Text Book Data - Full View

Full View

பத்தாம் வகுப்பு அறிவியல் (Science)

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் மொத்தம் 23 அலகுகள் உள்ளன. இவை இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), உயிரியல் (Biology) என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அலகிலும் (Unit), செயல்பாடுகள் (Activities), விளக்கப்படம் (Infographics), தகவல் துணுக்குகள்(Info-bits), உங்களுக்குத் தெரியுமா? (Do you know?), மேலும் அறிவோம் (More to know), கலைச்சொற்கள் (Glossary), இணையச் செயல்பாடு (ICT corner) மற்றும் விரைவுக் குறியீடு (QR code) என்ற வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அலகை பற்றியும் பின்வரும் பகுதிகளில் காணலாம். மேலும் தமிழ் மற்றும் ஆங்கில வழி (Tamil & English Medium) பாடங்கள் சேர்த்தே கொடுக்கப்பட்டுள்ளது.

- WTS Teachers team
Full View

அலகு 1 - இயக்க விதிகள் (Unit 1 - Laws of Motion)

இந்த அலகு விசை மற்றும் இயக்கம் சார்ந்த கருத்துகளை விவரிக்கிறது. நிலைமம் மற்றும் அதன் வகைகள், நியூட்டனின் மூன்று இயக்க விதிகள் பற்றிய விவரங்களை தருகிறது. உந்தம் மற்றும் கணத்தாக்கு விசை இவற்றை விளக்குகிறது. இந்த அலகு ஈர்ப்பியல் விதி மற்றும் அதன் பயன்களை பற்றிக் கூறுகிறது. விசை மற்றும் இயக்கம் சார்பான கணக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

This unit explains the concept of Force and Motion. It give details about Inertia and its types, the three laws of Newton. And explains about momentum and impulse. This unit tells about Law of Gravitation and its application. And numerical problems are given related to Force and Motion.

- WTS Teachers Team
Full View

அலகு 2 - ஒளியியல் (Unit 2 - Optics)

இந்த அலகு ஒளிவிலகல் விதிகள் மற்றும் ஒளியின் பண்புகளைப் பற்றி விவரிக்கிறது. ஒளிச் சிதறல் மற்றும் அதன் பல்வேறு வகைகளை பற்றி விளக்குகிறது. குவிலென்சு மற்றும் குழிலென்சு உருவாக்கும் பிம்பங்கள் மற்றும் அதன் கதிர் படங்கள்  பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மனிதக் கண் மற்றும் ஒளியியல் கருவிகளின் செயல்பாடுகளைப் பற்றி விளக்குகிறது. ஒளிவிலகல் சார்பான கணக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

This Unit explains the laws of refraction and the properties of light. It explains the scattering of light and its various kinds. It give detail information about the images formation and ray diagram of concave and convex lens. The working of human eye and optical instruments are explained. Related numerical problems are given.

 

- WTS Team
Full View

அலகு 3 - வெப்ப இயற்பியல் (Unit 3 - Thermal Physics)

இந்த அலகு வெப்ப ஆற்றல் மற்றும் வெப்பநிலை பற்றி விவரிக்கிறது. வெப்ப ஆற்றல் மற்றும் வெப்பச் சமநிலை பற்றி விளக்குகிறது. நல்லியல்பு வாயு விதிகள், இயல்பு வாயு மற்றும் நல்லியல்பு வாயு வேறுபாடு பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. நல்லியல்பு வாயுக்களுக்கான சமன்பாடு நிறுவப்பட்டுள்ளது மற்றும் அதற்கு தொடர்புடைய கணக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

This Unit explains about the concept of heat and temperature. It give details about thermal energy and the thermal equilibrium. It explains about the fundamental laws of gases and distinguish between real gas and ideal gas. It derive the ideal gas equation and related numerical problems are given.

- WTS Team
Full View

அலகு 4 - மின்னோட்டவியல் (​​​​​​​Unit 4 - Electricity)

        இந்த அலகு மின் சுற்றுக்கள் உருவாக்குதல் மற்றும் மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டினை பற்றி விவரிக்கிறது. மின் தடையாக்கிகளின் தொடர் மற்றும் பக்க இணைப்பு பற்றி விளக்குகிறது. மின்னோட்டத்தின் வெப்ப விளைவு பற்றி அறிந்து கொள்ளுதல் மற்றும் டுநுனு விளக்கு மற்றும் டுநுனு தொலைகாட்சிகளின் நவீன பயன்பாடுகள் பற்றி விவரிக்கிறது.
This unit explains about electric circuit and difference between electric potential and potential difference. It give details about the effective resistance of a system of resistors connected in series and parallel. It explains about the heating effect of the electric current and modern appliances such as LED bulb and LED television.

