Full View
cruds.institution.fields.id
Full View

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் (Social Science)

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் மொத்தம் 27 அலகுகள் உள்ளன. இவை வரலாறு (History), புவியியல் (Geography),  குடிமையியல் (Civics) மற்றும் பொருளியல் (Economics) என நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அலகிலும் (Unit), கற்றலின் நோக்கங்கள் (Learning Objectives), அறிமுகம் (Introduction), விரைவுக் குறியீடு (QR Code), உங்களுக்குத் தெரியுமா? (Do You Know?), விளக்கப்படம் (Infographs), செயல்பாடுகள் (Activities), பாடச்சுருக்கம் (Summary), பயிற்சி (Exercise), கலைச்சொற்கள் (Glossary), விரிவான தகவல்கள் (Reference) மற்றும் இணையச் செயல்பாடு (ICT Corner) என்ற வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அலகை பற்றியும் பின்வரும் பகுதிகளில் காணலாம்.

- WTS Team
Full View

வரலாறு 1. முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் (History 1. Outbreak of World War I and Its Aftermath)

இந்த அலகு ஐரோப்பிய வல்லுரசுகளிடையே பகைமையும் மோதல்களும் ஏற்படுவதற்கு இட்டுச் சென்ற காலனியாதிக்கப் போட்டிகள் பற்றி விவரிக்கிறது. கிழக்கு ஆசியாவில் ஐப்பான் அதிக வலிமை மிகுந்த நாடாகவும் ஆக்கிரமிப்பு செய்யும் தன்மை கொண்ட நாடாக மேலெழும்புவதைப் பற்றி விளக்குகிறது. காலனியாதிக்கம் ஆப்பிரிக்காவின் மீது தாக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் முதல் உலகப்போருக்கான காரணங்கள், போரின் போக்கு, விளைவுகள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையும் அதன் சரத்துகளும், ரஷ்யப் புரட்சிக்கான காரணங்களும் அதன் போக்கும் விளைவுகளும் மற்றும் பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுதலும் அதன் செயல்பாடுகளும் தோல்வியும் பற்றி இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளன.

            This unit gives details about the race for colonies leading to rivalry and clashes among the great powers of Europe. Then explains about emergence of Japan as the strongest and most aggressive power in East Asia. Colonialism’s impact on Africa and Causes, course and results of the First World War are elaborated. Also Treaty of Versailles and its provisions, Causes, course and outcome of the Russian Revolution and Foundation, functioning and failure of the League of Nations are explained in this unit.

Full View

வரலாறு 2. இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் (History 2. The World between Two World Wars)

    இந்த அலகு முதல் உலகப்போருக்குப் பிந்தைய நிகழ்வுகள் பொருளாதாரப் பெருமந்தத்திற்கு இட்டுச் சென்றதைப் பற்றி விவரிக்கிறது. தோல்வியடைந்த நாடுகளின் மீது திணிக்கப்பட்ட, நீதிக்குப் புறம்பான வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துகள் மற்றும் இத்தாலியில் முசோலினியின் தலைமையிலும், ஜெர்மனியில் ஹிட்லரின் தலைமையிலும் பாசிச அரசுகள் எழுச்சி பெறுதலையும் விளக்குகிறது. காலனிகளாக்கப்பட்ட உலகில் காலனிய எதிர்ப்புப் போராட்டங்களும், காலனிய நீக்கச் செயல்பாடுகளும், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளாக தென்கிழக்காசியாவில் இந்தோ-பிரான்சும், தெற்காசியாவில் இந்தியாவும் பற்றி இப்பாடம் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆப்பிரிக்காவில் ஐரோப்பியக்காலனிகள் உருவாக்கப்படுதல், அவ்வகையில் தென்னாப்பிரிக்காவில் இங்கிலாந்து காலனிகளை ஏற்படுத்துதல் மற்றும் தென் அமெரிக்காவில் விடுதலைப் போராட்டங்களும் அரசியல் வளர்ச்சிகள் பற்றியும் இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளன. 

            This unit gives details about the post-World War I developments leading to the Great Depression. Then explains about the unjust provisions of Treaty of Versailles and the rise of fascist governments led by Mussolini in Italy and Hitler in Germany. Anti-colonial struggles and the decolonisation process in the colonized world: Case Studies of Indo-French in South-East Asia and India in South Asia are elaborated in this lesson. Also European Colonisation in Africa – The case of Britain in South Africa, Independence struggles and political developments in South America are explained in this unit.

