Share:

    பள்ளி காலை வழிபாடு

    நாள்:16-07-2024கிழமை:செவ்வாய்

1. தினம் ஒரு திருக்குறள்

குறள் :

அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

விளக்கம் :

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.

2. தினம் ஒரு பொன்மொழி

உன்னைப்பற்றிய உன் எண்ணமே, நீ யார் என்பதை உலகிற்குக் காட்டும்!

3. தினம் ஒரு புதிய வார்த்தை

Backache - முதுகுவலி

Headache - தலைவலி

4. வரலாற்றில் இன்று
  • 1661 – ஐரோப்பாவின் முதலாவது வங்கித்தாள்கள் சுவீடன் வங்கியினால் வெளியிடப்பட்டன.
  • 1790 – கொலம்பியா மாவட்டம் அமெரிக்காவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.
  • 1969 – அப்பல்லோ திட்டம்: அப்பல்லோ 11, நிலாவில் தரையிறங்க முதலாவது மனிதரை ஏற்றிக் கொண்டு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டது
5. இன்றைய செய்திகள்

  • அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
  • திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே கத்தரிமேடு என்ற பகுதியில் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கற்காலக் கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • சேலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டியில், 5 மாநிலங்களைச் சோ்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.
  • Chief Minister M. K. Stalin will inaugurate the breakfast program in government-aided primary schools today (Monday) in Tiruvallur.
  • 10,000-year-old Stone Age stone tools have been found in an area called Katharimedu near Nattarampalli, Tiruppattur district.
  • More than 350 students from 5 states participated in the national archery competition held in Salem.