 

- WTS Team
Full View

அலகு 5 - ஒலியியல் (Unit 5 - Acoustics)

இந்த அலகு ஒலி உருவாக்கம் மற்றும் பரவலைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. திசை வேகம், அதிர்வெண் மற்றும் அலை நீளத்திற்கான தொடர்பை விளக்குகிறது. எதிரொலிப்பு முறையைப் பயன்படுத்தி ஒலியின் திசைவேகத்தை கண்டறிவது மற்றும் டாப்ளர் விளைவைப் பற்றி விவரிக்கிறது. மேற்கண்ட பகுதிகளில் கணக்கீடுகள்; கொடுக்கப்பட்டுள்ளன.

 This unit explains how sound is produced and transmitted. It give details about the relation between speed of sound, its frequency, and its wavelength.  It explains about the determination of speed of sound using the method of echo and Doppler Effect. Numerical problems related to the above topics are given.

- WTS Team
Full View

 அலகு 6 - அணுக்கரு இயற்பியல் (Unit 6 - Nuclear Physics)

இந்த அலகு கதிரியக்கம் மற்றும் ஆல்பா, பீட்டா, காமாக் கதிர்களின் பண்புகளை பற்றி விவரிக்கிறது. அணுக்கரு சிதைவிற்கான சாடி மற்றும் ஃபஜன் இடம்பெயர்வு விதியினைப் பற்றி விளக்குகிறது. அணுக்கரு இணைவு மற்றும் அணுக்கரு பிளவு ஆகியவற்றின் கருத்துகள், அணுகுண்டு மற்றும் ஹைட்ரஜன் குண்டுகளின் தத்துவங்களை விவரிக்கிறது. அணுக்கரு உலையின் கூறுகளைப் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

 This unit explains about radio activity and the properties of alpha, beta and gamma rays. It give details about Soddy and Fajan’s displacement law of nuclear disintegration. It explains the concept of nuclear fission and nuclear fusion and the principle of atom bomb and hydrogen bomb. Details of the components of a nuclear reactor is given.

- WTS Team
Full View

அலகு 7 - அணுக்களும் மூலக்கூறுகளும் (Unit 7 - Atoms and Molecules)

இந்த அலகு அணு மற்றும் மூலக்கூறு நிறை, கிராம் அணு நிறை மற்றும் கிராம் மூலக்கூறு நிறை பற்றி விவரிக்கிறது. வாயுக்கள் பற்றிய அவகாட்ரோ கருதுகோளின் உள்ளடங்கிய கருத்துக்களை விளக்குகிறது. வாயுக்களின் பருமனுக்கும் மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கும் உள்ள தொடர்பினை பற்றிய தகவல்களை தருகிறது. மோல் தத்துவம் மற்றும் அதற்கு தொடர்புடைய கணக்குகள் தரப்பட்டுள்ளது.
 

This unit give details about Atomic & Molecular mass, gram atomic and gram molecular mass. It explains about Avogadro’s hypothesis of gases. It gives the relationship about the volume of a gas and the number of molecules present in it. Mole concept and problems related to it are given.

                                                                 

- WTS Team
Full View

அலகு 8 - தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு (unit 8 - Periodic Classification of Elements)

இந்த அலகு நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படையும், அதன் வளர்ச்சியும் பற்றி விளக்குகிறது. தாதுக்களில் உள்ள மாசுக்களை நீக்கும் முறைகளை பற்றி விளக்குகிறது. உலோகங்களின் பண்புகள் மற்றும் உலோகவியலில் உள்ள வெ வ்வேறு படிநிலைகள் பற்றி விவரிக்கிறது. உலோகக்கலவைகளும் அவற்றின் வகைகளும் பற்றி விளக்குகிறது. உலோக அரிமானத்திற்கான காரணங்களும், அவற்றைத் தடுக்கும் முறைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

This unit explains the basis of the modern periodic law and its development. It elaborates the types of separation of impurities from the ores. It explains the properties of metals and the stages involved in metallurgical processes. It give details about alloys and their types. The reason for corrosion and the methods of its prevention are given.