Full View

வரலாறு 3. இரண்டாம் உலகப்போர் (History 3. World War II)

    இந்த அலகு முதல் உலகப்போருக்குப் பிந்தைய அரசியல், பொருளாதார வளர்ச்சிகளை அறிமுகப்படுத்தி இறுதியில் இரண்டாம் உலகப்போருக்கு இட்டுச் சென்றதைப் பற்றி விவரிக்கிறது. பொதுவாகப் போரின் போக்கு மற்றும் குறிப்பாகப் போரின் திருப்புமுனைகளாய் அமைந்த முக்கிய நிகழ்வுகளை விளக்குகிறது. இரண்டாம் உலகப் போரின் விளைவுகள், பேரழிவு மற்றும் நாசிச ஜெர்மனியில் யூதர்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டத்தையும் பற்றி இப்பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஒரு புதிய பன்னாட்டு அமைப்பு முறையை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் குறித்த அறிவைப் பற்றியும் இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளன. 

            This unit gives details about to acquaint ourselves about the political and economic developments after World War I which ultimately led to World War II. Then explains about to understand the course of the War, in general; in particular, to learn the main events which were turning points in the War.  Effects of World War II, holocaust, and the mass killing of Jews in Nazi are elaborated in this lesson. Also knowledge about the international organisations established after the World War II are explained in this unit.

Full View

வரலாறு 4. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் (History 4. The World after World War II)

    இந்த அலகு சீனாவின் பொதுவுடைமைப் புரட்சி பற்றி விவரிக்கிறது. பனிப்போரையும் அணிசேரா இயக்கத்தையும் பற்றி விளக்குகிறது. கொரியப் போர், கியூபாவின் ஏவுகணைச் சிக்கல், இஸ்ரேலியப் போர் மற்றும் வியட்நாம் போர் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் ஐரோப்பியப் பொருளாதாரக் குழுமம், ஐரோப்பிய ஒருங்கிணைப்பு மற்றும் பெர்லின் சுவர் வீழ்ச்சியும் பனிப்போர் யுகமுடிவும் பற்றி இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளன. 

            This unit gives details about the Communist Revolution in China. Then explains about Cold War and the Non-Aligned Movement. Korean War, the Cuban Missile Crisis, Arab–Israeli Wars and Vietnam War are elaborated. Also European Economic Community, European Union, Fall of Berlin Wall and the End of Cold War Era are explained in this unit.

Full View

வரலாறு 5. 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்(History 5. Social and Religious Reform Movements in the 19th Century)

    இந்த அலகு 19ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் புதிய விழிப்புணர்ச்சியை உருவாக்கியத்தில் மேற்கத்தியச் சிந்தனைகள் மற்றும் கிறித்தவ மதத்தின் செல்வாக்கு பற்றி விவரிக்கிறது. பின்னர் சமுதாய மற்றும் சமயத்துறையில் ஏற்பட்ட போட்டிகள், உடன்கட்டை ஏறுதல்(சதி), அடிமை முறை, தீண்டாமை, குழந்தைத்திருமணம் போன்ற பழக்கங்களுக்கான எதிர்ப்பைப் பற்றி விளக்குகிறது. உருவ வழிபாடு, சடங்குகள், மூடநம்பிக்கைகள் ஆகியனவற்றிற்கு எதிர்ப்பு, இந்தியா புத்துயிர் பெற்றதில் பிரம்ம சமாஜம், இராமகிருஷ்ணா மிஷன், பிரம்மஞானசபை, அலிகார் இயக்கம் ஆகியவற்றின் பங்களிப்பு போன்றவை விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் பார்சிகள், சீக்கியர்கள் ஆகிய சமூகங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் முக்கிய ஆளுமைகளின் பங்கு, ஜோதிபா பூலேயின் சமூக இயக்கமும், கேரளா, தமிழ்நாட்டில் தோன்றிய சீர்திருத்த இயக்கங்களும் பற்றி இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளன. 

            This unit gives details about the influence of Western ideas and Christianity in creating a new awakening in 19th century British India. Then explains about Contestation in the social and religious sphere – opposition to practices like sati, slavery, untouchability, and child marriage. Opposition to idolatry, rituals and superstitious beliefs, Contribution of Brahmo Samaj, Arya Samaj, Ramakrishna Mission, Theosophical Society and Aligarh Movement to the regeneration of India are elaborated. Also Role played by prominent personalities in bringing about this awakening amongst Parsees and Sikhs, Social movement of Jyotiba Phule and reform movements in Kerala and Tamilnadu are explained in this unit.

Full View

வரலாறு 6. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் (History 6. Early Revolts against British Rule in Tamil Nadu)

    இந்த அலகு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் பற்றி விவரிக்கிறது. பாளையக்காரர் அமைப்பையும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான பாளையக்காரர்களின் புரட்சியையும் விளக்குகிறது. வேலுநாச்சியார், பூலித்தேவர், கட்டபொம்மன், மருது சசோதரர்கள் போன்றோரின் ஆங்கிலேய எதிர்ப்புக் கிளர்ச்சிகள் பற்றி இப்பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் தென்னிந்தியாவில் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு பதிலடியாக அமைந்த வேலூர் புரட்சி பற்றியும் இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளது. 

