய முறைகள்மற்றும் அது பற்றிய அங்குள்ள இயற்கை விவசாயம்குறித்த நிறைய புத்தகங்களை நம்மாழ்வாருக்கு அறிமுகம்செய்து வைத்தவரும் இவரே.

நம்மாழ்வார் அவர்கள் இயற்கை வேளாண் விஞ்ஞானி மட்டும் அல்ல. மிகச் சிறந்த சுற்றுச்சூழலியலாளர் . மேற்குத்தொடர்ச்சி மலையில் இருக்கும் சோலைக்காடுகள் அழிவை எதிர்த்துக் கடைசி வரை போராடினார். அதற்கான காரணமாக அவர் கூறியவை சோலைக்காடுகள் இல்லை எனில், ஆறுகள் உற்பத்தி கிடையாது, மனிதனுக்குச் சோறு இல்லை என்பதைத் தனது பிரச்சாரங்களில் வலியுறுத்திவந்தார். அனைத்து கலந்துரையாடல்களிலும் , அனைத்து கருத்தரங்குகளிலும்   “ நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு “ இந்த வசனத்தைப் பேசத்தவறியதே இல்லை நம்மாழ்வார்.

தமிழ் பெரும்பாலும் பாமரத் தமிழ்தான் இருக்கும் .இருப்பினும் , தமிழ் ,ஆங்கில இலக்கியம் வரை அவருக்குப் பரிச்சயம். பெரியாரியம் தொடங்கி மார்க்சியம் வரைக்கும் அறிந்தவர். ஒரு  பாமரனுக்கு தமிழில் சொன்னால்தானே ஏழை விவசாயிக்குப் புரியும் அவனிடம் ஆங்கிலத்தில் சொன்னால் என்ன புரியும் என்பார்.

இயற்கை வாழ்வியல் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் மிக அதிகமான ஈடுபாடு கொண்டவர் .கடந்த மூன்று ஆண்டுகளாக அக்குபஞ்சர் மருத்துவத்தில் ஆர்வம்காட்டினார். அதில் நிறையக் கற்றுக்கொள்ள மிகுந்த ஈடுபாடு காரணமாக கற்று கொண்டும் இருந்தார் .

திரு.நம்மாழ்வார் அவர்களுக்கு மிக  நல்ல குரல் வளம். வயலில் விவசாய வேலைக்கு  என்று இறங்கிவிட்டால் பாட்டு தானாக வந்துவிடும். அதிலும் பட்டுக்கோட்டையாரின் தத்துவப் பாடல்கள், பாரதியின் ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?’ போன்ற பாடல்கள் மிக அதிகமுறை ராகமிட்டுப் பாடும் பாடல்கள் ஆகும் .

கோ.நம்மாழ்வார் படைப்புகள்  மற்றும் அவரை பற்றிய படைப்புகள் : 

 1. தாய் மண் (இயற்கை வழி உழவாண்மை பாடநூல்), வெளியீடு: வானகம்
 2. உழவுக்கும் உண்டு வரலாறு (நூல்) விகடன் வெளியீடு
 3. தாய் மண்ணே வணக்கம் (நூல்) நவீன வேளாண்மை வெளியீடு
 4. நெல்லைக் காப்போம்
 5. வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இயல்வாகை வெளியீடு
 6. இனி விதைகளே பேராயுதம், இயல்வாகை வெளியீடு
 7. நோயினைக் கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
 8. எந்நாடுடையே இயற்கையே போற்றி, விகடன் வெளியீடு
 9. பூமித்தாயே, இயல்வாகை வெளியீடு
 10. நோயினை கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
 11. மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் (நூல்) வாகை வெளியீடு
 12. களை எடு கிழக்கு பதிப்பகம்

அவற்றுள் சிலவற்றை FOOTER LINK ல் பெற்றுக்கொள்ளவும்

 

 

Recent Question Papers & Keys

Comments