- WTS Team
Full View

அலகு 9 - கரைசல்கள் (Unit 9 - Solutions)

இந்த அலகு கரைசல் மற்றும் அதன் வகைகளை பற்றி விவரிக்கிறது.  கரைசல்களின் செறிவுகளை வெளிப்படுத்தும் வெவ்வேறு முறைகளை பற்றி விளக்குகிறது. கரைப்பானில் கரைபொருளின் கரை திறனைக் கண்டறியும் கணக்கீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

This unit explains about Solution and the types of solutions. It give details about the various modes of expression of concentration of solution. Problems related to the solubility of solutes in solvents are given.

 

- WTS Team
Full View

அலகு 10 - வேதிவினைகளின் வகைகள்(Unit 10 - Types of Chemical Reaction)

இந்த அலக பல்வேறு வேதிவினைகளின் வகைகளை பற்றி விளக்குகிறது.  வேதிவினையின் வேகம் மற்றும் செறிவு, வெப்ப நிலை மற்றும் வினையூக்கியை பொருத்து வினைவேகத்தின் மாற்றங்களைப் பற்றி விளக்குகிறது. pர்-ன் முக்கியத்துவம் மற்றும் நீரின் அயனிப் பெருக்கத்தைப் பற்றி விவரிக்கிறது.

This unit explains about different types of chemical reaction. It give details about rate of reaction and the dependence of rate of reactions on concentration, temperature and catalyst. It explains about the importance of pH and the term ionic product of water.

- WTS Team
Full View

அலகு 11 - கார்பனும் அதன் சேர்மங்களும் (Unit 11 - Carbon and its Compounds)

இந்த அலகு கரிமச் சேர்மங்களின் வகைகள் மற்றும் ஐருPயுஊ முறையில் பெயரிடுதல் பற்றி விளக்குகிறது. கரிமச் சேர்மங்களின் வினைச் செயல் தொகுதியை பற்றி விளக்குகிறது. எத்தனால் மற்றும் எத்தனாயிக் அமிலம் ஆகியவவைகளின் தயாரிப்பு முறை, பண்புகள் மற்றும் பயன்களைப் பற்றி விவரிக்கிறது. சோப்பு மற்றும் டிடர்ஜெண்டின் இயைபு மற்றும் தயாரிக்கும் முறையை பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

This unit explains about classification of the organic compounds and naming them based on IUPAC rules. It give details the functional groups of organic compounds. It explains the preparation, properties and uses of ethanol and ethanoic acids. Details about the composition and preparation of soap and detergent are given.

- WTS Team
Full View

அலகு 12 - தாவர உள்ளமைபியல் மற்றும் தாவர செயலியல் (Unit 12 - Plant Anatomy and Plant Physiology)

        இந்த அலகு வாஸ்குலார் திசுத் தொகுப்பின் வகைகள் மற்றும் பணிகளை பற்றி விவரிக்கிறது. இருவிதையிலை மற்றும் ஒரு விதையிலைத்தாவர வேர், தண்டு, இலைகளின் உள்ளமைப்பு பற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. இருவிதையிலை மற்றும் ஒரு விதையிலைத்தாவர வேர், தண்டு, இலைகள் இவற்றிற்கிடையேயான வேறுபாட்டை பற்றி விளக்குகிறது. கணிகங்களின் அமைப்பு மற்றும் பணி, மைட்டோகாண்ட்ரியாவின் அமைப்பு ஆகியன விவரிக்கப்பட்டுள்ளன. காற்று சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசித்தலின் அடிப்படை நிகழ்வுகளைப் பற்றி விளக்குகிறது.

 

This unit explains about the vascular tissue system- their types and functions. It give details about structure of dicot and monocot root, stem, leaf. It explains about the differences between the internal structure of dicot and monocot root, stem, leaf. It elaborates the structure and functions of plastids, mitochondria. The basic events of aerobic and anerobic respiration are explained.

 

 

- WTS Team
Full View

அலகு 21 - உடல் நலம் மற்றும் நோய்கள் (Unit 21 - Health and Diseases)

இந்த அலகு தவறான பயன்பாடுகளின் வகைகள் மற்றும் அது தொடர்புடைய நடத்தை மாற்றங்கள் பற்றி விவரிக்கிறது. மருந்து, புகையிலை மற்றும் மதுவுக்கு அடிமையாதலுக்கான காரணங்கள் மற்றும் அவை உடல் நலத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி விளக்குகிறது. நோய் மற்றும் குறைபாடுகளின் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் பற்றி விவரிக்கிறது. நலமான வாழ்க்கைக்கான சமுதாய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

This unit explains about the types of abuses and associated behavioural changes. It give details about the causes for drug, tobacco and alcohol addiction and its effects on health. It explains remedial measures for prevention and control of these diseases and disorders. Awareness for the individuals in the society to lead healthy life is given.