           This unit gives details about Early Revolts against British Rule in Tamil Nadu. Then explains about Palayakkarar system and the revolts of Palayakkarars against the British. Velunachiyar, Puli Thevar, Kattabomman and Marudhu Brothers in the anti-British uprisings are elaborated in this lesson. Also Vellore Revolt as a response to British pacification of south India are explained in this unit.

Full View

வரலாறு 7. காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் (History 7. Anti-Colonial Movements and the Birth of Nationalism)

    இந்த அலகு ஆங்கிலேயருக்கு எதிரான பழங்குடியினர் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களின் தன்மைப் பற்றி விவரிக்கிறது. 1857இல் பெரும்கலகம் வெடிப்பதற்கான காரணிகளும் அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர் இந்தியாவை ஆளும் தங்கள் அணுகுமுறையில் ஏற்படுத்திக் கொண்ட மாற்றங்களும் பற்றி விளக்குகிறது. இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கத்துக்கான காரணிகளும் தொடக்ககால தேசியவாதிகளின் கண்ணோட்டமும் பற்றி இப்பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் 1905இல் வங்கப்பிரிவினைக்கு பின்னாலிருந்த ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கையும் வங்காளத்தில் சுதேசி இயக்கத்தின் தோற்றமும், தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கத் தோற்றத்துக்கானப் பின்னணி பற்றியும் இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளன. 

            This unit gives details about the nature of tribal and peasant revolts against the British. Then explains about Contributory factors for the outbreak of the Great Rebellion of 1857 and the subsequent changes in the British approach to governing India. Factors leading to the formation of the Indian National Congress and the perspectives of the early nationalists are elaborated in this lesson. Also Divide and rule policy of the British behind the Partition of Bengal (1905) and the launch of Swadeshi movement in Bengal and Background for the launch of Home Rule Movement are explained in this unit.

Full View

வரலாறு 8. தேசியம்: காந்திய காலகட்டம் (History 8. Nationalism: Gandhian Phase)

    இந்த அலகு இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்திய காலகட்டம் பற்றி விவரிக்கிறது. இந்தியாவில் மக்களை ஒன்றிணைக்க அகிம்சை மற்றும் சத்தியாகிரகம் ஆகிய காந்தியக் கொள்கைகள் பயன்படுத்தப்பட்டு சோதிக்கப்பட்ட காலகட்டம், சம்பிரான் மற்றும் ரௌலட் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான வன்முறையற்ற போராட்டங்கள், ஒத்துழையாமை இயக்கம் மற்றும் அதன் வீழ்ச்சி பற்றியும் விளக்குகிறது. தீவிரத்தன்மை கொண்டவர்களும் தீவிர தேசியவாதப் போக்கு உடையவர்களின் தோற்றமும் விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் ஆற்றிய பங்கும், சட்டமறுப்பு இயக்கத்தின் தொடக்கம், தனித்தொகுதிகள் குறித்த சர்ச்சை மற்றும் பூனா ஒப்பந்தம் கையெழுத்திட்டதைப் பற்றி இப்பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் மாகாணங்களில் முதலாவதாக அமைந்த காங்கிரஸ் அமைச்சரவைகள் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தோன்றுவதற்கான சூழ்நிலைகள் மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தை இந்தியா-பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிவினை செய்ய வழிவகுத்த வகுப்புவாதம் பற்றியும் இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளன. 

            This unit gives details about Gandhian phase of India’s struggle for independence. Then explains about Gandhi’s policy of ahimsa and satyagraha tried and tested for mobilisation of the masses in India, Non-violent struggles in Champaran and against the Rowlatt Act, The Non-Cooperation Movement and its fallout. Emergence of radicals and revolutionaries and their part in the freedom movement, Launch of Civil Disobedience Movement, Issue of separate electorate and the signing of Poona Pact are elaborated in this lesson. Also First Congress Ministries in the provinces and circumstances leading to the launch of Quit India Movement, Communalism leading to partition of sub-continent into India and Pakistan are explained in this unit.

Full View

வரலாறு 9. தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் (History 9. Freedom Struggle in Tamil Nadu)

    இந்த அலகு தமிழ்நாட்டில் காலனிய எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றி விவரிக்கிறது. கல்வியின் வளர்ச்சிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கும் கிறித்தவ சமயப்பரப்பு நிறுவனங்களின் பங்களிப்பை விளக்குகிறது. தமிழ்நாட்டில் காங்கிரசின் அரசியலுக்கு நீதிக்கட்சியின் சவால் பற்றி இப்பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் காங்கிரசின் போர்க்குணமிக்க வெகு மக்களின் இயக்கங்கள் பற்றியும் இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளன. 

