Videos

Full View
cruds.institution.fields.id
Full View

ஒன்றாம் வகுப்பு கணக்கு

ஒன்றாம் வகுப்பு கணக்கு பாடம் மொத்தம் மூன்று பருவங்களாக பிரிக்க பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பருவத்திலும் நான்கு முதல் ஐந்து அலகுகள் உள்ளன. ஒவ்வொரு பருவத்திலும் வடிவியல், எண்கள், பணம், காலம், அளவைகள் என அலகுகள் பிரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் படங்களுடன் கூடிய எடுத்துக்காட்டுகள் மற்றும் குழந்தைகளையும் ஈடுபடுத்தும் செயல்முறைகள் போன்று வடிவமைக்க பட்டுள்ளது.

Full View

பருவம்-1: அலகு-1: வடிவியல், வடிவம்

இந்த இயல் வடிவியல் ஒப்பீடுகள் அதாவது மேல்- கீழ், உள்ளே- வெளியே, பெரியது- சிறியது, என்னும் கற்றல்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறது. மேலும் வடிவங்களையும் அதன் பண்புகளையும் விளக்குகிறது.

Full View

பருவம்-1: அலகு- 2: எண்கள் 1 ல் இருந்து 9, கூட்டல், கழித்தல், பூச்சியம்

இந்த இயல் குழந்தைகளுக்கு 1 ல் இருந்து 9 வரையிலான எண்களை அறிமுகப்படுத்துகிறது. பொருட்களின் எண்ணிக்கைகளை அறியவும் கற்றுத்தருகிறது. எண்களை கண்டறிந்து எழுதவும், வாசிக்கவும் ஏற்றவாறு இயல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டல், கழித்தல் ஆகியவைகளை அறிமுகம் செய்கிறது

Full View

பருவம்-1: அலகு- 3: ஒலியின் அமைப்புகள், வண்ணங்களின் அமைப்புகள்

இந்த பாடத்தில் குழந்தைகளுக்கு ஒலியின் அமைப்புகள் மற்றும் வண்ணங்களின் அமைப்புகள் பற்றி கொடுக்க பட்டுள்ளன. பாடல்கள் மூலமும் தன் சுற்றுப்புற சூழலை உற்று கவனித்தல் மூலமும் எவ்வாறு ஒலிகளை கண்டறிய வேண்டும் என்பதை விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. வண்ணங்கள் கொண்ட படங்களை பார்த்தும் மற்றும் வண்ணங்கள் தீட்டியும் குழந்தைகள் வண்ணங்களின் அமைப்பை அறிய ஏதுவாக கொடுக்கப்பட்டுள்ளது இந்த இயல்.

Full View

பருவம்-1: அலகு- 4: முறையான பட்டியல், தகவல்களை ஒழுங்கமைத்தல்

தகவல் செயலாக்கம் : பொருட்களின் எண்ணிக்கையை கண்டறிதல், கொடுக்கப்பட்டுள்ள படங்களை சரியாக எண்ணி பட்டியலிட உதவும் வண்ணம் இந்த இயல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை முறையாக பிரித்து, ஒழுங்கமைத்து பட்டியயலிடுதல். அதாவது கொடுக்கப்பட்டுள்ள படங்களில் நம் உறவினர்கள், போக்குவரத்துக்கு சாதனங்கள், நீர்நிலைகள் என பிரித்து ஒழுங்கமைத்தல் போன்றவைகள் கற்றுத்தர ஏதுவாக இந்த இயல் அமைந்துள்ளது.

Full View

பருவம்-2: அலகு-1: அடிப்பைட வடிவங்கள், நேர்கோடுகள்

இந்த இயலில் அடிப்படை வடிவங்கள் மற்றும் எ தன் பண்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் தாங்களாகவே போட்ருட்களை தொட்டு பார்த்து அதன் வடிவங்களை கேந்திரிய ஏதுவாக விவரிக்கப்பட்டுள்ளது.

Full View

பருவம்-2: அலகு- 2: எண் 10, எண்கள் 11 முதல் 20 வைர, கூட்டல் (20 - க்கு மிகாமல் )

இதில் ௦ முதல் 9 வரை எங்களை நினைவு கூர்ந்து மேலும் எண் 10 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 11 ல் இருந்து 20 வரையான எண்களை கண்டறிந்து எழுதவும் வாசிக்கவும் ஏற்றவாறு இயல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டல், கழித்தல் ஆகியவைகளை 20 - க்கு மிகாமல் அறிமுகம் செய்கிறது.

Full View

பருவம்-2: அலகு- 3: வடிவங்களில் அமைப்புகள், உடல் அசைவுகளில் அமைப்புகள், எண்களில் அமைப்புகள்:

இந்த பாடத்தில் குழந்தைகளுக்கு வடிவங்களின் அமைப்புகள் உடலின் அசைவுகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை வடிவங்களை கொண்டு உருவங்களை உருவாக்குதல் மற்றும் உடல் அசைவுகள் கொண்டு உடல் பயிற்சி செய்தல் போன்றவைகள் கொடுக்கப்பட்டுள்ளது .

Full View

பருவம்-2: அலகு- 4: ஒப்பீடுகள் , அளவீடுகள்

வடிவங்களின் பண்புகளை கொண்டு அதனை ஒப்பீடு செய்யும் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீளமானது-குட்டையானது, தடிமனானது-மெல்லியது, உயரமானது-குட்டையானது, கனமானது-இலேசானது, அதிகம்-குறைவு.

Full View

பருவம்-3: அலகு- 1: வடிவியல்

இந்த இயலில் முந்தைய பாடங்களுக்கான நினைவு கூரல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வடிவத்தை வைத்து அதன் பொருள்களை கண்டறிய கற்றல் பகுதி கொடுக்கப்பட்டுள்ளது.

Recent Question Papers & Keys

Comments