 

- WTS Team
Full View

அலகு 22 - சுற்றுச்சூழல் மேலாண்மை (Unit 22 - Environmental Management)

இந்த அலகு புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க இயலாத வளங்களின் வேறுபாட்டை விவரிக்கிறது. பல்வேறு இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான அவசியத்தை விளக்குகிறது. இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் உள்ள வரையறைகள் பற்றிய விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மையில் ஈடுபாட்டோடு பங்கேற்பதற்கான ஊக்கம் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

This Unit differentiate renewable and non-renewable resources. It give details about the need for conservation of various natural resources.  Awareness about the limited exploitation of natural resources and motivation to participate in the protection of environment and its management are given.

- WTS Team
Full View

அலகு 23 - காட்சித் தொடர்பு (Unit 23 - Visual Communication)

இந்த அலகு கோப்பு, கோப்புத் தொகுப்பு ஆகியவற்றிற்கான வேறுபாட்டை விவரிக்கிறது. கோப்பு, கோப்புத் தொகுப்பு ஆகியவற்றை உருவாக்குதல் பற்றி விளக்குகிறது. மென்பொருள் வழியாக அசைவூட்டத்தை உருவாக்குதல் பற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.

This unit explains about difference between a File and a Folder. It give details about how to create a File and a Folder. The software application to create Animation is given.

 

- WTS Team
Full View

அலகு 13 - உயிரினங்களின் அமைப்பு நிலைகள் (Unit 13 - Structural Organisation of Animals)

இந்த அலகு அட்டை மற்றும் முயலின் புறஅமைப்பு மற்றும் பல்வேறு உறுப்பு மண்டலங்களின் உடற் செயலியல் நிகழ்வுகள் பற்றி விளக்குகிறது. அட்டையின் ஒட்டுண்ணித் தகவகைமைப்பு மற்றும் முயலின் பல்லமைப்பை அடையாளம் காணுதல் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி விவரிக்கிறது. முதுகெலும்பற்ற (அட்டை) மற்றும் முதுகெலும்புள்ள (முயல்) உயிரினங்களின் தோற்ற அமைப்பில் காணப்படும் வேறுபாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

This unit explains the external morphology the physiology of various organ systems of the leech and rabbit. It give details about the parasitic adaptations of leech and the type of dentition and its significance in rabbit. The differences between the structural organisation of an invertebrate (leech) and vertebrate (rabbit) are given.

 

- WTS Team
Full View

அலகு 14 - தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் (Unit 14 - Transportation in Plants and Circulation in Animals)

இந்த அலகு தாவரங்களுக்கு மண்ணிலிருந்து நீர் மற்றும் கனிமங்கள் எவ்வாறு செல்கிறது என்பதை விளக்குகிறது. சவ்வூடு பரவல் மற்றும் நீராவிப் போக்கு நிகழ்ச்சி மற்றும் இரத்தத்தின் இயைபினைப் பற்றி விவரிக்கிறது. இதயத்தின் அமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய இரத்த நாளங்களை அடையாளம் காணுதல் பற்றி விளக்குகிறது. நிணநீர் மண்டலத்தின் பங்கினைப் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

This unit explains how the water and minerals move from soil to the plant.  It give details about role of osmosis and transpiration and the composition of blood. It explains the structure of heart and associated blood vessels. The role of lymphatic system are given.

 

- WTS Team
Full View

அலகு 15 - நரம்பு மண்டலம் (Unit 15 - Nervous System)

இந்த அலகு நரம்பு மண்டலத்தின் உட்கூறுகளை பற்றி விவரிக்கிறது. நரம்புத் தூண்டல்கள் எவ்வாறு கடத்தப்படுகின்றன மற்றும் மனித நரம்பு மண்டலத்தின் பல்வேறு பிரிவுகள் பற்றி விளக்குகிறது. அனிச்சை செயலின் முக்கியத்துவம் மற்றும் செயல்படும் பாதையினைப் பற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன.  

This unit explains the components of the nervous system. It give details about the transmission of nerve impulses and the divisions of human nervous system. The significance of reflex action and its operative pathway are given.