            This unit gives details about Anti-colonial struggles in Tamil Nadu. Then explains about Contribution of Christian missionaries to the development of education and amelioration of the depressed classes. Challenge of the Justicites to the Congress in Tamil Nadu are elaborated in this lesson. Also Militant mass movement of the Congress in Tamil Nadu are explained in this unit.

Full View

வரலாறு 10. தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் (History 10. Social Transformation in Tamil Nadu)

    இந்த அலகு நவீனத் தமிழ்நாட்டின் சமூக மாற்றங்கள் குறித்து விவரிக்கிறது. பின்னர் தமிழ் மறுமலர்ச்சி பற்றி விளக்குகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு சமூக சீர்திருத்த இயக்கங்களைப் பற்றி இப்பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக சீர்திருத்தவாதிகளின் கருத்துகளைப் பற்றியும் இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளன. 

            This unit gives details about the social transformation of modern Tamil Nadu. Then explains about Tamil Renaissance. The different social reform movements in Tamil Nadu are elaborated in this lesson. Also the ideas of the social reformers are explained in this unit.

Full View

புவியியல் 1. இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு (Geography 1. India – Location, Relief and Drainage)

    இந்த அலகு புவியில் இந்தியாவின் அமைவிட முக்கியத்துவம் பற்றி விவரிக்கிறது. இந்தியாவின் முக்கிய தனித்துவப் பண்புகளைக் கொண்ட இயற்கையமைப்புப் பிரிவுகளைப் பற்றி இப்பாடம் விளக்குகிறது. இந்திய பெரும் சமவெளிப் பகுதிகளை விவரிக்கிறது. மேலும் இந்தியாவின் வடிகாலமைப்பு, இமயமலையில் உருவாகும் ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகளுக்கு இடையேயான வேற்றுமைகள் பற்றி இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளன.

            This unit gives details about the strategic importance of India’s absolute and relative location in the world. The distinct characteristics of major physiographic divisions of India are explained in this lesson. The regions of Great Indian plains are elaborated. Also Drainage system of India, To differentiate the Himalayan and peninsular rivers are explained in this unit.

Full View

புவியியல் 2. இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் (​​​​​​​Geography 2. Climate and Natural Vegetation of India)

    இந்த அலகு இந்தியக் காலநிலையைக் கட்டுப்படுத்தும் காரணிகள் பற்றி விவரிக்கிறது. இந்திய பருவகாலங்களின் பண்புகளைப் பற்றி இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் மழைப்பரவல், பல்வேறு இயற்கைத் தாவரவகைகள் மற்றும் வன உயிரினங்கள் ஆகியவை பற்றி இந்த அலகில் விவரிக்கப்பட்டுள்ளன.
            This unit gives details about the factors controlling the climate of India. The characteristics of different seasons in India are explained in this lesson. Also rainfall distribution, different types of natural vegetation and wild life in India are elaborated in this unit.

Full View

புவியியல் 3. இந்தியா - வேளாண்மை (Geography 3. India – Agriculture)

    இந்த அலகு இந்திய மண் வகைகளின் தன்மை மற்றும் பரவலைப் பற்றி விவரிக்கிறது. பின்னர் நீர்ப்பாசனம் மற்றும் பல்நோக்கு திட்டங்களின் முக்கியத்துவத்தை பற்றியும் விளக்குகிறது. இந்திய வேளாண்மை வகைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி இப்பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய கால்நடை, மீன் வளங்கள் மற்றும் இந்தியா வேளாண்மை எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளன.

            This unit gives details about the nature of India’s soil types and their distribution. Then explains about the importance of irrigation and multi-purpose projects in India. The agriculture, its types and importance are elaborated in this lesson. Also the livestock, fishing resources of India and the problems of farming in India are explained in this unit.

Full View

புவியியல் 4. இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்(Geography 4. India – Resources and Industries)

    இந்த அலகு வளங்கள் மற்றும் அதன் வகைகளைப் பற்றி விவரிக்கிறது. புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க இயலா வளங்களைப் பற்றியும் விளக்குகிறது. இந்தியாவில் உள்ள தொழிலகங்களின் வகைகள் மற்றும் பரவல்கள் போன்றவை இப்பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்திய தொழிலகங்களின் பிரச்சனைகள் பற்றி இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளது.

            This unit gives details about the resource and its types. Then explains about the concept of renewable and non- renewable resources. The different types and distribution of industries in India are elaborated in this lesson. Also the problems of Indian industries are explained in this unit.

