Text Data - Full View

Full View

நடனம் 

நடனம்  என்பது பொதுவாகத் தாளத்துக்கும் இசைக்கும் அமைவாக உடலை அசைத்து நிகழ்த்தப்படும் ஒரு கலை வடிவம். இது ஒரு விடயத்தின் வெளிப்பாட்டு வடிவமாகவோ, சமூகத் தொடர்பாடலாகவோ இருக்கலாம். நடனங்கள் சமயச் சார்பு நோக்கங்களுக்காக ஆடப்படுபவையாக அல்லது பிறருக்கு நிகழ்த்திக் காட்டும் ஒன்றாக அமையக்கூடும். மனிதர் தமது எண்ணங்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தொடர்புமுறை என்றும் நடனங்களைக் கருதுவது உண்டு. தேனீக்கள் போன்ற சில விலங்குகளும் சில வேளைகளில் நடனத்தைப் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. சீருடற்பயிற்சி (Gymnastics), ஒத்திசை நீச்சல் (synchronized swimming), நடனப் பனிச்சறுக்கு (figure skating) போன்ற விளையாட்டுக்கள் நடனத்தையும் தம்முள் அடக்கியவையாக உள்ளன. கட்டா எனப்படும் தற்காப்புக் கலையும் நடனங்களுடன் ஒப்பிடப்படுவது உண்டு. உயிரற்ற பொருட்களின் அசைவுகள் நடனம் எனக் குறிப்பிடப்படுவது இல்லை.

நடனங்கள் பல்வேறு பாணிகளில் உருவாகியுள்ளன. எனினும் எல்லா நடனங்களுமே தம்முள் சில பொது இயல்புகளைக் கொண்டுள்ளன. நடன அசைவுகளுக்கு ஏற்ப உடல் வளைந்து நெளிந்து கொடுக்கும் தன்மை கொண்டதாக இருப்பது மட்டுமன்றி, உடல் உறுதியும் முக்கியமானது. இதனாலேயே முறைப்படியாக நடனம் ஆடுபவர்கள் நல்ல நீண்டகாலப் பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள். நடனங்களை உருவாக்கும் கலை நடன அமைப்பு எனப்படுகிறது.

Full View

தோற்றமும் வரலாறும்

 நடனத்தின் தோற்றத்தை அறிந்துகொள்ளக்கூடிய வகையில் தெளிவான தொல்பொருட் சான்றுகள் இல்லை. இதனால், எப்போது நடனம் மனிதப் பண்பாட்டின் ஒரு பகுதியானது என்று சொல்ல முடியாது. எனினும், நடனங்கள் போன்ற செயற்பாடுகள் இருந்தமையைக் காட்டும் சான்றுகள் பல்வேறு இடங்களிலும் கிடைத்துள்ளன. மிகப் பழைய மனித நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்னரே சடங்குகள், கொண்டாட்டங்கள், பொழுதுபோக்குகள் போன்ற பல காரணங்களுக்காக நடனங்கள் மனித வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருக்கக்கூடும். வரலாற்றுக்கு முந்திய காலத்திலேயே நடனங்கள் ஆடப்பட்டிருக்கலாம் என ஊகிக்கும் வகையிலான சான்றுகளைத் தொல்லியல் வழங்குகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை வாழிடங்களில் காணப்படும் ஓவியங்களில் காணப்படும் உருவங்கள் சில நடனமாடுவதைக் காட்டுவதாகக் கருதப்படுகின்றது. கிமு 3300 காலப்பகுதியைச் சேர்ந்த எகிப்தியக் கல்லறை ஓவியங்களிலும் இத்தகைய உருவங்கள் உள்ளன. சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த தொல்பொருட்களிலும் நடனம் ஆடும் உருவங்கள் காணப்படுகின்றன.

Full View

தமிழன் பெருமை சொல்லும் நடனக் கலைகள்

நமது கலை கலாசாரத்தை எத்தனை விதமாக சொன்னாலும், நடனத்தின் மூலமாக சொல்லும்போது தமிழுக்கான அழகு மேலும் அதிகரிக்கின்றது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய நடனங்களைப் பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம்.

நமது பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து இன்றுவரை புழக்கத்தில் இருக்கும் இந்தக் கலைகள் பற்றி நன்கு அறிந்துகொள்வோம். நமது அடுத்தத் தலைமுறைக்கு இதன் மகிமையை எடுத்துரைப்போம்.

Full View

இந்தியாவின் நடனங்கள்

இந்தியாவில் பல நடனங்கள் உள்ளன, அவை நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வருகின்றன, இருப்பினும் தேசிய அளவில் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட கிளாசிக்கல் நடனங்களின் ஆறு வடிவங்கள் மட்டுமே உள்ளன. அவை பரதநாட்டியம், கதக், கதகளி, மணிப்பூரி, குச்சிப்புடி மற்றும் ஒடிசி. இந்தியாவின் நாட்டுப்புற நடனங்கள் வெறும் உடல் அசைவுகளை விட அதிகம், பழங்காலத்திலிருந்தே இந்தியாவின் பாரம்பரிய நடன வடிவங்கள் ஒரு ஒழுக்கமாகவும், கலையின் மூலம் கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கான ஒரு வழியாகவும் கருதப்படுகின்றன.