- WTS Team
Full View

அலகு 16 - தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் (Unit 16 - Plant and Animal Hormones)

இந்த அலகு ஹார்மோன்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் வளர்ச்சி அடக்கிகள் என தாவர ஹார்மோன்களை வகைப்படுத்துதல் பற்றியும் விவரிக்கிறது. மனித உடலில் உள்ள பல்வேறு நாளமில்லாச் சுரப்பிகள்,   நாளமில்லாச் சுரப்பிகள் மற்றும் நாளமுள்ள சுரப்பிகள் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாட்டினைப் பற்றி விளக்குகிறது. ஹார்மோன்கள் சுரத்தலின் காரணமாக ஏற்படும் பல்வேறு குறைபாடுகளை அடையாளம் காணுதல் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

This unit explains about hormones and classification of plant hormones into growth promoters and growth inhibitors. It give details about the various endocrine glands in the human body and differences between exocrine and endocrine glands. Identification of the disorders which occur due to decreased or increased hormone secretion are explained.

- WTS Team
Full View

அலகு 17 - தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் (Unit 17 - Reproduction in Plants and Animals)

இந்த அலகு மலரின் பாகத்தையும் அதன் பணிகளையும் பற்றி விளக்குகிறது.  மகரந்தச்சேர்க்கையின் வகைகள், நடைபெறும் விதம் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்குகிறது. மனிதரில் நடைபெறும் பாலினப்பெருக்க நிகழ்வுகளைப் பற்றி விவரிக்கிறது. விந்தக மற்றும் அண்டக செல்களின் அமைப்பு, மனிதனின் விந்து மற்றும் அண்டத்தின் அமைப்பை விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் அதன் உத்திகள்,  தன் சுகாதாரம் மற்றும் சமூக சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டுள்ளது.  

This unit explpains about the parts of flower and their functions. It give details about the types and modes of pollination and their significance. It explains about the process of sexual reproduction in human beings. The structure of testicular and ovarian cells, the structural details of human sperm and ovum are explained. Awareness on reproductive health and strategies,  personal and social hygiene are given.

- WTS Team
Full View

அலகு 18 - மரபியல் (Unit 18 - Genetics)

இந்த அலகு மெண்டலின் விதிகள் ஒரு பண்பு மற்றும் இரு பண்புக் கலப்பு பற்றி விளக்குகிறது. குரோமோசோமின் அமைப்பு மற்றும் சென்ட்ரோமியரின் நிலைக்குத் தகுந்தவாறு குரோமோசோம்களை வகைப்படுத்துதல் பற்றி விளக்குகிறது. டி.என்.ஏ.வின் அமைப்பு மற்றும் இரட்டிப்பாதலைப் பற்றி விவரிக்கிறது.

 This unit explains about Mendelian laws and the process of monohybrid and dihybrid cross. It give details about the structure of chromosome and classifying the chromosomes based on the position of centromere. It explains  the structure and replication of DNA.

- WTS Team
Full View

அலகு 19 - உயிரின் தோற்றமும் பரிணாமமும் (Unit 19 - Origin and Evolution of Life)

இந்த அலகு உயிரினங்களின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளைப் பற்றி விவரிக்கிறது. லாமார்க் மற்றும் டார்வினின் கொள்கைகளைப் பரிணாமத்தோடு தொடர்புபடுத்தி விளக்குகிறது. புதைபடிவங்களின் முக்கியத்துவம் மற்றும் புதைப்படிவ உருவாக்கச் செயல்முறைகள் விளக்குதல் பற்றி விவரிக்கிறது. வட்டார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்களை அடையாளம் காணுதல் மற்றும் வேற்றுக்கிரக உயிரிகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

This unit explains about the theories of origin of life. It give details about the principles of Lamarck and Darwin with evolution. It explains the importance of fossils and describe the process of fossilization. Explains identification of the plants of ethnobotanical importance and about extraterrestrial life.

- WTS Team
Full View

அலகு 20 - இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் (Unit 20 - Breeding and Biotechnology)

இந்த அலகு தாவரப் பயிர்ப்பெருக்கத்தின் படிநிலைகள் மற்றும் முறைகள் பற்றி விவரிக்கிறது. விலங்கினப் பெருக்கத்தையும் அதன் தாக்கங்கள் பற்றியும் விளக்குகிறது. கலப்பின வீரியம் மற்றும் அதன் முக்கியத்துவம், மரபுப் பொறியியலின் பல்வேறு படிநிலைகளைப் பற்றி விவரிக்கிறது. னுNயு விரல்ரேகை தொழில்நுட்பத்தின் நடைமுறைப் பயன்பாடுகள் மற்றும் குருத்தணு செயல்நுட்பத்தின் முக்கியத்துவம் பற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.

This unit explains the steps and methods involved in plant breeding. It give details about animal breeding and its implications. It explains hybrid vigour and its importance, the steps involved in genetic engineering. The practical applications of DNA fingerprinting and the importance of stem cell technology are given.

- WTS Team