 

Full View

புவியியல் 5. இந்தியா - மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் (Geography 5. India – Population, Transport, Communication & Trade)

    இந்த அலகு இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் பரவலைப் பற்றி விவரிக்கிறது. பின்னர் இந்தியாவின் மனிதவள மேம்பாடு பற்றியும் விளக்குகிறது. இந்தியாவின் போக்குவரத்து அமைப்புகள் மற்றும் இந்தியாவின் தகவல்தொடர்பு அமைப்புகள் இப்பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவின் வணிகத்தின் தன்மையைப் பற்றி இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளது.
            This unit gives details about the growth and distribution of population in India. Then explains about the Human Development in India. The Transport Systems of India and the Communication System of India are elaborated in this lesson. Also the Nature of Trade in India are explained in this unit.

 

Full View

புவியியல் 6. தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் (Geography 6. Physical Geography of Tamil Nadu)

    இந்த அலகு நமது மாநிலத்தின் உருவாக்கம் பற்றிய வரலாற்றை விவரிக்கிறது. பின்னர் தமிழ்நாட்டின் இயற்கைப் பிரிவுகள் பற்றியும் விளக்குகிறது. தமிழ்நாட்டின் காலநிலை, மண் வகைகள், இயற்கை தாவரங்களின் தன்மைகள், மாணவர்கள் தங்கள் வசிக்கும் இடத்தில் சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் கூறுகள் பற்றி அறிந்து கொள்ளுதல் போன்றவை இப்பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாட்டில் நிகழும் பேரிடர்கள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வு பற்றி இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளது.

            This unit gives details about the History of Formation of the State. Then explains about the Major Physiographic Divisions of the State. The Nature of Climate, Soils, Natural Vegetation and familiarise the students with the Geographical Conditions of their living places are elaborated in this lesson. Also the Major Natural Disasters and their occurrences in Tamil Nadu are explained in this unit.

Full View

புவியியல் 7. தமிழ்நாடு - மானுடப் புவியியல் (Geography 7. Human Geography of Tamil Nadu)

    இந்த அலகு தமிழ்நாட்டின் வேளாண் காரணிகள், முக்கியப் பயிர்கள் மற்றும் அதன் பரவலைப் பற்றி விவரிக்கிறது. தமிழ்நாட்டின் நீர் வளங்களைப் பற்றியும் விளக்குகிறது. தமிழ்நாட்டின் கனிம மற்றும் தொழிலக வளங்கள், தமிழ்நாட்டின் மக்கள் தொகை மற்றும் அதன் கூறுகள் பற்றி பகுப்பாய்வு செய்தல் போன்றவை இப்பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாட்டின்-மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர் பற்றி இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளது.

            This unit gives details about the Agricultural Factors, Major Crops and their distribution in Tamil Nadu. Then explains about the Water Resources of Tamil Nadu. The mineral and industrial resources of Tamil Nadu, to analyze the population and its composition in Tamil Nadu are elaborated in this lesson. Also the man made disasters in Tamil Nadu are explained in this unit.

Full View

குடிமையியல் 1. இந்திய அரசியலமைப்பு (Civics 1. Indian Constitution)

    இந்த அலகு அரசியலமைப்பின் அவசியம் பற்றி விவரிக்கிறது. இந்திய அரசியலமைப்பு உருவாக்கம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புக் கூறுகளை விளக்குகிறது. முகவுரை, குடியுரிமை, அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள், மத்திய-மாநில உறவுகள், அலுவலக மொழிகள், அவசரகால ஏற்பாடுகள், அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தக் குழுக்கள் பற்றி இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளன.

            This unit gives details about the need for a constitution. Then explains about the making of Indian Constitution, Salient features of Indian Constitution. Preamble, Citizenship, Fundamental Rights and Duties are elaborated. Also, Directive Principles of State Policy, Centre-State relations, Official Language, Emergency Provisions, Amendment of the Constitution and Constitutional Reform Commissions are explained in this unit.

Full View

குடிமையியல் 2. நடுவண் அரசு (Civics 2. Central Government)

    இந்த அலகு குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோரின் அதிகாரங்கள் பற்றி விவரிக்கிறது. பிரதம அமைச்சர், அமைச்சரவை, மக்களவை மற்றும் மாநிலங்களவை பற்றி விளக்கிறது. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றம், அதன் அமைப்பு, நீதிபதிகள் நியமனம், உச்சநீதிமன்ற நீதிபதிக்கான தகுதிகள், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் போன்றவை பற்றி இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளன.

            This unit gives details about the powers of the President and Vice President. Then explains about the Prime Minister, Council of Ministers, Lok Sabha and Rajya Sabha. Duties and Functions of Attorney General of India are elaborated. Also, Supreme Court, Composition of the Supreme Court, Appointment of Judges, Qualification of Supreme Court Judges, Powers and Functions of the Supreme Court are explained in this unit.

