வெற்றிக்கு வழி அமைப்போம் - பயிற்சி பயிலரங்கம், சிறப்புத் தேர்வு மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்வுகள்
திறன்வளர் ஆசிரியர் மன்றம் மற்றும் வெற்றிக்கு வழி குழுமம் நடத்திய மாதிரிப் போதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொள்ள முடியும். பொதுவாக வெற்றிக்கு வழி அமைப்போம் நிகழ்வானது காலை 8.45 மணிக்கு துவங்கும். திறன்வளர் ஆசிரியர் மன்ற ஆசிரியர்களை வழிநடத்தும் ஆசான்களின் தொடக்க உரையுடன் துவக்கப்படும் விழாவானது மாதிரிப் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பள்ளியளவிலான பரிசுகள் முதலில் வழங்கப்படும். பின்னர் பயிற்சிப் பயிலரங்கம் துவங்கும். அரசுப்பொதுத் தேர்வில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெருவதற்கான உத்திகளை திறன் மிக்க தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களின் வகுப்புகள் அப்போது நடைபெறும். பிறகு அனைத்து பாடங்களுக்குமான சிறப்புத் தேர்வு ஒன்று நடைபெறும். அப்போதே மாணவர்களின் விடைக்குறிப்புகள் திருத்தப்பட்டு அதில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு அடுத்து நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பரிசுகள் வழங்கப்படும். 3 மணியளவில் நடைபெறும் வெற்றிக்கு வழி அமைப்போம் விழாவில் திறமிக்க 2 ஆசிரிர்களுக்கு “கல்வித் திறன் வளர்த்த நல்லாசிரியர் விருது” வழங்கப்படும். பிறகு தலைமை விருந்தினரின் விழாப் பேருரை நடைபெறும். கடைசியாக மதியம் நடத்தப்பட்ட சிறப்புத் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அரசு பொதுத் தேர்வு எழுதப்போகும் 10ம் வகுப்பு மாணவர்களை ஊக்கத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்துவதற்கான விழாவாக இது அமையும்.
20.02.2022 அன்று நடைபெற்ற மதிரிப்பொதுத் தேர்வு பற்றிய விவரங்கள்
- வேடூ சக்ஸஸ் மற்றும் திறன் வளர் ஆசிரியர் மன்றம் இணைந்து நடத்தும் 9 ஆம் ஆண்டு மாநில அளவிலான 10ஆம் வகுப்பு ஆங்கிலம் மாதிரிப்பொதுத்தேர்வு கடந்த 20.02.2022 அன்று நடைபெற்றது.
- ஆங்கில பாடத்திற்கு மட்டும் மாநில அளவில் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ், கணிதம்(Maths), அறிவியல் (Science), சமூக அறிவியல் (Social) போன்ற பாடங்களுக்கான வினாத்தாள்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளே அந்த தேர்வுகளை நடத்திக்கொள்ளும் வண்ணம் வழங்கப்பட்டது.
- தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்குமான வினாத்தாள், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எளிதாக எதிர்கொள்ள வழிகாட்டி புத்தகம், 10ஆம் வகுப்பு ஆங்கிலபாடத்திற்கான வெற்றிக்கு வழி சிறப்பு கையேடு ஆகியன வழங்கப்பட்டன.
- இந்த தேர்வில் மாநிலம் முழுவதும் 127 பள்ளிகள் பங்கேற்றன. மொத்தம் 6415 மாணவர்கள், 139 மையங்களில் தேர்வு எழுதினர்.
- அவர்களில் இருந்து 427 பேர் திருச்சியில் நடைபெற்ற வெற்றிக்கு வழி அமைப்போம் பயிற்சிப் பயிலரங்கம் மற்றும் வெற்றிக்கு வழி அமைப்போம் விழா நிகழ்வுகளுக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
19.03.2022 அன்று நடைபெற்ற விழாவனது கீழ்கண்ட முறையில் அமைந்திருந்தது.
- 19.03.2022 அன்று இவ்விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.15 வரை நடைபெற்றது.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மாணவர்கள் தங்களது பெயர்களை விழா அரங்கின் நுழைவாயிலில் பதிவு செய்து கொண்டனர். அவர்களுக்கு பரிசாக நினைவாற்றல் உத்திகள் புத்தகம், குறிப்பேடு, எழுதுகோல், முகக்கவசம், பைல் ஆகியன வழங்கப்பட்டன. பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
- விழாவின் காலை நிகழ்வை திருமதி.மா. தமிழரசி அவர்களும், மாலை நிகழ்வை திருமதி. கே. கலைச்செல்வி அவர்களும் தொகுத்து வழங்கினர்
- தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது. நல்லாசிரியர் திருமதி.மா.தமிழரசி தொடக்க உரையாற்றினார். அனைத்துப் பாடங்களுக்குமான தேர்வு உத்திகளை திருச்சி மாவட்ட கலாம் அறக்கட்டளையின் தலைவர் திரு. முஹமது ஈஸ்வாக் வழங்கினார்.
- மாநில அளவில் நடைபெற்ற மாதிரி பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற 127 பேருக்கும், சிறப்பிடம் பெற்ற 80 பேருக்கும் விழா மேடையில் கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
- பாலக்குறிச்சி, புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு. இ.ஆனந்த் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் சிறந்த மதிப்பெண்களை பெற ஆலோசனைகளை வழங்கினார்.
- ”அலெக்ஸ் மேத்ஸ்” யுடியுப் சேனல்-ன் ஆசிரியர் திரு.அ.ஜெ. அலெக்ஸாண்டர் கணித பாடத்தில் சதம் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை விவரித்தார்.