Full View

குடிமையியல் 3. மாநில அரசு (Civics 3. State Government)

    இந்த அலகு மாநில அரசின் அமைப்பு பற்றி விவரிக்கிறது. ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் ஆகியோரின் அதிகாரங்களையும், பணிகளையும் விளக்குகிறது. மாநில சட்டமன்றம் மற்றும் சட்டமன்றத்தின் செயல்பாடுகள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தின் நீதித்துறை மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளன.

            This unit gives details about the structure of the State Government. Then explains about the Powers and Functions of the Governor, Chief Minister, Ministers and Speaker.  The State Legislature and Functions of the State Legislature are elaborated. Also, The Functioning of the Judicial System in the State are explained in this unit.

Full View

குடிமையியல் 4. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை (Civics 4. India’s Foreign Policy)

    இந்த அலகு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் பற்றி விவரிக்கிறது. அணிசேரா இயக்கத்தின் பொருள் மற்றும் முக்கியத்துவத்தை விளக்குகிறது. நமது வெளியுறவுக் கொள்கையின்படி நிலைகளை ஆய்ந்தறிதல் மற்றும் வெளியுறவுக் கொள்கையின் முக்கியத்துவம் போன்றவை விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் உள்நாட்டு கொள்கை மற்றும் வெளியுறவு கொள்கை ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடு பற்றி இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளது.

            This unit gives details about the basic principles of India’s Foreign Policy. Then explains about the meaning and significance of non-alignment. Analyse the stages of our Foreign Policy and the importance of Foreign Policy are elaborated. Also, the difference between Domestic Policy and Foreign Policy are explained in this unit.

Full View

குடிமையியல் 5. இந்தியாவின் சர்வதேச உறவுகள் (Civics 5. India’s International Relations)

    இந்த அலகு நமது அண்டை நாடுகளுடனான கொள்கைகள் குறித்து விவரிக்கிறது. வளர்ந்த நாடுகள் குறித்த இந்தியாவின் கொள்கையின் முக்கியத்துவத்தை பற்றி விளக்குகிறது. சர்வதேச நிறுவனங்களுடனான இந்தியாவின் உறவுகள் பற்றியும் இப்பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிக்ஸ் மற்றும் ஒபெக் நிறுவனங்களின் சாதனைகள் மற்றும் உலக நாடுகளிடையே இந்தியாவின் உன்னத நிலை குறித்த மதிப்பினை உள்வாங்குதல் போன்றவை பற்றி இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளன.

            This unit gives details about our policies with the neighbouring countries. Then explains about the importance of India’s Policy towards developed nations. India’s relationships with international organisations are elaborated in this lesson. Also, The achievements of BRICS and OPEC and imbibe the value of India’s position among world countries are explained in this unit.

Full View

பொருளியல் 1. மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் (Economics 1. Gross Domestic Product and its Growth: an Introduction)

    இந்த அலகு மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பற்றி விவரிக்கிறது. பிறகு நாட்டு வருமானத்தின் பல்வேறு நடவடிக்கைகளையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அமைப்பையும் விளக்குகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல்வேறு துறைகளின் பங்களிப்பு, பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் அதன் வேறுபாடுகள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையில் வளர்ச்சி பாதை, மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதார கொள்கைகளின் வளர்ச்சி பற்றி இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளன.

            This unit gives details about the meaning of Gross Domestic Product. Then explains about the basic various measures of National Income, The composition of GDP. The contribution of different sectors in GDP, The economic growth and development and its differences are elaborated. Also Development path based on GDP and Employment, Growth of GDP and Economic Policies are explained in this unit.

Full View

பொருளியல் 2. உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் (Economics 2. Globalization and Trade)

    இந்த அலகு உலகமயமாதலின் பொருள் மற்றும் வரலாறு பற்றி விவரிக்கிறது. பிறகு தென்னிந்திய வரலாற்று முன்னோக்கில், வர்த்தகம் மற்றும் வணிகர் பற்றி விளக்குகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் பரிமாண வளர்ச்சியைப் பற்றி இப்பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் நியாயமான வர்த்தக நடைமுறைகள், உலக வர்த்தக அமைப்பு மற்றும் உலக மயமாதலின் தாக்கத்தையும், சவால்களையும் பற்றி இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளன.

            This unit gives details about the meaning and history of globalization. Then explains about the evolution of growth of MNC. The trade and traders in South India historical perspective are elaborated in this lesson. Also Fair trade practices and WTO, Impact and Challenges of Globalization are explained in this unit.

Full View

பொருளியல் 3. உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து (Economics 3. Food Security and Nutrition)

     இந்த அலகு உணவு பாதுகாப்பின் வரையறை மற்றும் பொருள் பற்றி விவரிக்கிறது. பிறகு உணவு தானியங்கள் கிடைத்தலையும்> அணுகலையும் விளக்குகிறது. வாங்கும் திறன்> இந்தியாவின் விவசாயக் கொள்கை மற்றும் வறுமையின் பல பரிமாணத்தன்மை ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து> சுகாதார நிலை மற்றும் கொள்கைகள் பற்றி இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளன.

            This unit gives details about the meaning, definition of Food Security. Then explains about The Availability and Access to Food Grains. The Purchasing Power, Agricultural Policy in India and The Multi-dimensional Nature of Poverty are elaborated. Also Nutrition and Health Status and Policies in Tamil Nadu are explained in this unit.

 

Full View

பொருளியல் 4. அரசாங்கமும் வரிகளும் (Economics 4. Government and Taxes)

    இந்த அலகு வளர்ச்சிக் கொள்கைகள் மற்றும் அரசாங்கத்தின் பங்கு பற்றி விவரிக்கிறது. பிறகு வரி மற்றும் அதன் வகைகள், வரி எவ்வாறு விதிக்கப்படுகிறது என்தையும் விளக்குகிறது. கருப்பு பணத்திற்கும், வரி ஏய்ப்பிற்கும் உள்ள நோக்கம் பற்றி இப்பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் வரிக்கும், மற்ற கட்டணத்திற்கும் உள்ள வேறுபாடு, வரிகளும் மற்றும் அவற்றின் முன்னேற்றம் பற்றி இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளன.

            This unit gives details about the role of the government and development policies. Then explains about tax and its types, how is tax levied. Aim of black money and tax evasion are elaborated in this lesson. Also, the difference between the tax and other payments, taxes and its development are explained in this unit.

Full View

பொருளியல் 5. தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் (Economics 5. Industrial Clusters in Tamil Nadu)

    இந்த அலகு தமிழ்நாட்டின் தொழில்துறை தொகுப்புகளின் முன்னேற்றம் பற்றிய வரலாற்றை விவரிக்கிறது. பிறகு தொழில்மயமாதலின் முக்கியத்தும் மற்றும் தொழிற்சாலைகளின் வகைகள் பற்றி விளக்குகிறது. தமிழ்நாடு அரசின் கொள்கைகள் மற்றும் தொழில்துறை மேம்பாட்டு முகமைகளைப் பற்றியும் இப்பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் கொள்கைகளின் தாக்கம் மற்றும் தொழில் முனைவோரின் பங்கு பற்றி இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளன.

            This unit gives details about the historical development of Industrial Clusters in Tamil Nadu. Then explains about Importance of Industrialisation and Types of Industries. Tamil Nadu government policies and Industrial development Agencies are elaborated in this lesson. Also, the impact of Government Policies and the role of the Entrepreneur are explained in this unit.