- பாலக்குறிச்சி, புனித ஜேம்ஸ் பள்ளி ஆசிரியர் திரு.பெ.லிபின் அறிவியல் பாடத்தில் சதம் பெற ஆலோசனை வழங்கினார்.
- புதுக்கோட்டை, ராப்பூசல், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு. து. நாகராஜன் சமூக அறிவியல் பாடத்தில் சிறந்த மதிப்பெண்களை பெற உத்திகளை வழங்கினார்.
- பின்னர் 50 மதிப்பெண்களுக்கு அனைத்து பாடங்களிலிருந்தும் கொள்குறி வகையிலான சிறப்புத்தேர்வு நடத்தப்பட்டது.
- மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் காலை, மாலை இரு வேளைகளிலும் தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது.
- அதனைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு. கே. முத்துராமன் ஆங்கில பாடத்தில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவது எவ்வாறு என்பதை விளக்கினார்.
- நாகர்கோவிலை சேர்ந்த, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் பயிற்சியாளர் திரு. ஆன்டோ சேவியர், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உள்ள உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த முழு விவரங்களையும் பகிர்ந்து கொண்டார்.
- மாலை 3.00 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, கனவு நாயகன் கலாம் படத்திற்கு குத்து விளக்கு ஏற்றுதல் நிகழ்வுகளுடன் வெற்றிக்கு வழி குழுமத்தின் தலைவர். திரு. கே. சின்னப்பன், சிறப்பு விருந்தினர் திரு. ஜான் லூயிஸ் ஆகியோர் தலைமையில் வெற்றிக்கு வழி அமைப்போம் விழா துவங்கியது.
- திறன் வளர் ஆசிரியர் மன்ற செயலாளர் திரு. எஸ். எரோணிமுஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். வெற்றிக்கு வழி குழுமம் கல்விப் பணியில் 10 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்து தெரிவித்தார்.
- திருச்சி, ஜமால் முகமது கல்லூரி , தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர். திரு. த.செல்வராசு , கல்வித்திறன் வளர்த்த நல்லாசிரியர் விருது பெறும் இருவரை அறிமுகப்படுத்தினார்.
- முதலாவதாக, 31 வருட ஆசிரிய பணியில், 1113க்கும் மேற்ப்பட்ட மாணவர்களை மருத்துவர்களாக மாற்றிய திருச்சி, இ.ஆர் மேல்நிலைப்பள்ளி, முதுகலை தாவரவியல் ஆசிரியர் முனைவர்.ந. சத்தியமூர்த்தி அவர்களுக்கு கல்வித்திறன் வளர்த்த நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
- இரண்டாவதாக, அலெக்ஸ் மேத்ஸ் யூடியூப் சேனல் மூலம் பலதரப்பட்ட மாணவர்களுக்கும் கணிதத்தை எளிமையாக்கி தரும் கணித ஆசிரியர் திரு. அ.ஜெ. அலெக்ஸாண்டார் அவர்களுக்கு கல்வித்திறன் வளர்த்த நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
- அதனைத்தொடர்ந்து பயிலரங்கம் தொடர்பான கருத்துப்பதிவை மாணவர் மாணவி, பெற்றோர் என தலா ஒருவர் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.
- பின்னர், வெற்றிக்கு வழி குழுமத்தின் நிறுவனர் திரு. கே. சின்னப்பன் அவர்கள், மாணவர்கள் தங்கள் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
- நினைவாற்றல் பேராசான் திரு. பா.ஜான் லூயிஸ் அவர்கள் விழாப்பேருரை நிகழத்தினார். தான் கடந்து வந்த வெற்றி பாதையை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். நினைவாற்றலை மேம்படுத்தும் உத்திகளையும் விளக்கினார்.
- மதியம் நடைபெற்ற சிறப்புத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 10 அரசுபள்ளி மாணவர்கள், 7 அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்கள், 7 தனியார் பள்ளி மாணவர்கள் என மொத்தம் 24 பேருக்கு ஆறுதல் பரிசாக ரூ.2000, சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
- மாநில அளவில் நடைபெற்ற ஆங்கில மாதிரி பொதுத்தேர்வில் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்களை பங்கேற்க செய்த அரியலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு மாவட்ட அளவிலான முதல் பரிசாக ரூ.5000, சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
- வெற்றிக்கு வழி பதிப்பகத்தின் பொது மேலாளர் திரு. ஏ.பி.லியோ நன்றியுரை வழங்கினார்.
- மாநில அளவில் மூன்றாம் பரிசினை ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம், பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த தனிகா என்ற மாணவி பெற்றார். அவருக்கு ரூ.10,000, சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
- மாநில அளவில் இரண்டாம் பரிசினை இராமநாதபுரம் மாவட்டம், எமனேஸ்வரம், சௌராஷ்ட்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிரீத்தி என்ற மாணவி பெற்றார். அவருக்கு ரூ.20,000 சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
- மாநில அளவில் முதல் பரிசினை அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த அனிதா என்ற மாணவி பெற்றார். அவருக்கு ரூ.30,000, சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
- மாநில அளவில் நடைபெற்ற மாதிரிப்பொதுத்தேர்வில் சிறந்த பங்களிப்பு அளித்த கள்ளக்குறிச்சி AKT மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு நினைவுக் கேடயம் வழங்கப்பட்டது.
- நாட்டுப்பண் இசைக்க நிகழ்ச்சி நிறைவடைந்தது.
|