10th Social EM Exam Time Tips - Give Reason and Distinguish - Way to success Teampdf
10th Social TM Exam Time Tips - Give Reason and Distinguish - Way to success Teampdf
10th Social EM Special Guide - Book Back Qns - Way to success Teampdf
10th Social TM Special Guide - Book Back Qns - Way to success Teampdf
10th Social EM Exam time tips - Important places & Maps - Way to success Teampdf
10th Social TM Exam time tips - Important Places & Maps - Way to success Teampdf
10th Social EM Exam time tips- Timeline - Way to success Teampdf
10th Social TM Exam time tips- Timeline - Way to success Teampdf
10th Social TM 10th Social TM - Quarterly study material - Book Back Qns - Way to success Teampdf
10th Social EM 10th Social EM - Quarterly study material - Book back Qns - Way to success Teampdf
10th Social EM 10th Social EM - Quarterly study material - Timeline & Maps - Way to success Teampdf
10th Social TM 10th Social TM - Quarterly study material - Timeline & Maps - WTSpdf
10th Social EM Guide sample pages - Way to successpdf
10th Social TM Guide sample pages - Way to successpdf
10th Social EM Exam time tips-Important places for maps - Way to success Teampdf
10th Social TM Exam time tips-Important places for maps - Way to success Teampdf
10th Social TM & EM வெற்றிக்கு வழி அமைப்போம் விழா - Feb 2023 - Tips for Social - Nagarajanpdf
10th Social TM & EM Tips to get centum in Social - Way to success Teampdf
10th Social TM & EM Tips for Slow Learners and Common Mistakes - Corrections by Students - Way to success Teampdf
10th Social EM Question Bank for Practice - R. Raveendranpdf
10th Social EM All Lessons Question Bank 2019 - M. Muneeswaran & B. Srinivasanpdf
10th Social EM Important Definitions 2019 - R. Revathipdf
10th Social TM Minimum Material 2019 - CEO of Sivagangai Dhamotharanpdf
10th Social TM & EM Tips 2019-2020 - D. Nagarajpdf
10th Social TM & EM Points To Remember 2020 - WTS Teachers Teampdf
10th Social TM & EM Important Events 2020 - WTS Teachers Teampdf
10th Social EM Unit 1 Study Material 2019-2020 - WTS Teachers Teampdf
Recent Question Papers & Keys
10th Social EM Mar 2024 public exam (Answer key) pdf
10th Social TM Mar 2024 public exam (Answer key) pdf
10th Social TM & EM Mar 2024 public exam (Question) pdf
10th Social EM வெற்றிக்கு வழி மாதிரிப் பொதுத்தேர்வு 23-24 (Answer key) - Way to success Team pdf
10th Social TM வெற்றிக்கு வழி மாதிரிப் பொதுத்தேர்வு 23-24 (Answer key) - Way to success Team pdf
10th Social TM & EM வெற்றிக்கு வழி மாதிரிப் பொதுத்தேர்வு 23-24 (Question) - Way to success Team pdf
10th Social TM & EM WTS model question paper (2022-2023) (7 sets) (Question) - Way to success Team pdf
10th Social TM & EM Previous Government Question paper (5 sets) (Question) - Way to success Team pdf
10th Social TM & EM PTA (1 to 6) Questions (Answer key) - WTS Teachers Team pdf
10th Social TM & EM PTA (1 to 6) Questions (Question) - WTS Teachers Team pdf
10th Social TM & EM Quarterly - all districts 2023 - 2024 (Question) pdf
10th Social TM & EM Prev. Year All-District Quarterly QPs (Question) - Way to success Team pdf
10th Social TM & EM First mid-term of all districts 2023 - 2024 (Question) - Way to success pdf
10th Social TM & EM Govt. exam April 2023 (Answer key) pdf
10th Social EM 2nd Revision Test 2023 - Various District (Question) - WTS pdf
10th Social TM 2nd Revision Test 2023 - Various District (Question) - WTS pdf
10th Social EM First Revision Test 2023 - Various District (Question) - WTS pdf
10th Social TM First Revision Test 2023 - Various District (Question) - WTS pdf
10th Social TM & EM PTA Model Question Papers (6 sets) - (2022-2023) (Question) - Way to success Team pdf
10th Social EM Half Yearly 2022-Various District (Question) - WTS pdf
10th Social TM Half Yearly 2022-Various District (Question) - WTS pdf
10th Social TM WTS SSLC Model Public Exam 22-23 (விடைக்குறிப்பு) - WTS Team pdf
10th Social EM WTS SSLC Model Public Exam 22-23 (Answer key) - WTS Team pdf
10th Social TM & EM WTS SSLC Model Public Exam 22-23 (Question) - WTS Team pdf
10th Social EM 10TH SOCIAL WTS MODEL EXAM 2022-23 (Answer key) - SEVAI TEAM pdf
10th Social TM வெற்றிக்கு வழி மாதிாி (5 set) (வினாத்தாள்) - WTS TEAM pdf
10th Social EM WTS model (5 set) (Question) - WTS TEAM pdf
10th Social TM & EM First Revision Test 2020 (Answer key) - WTS Teachers Team pdf
10th Social EM One Mark Questions 2019-2020 (Question and Answer key) - C. Murugan pdf
10th Social TM Important one mark Questions 2019 (Question) - M. Muniswaran pdf
10th Social TM Public Model Question Paper 2019-2020 (வினாத்தாள்) - DMTECH10TH pdf
10th Social EM Half Yearly Exam 2019 (Question) - WTS Teachers Team pdf
10th Social TM & EM Quarterly Exam 2019 (Question) - Karthikeyan pdf
10th Social EM Common Quarterly Exam September 2019 (Answer key) - WTS Teachers Team pdf
10th Social TM Common Quarterly Exam September 2019 (விடைக்குறிப்பு) - WTS Teachers Team pdf
10th Social TM Common Half Yearly Exam December 2019 (விடைக்குறிப்பு) - WTS Teachers Team pdf
10th Social EM Common Half Yearly Exam December 2019 (Answer key) - WTS Teachers Team pdf
10th Social TM & EM WTS SSLC Model Public Exam 2019-2020 (Answer key) - WTS Teachers Team pdf
10th Social TM & EM WTS SSLC Model Public Exam 2019-2020 (Question) - WTS Teachers Team pdf
10th Social TM & EM WTS SSLC MDL Public Exam (21-22) (Question and Answer key) - Way to Success Team pdf

Comments