வரலாற்றில் இன்று...

01

1991 – உசுபெக்கிசுத்தான், சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.

1979 – நாசாவின் பயனியர் 11 ஆளில்லா விண்கலம் சனி கோளை 21,000 கிமீ தூரத்தில் அடைந்தது. இதுவே முதன் முதலில் சனியை அடைந்த விண்கலம் ஆகும்.

02

1970 – சந்திரனுக்கான அப்பல்லோ 15, அப்பல்லோ 18 ஆகிய திட்டங்கள் கைவிடப்பட்டதாக நாசா அறிவித்தது.

2018 – பிரேசிலின் தேசிய அருங்காட்சியகம் தீக்கிரையானது. அங்கிருந்த 90% படைப்புகள் அழிந்தன.

03

1976 – அமெரிக்காவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் தரையிறங்கி செவ்வாயின் மிகக் கிட்டவான வண்ணப் படங்களை பூமிக்கு அனுப்பியது.

1981 – பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் அவையில் கொண்டு வரப்பட்டது

2017 – வட கொரியா தனது ஆறாவதும், மிகவும் ஆற்றல் மிக்கதுமான அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.

04

1972 – மார்க் ஸ்பிட்சு ஒரே ஒலிம்பிக் போட்டியில் ஏழு பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தார்.

1978 – அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1985 – கரிமத்தின் முதலாவது புலரின் மூலக்கூறு பக்மின்ஸ்டர்ஃபுலரின் கண்டுபிடிக்கப்பட்டது.

05

1980 – உலகின் மிக நீளமான நெடுஞ்சாலைச் சுரங்கமான கோதார்ட் சாலைச் சுரங்கம் (16.224 கிமீ) சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டது.

1984 – டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்பியது.

1991 – பழங்குடியினரைப் பாதுகாக்கும் பன்னாட்டு உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.

06

1951 – தினமலர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது.

1968 – சுவாசிலாந்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.

07

1927 – முதலாவது முழுமையான இலத்திரனியல் தொலைக்காட்சிப் பெட்டி பைலோ பார்ன்சுவர்த் என்பவரால் அமைக்கப்பட்டது.

1988 – சோவியத் மீர் விண்வெளி நிலையத்தில் ஒன்பது நாட்கள் தங்கியிருந்த ஆப்கானித்தானின் முதலாவது விண்வெளி வீரர் அப்துல் அகாது மொகுமாண்டு சோயூஸ் விண்கலத்தில் பூமி திரும்பினார்.

2005 – எகிப்தில் முதலாவது பல-கட்சி அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெற்றது.

08

1926 – செருமனி உலக நாடுகள் சங்கத்தில் இணைந்தது.

2016 – நாசா ஒசைரிசு-ரெக்சு என்ற தனது சிறுகோள்-நோக்கிய விண்கலத்தை ஏவியது. இது 101955 பென்னு என்ற சிறுகோளில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு 2023 இல் பூமி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இன்று அனைத்துலக எழுத்தறிவு நாள் கொண்டாடப்படுகிறது.

09

1799 – பாஞ்சாலக்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.

1947 – முதல் தடவையாக மென்பொருள் வழு ஒன்று ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் கணினி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.

2016 – வட கொரியா தனது ஐந்தாவதும், மிகப்பெரியதுமான அணுவாயுத சோதனையை மேற்கொண்டது.

10

இன்று உலக தற்கொலைத் தவிர்ப்பு நாள் ஆகும்.

2002 – சுவிட்சர்லாந்து, ஐநாவில் முழு உறுப்பு நாடாக இணைந்தது.

2008 – வரலாற்றில் மிகப்பெரும் அறிவியல் கருவியான ஐரோப்பிய அணு ஆய்வு நிறுவனத்தின் பெரிய ஆட்ரான் மோதுவி ஜெனீவாவில் இயங்க ஆரம்பித்தது.

11

1893 – முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு சிக்காகோவில் ஆரம்பமானது.

1934 – தினமணி நாளிதழ் வெளியிடப்பட்டது.

1997 – நாசாவின் மார்சு செர்வயர் விண்கலம் செவ்வாயை அடைந்தது.

12

1959 – லூனா 2 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் ஏவியது. சந்திரனை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1992 – நாசாவின் எண்டெவர் விண்ணோடம் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்ணான மேய் சரோல் ஜமிசன் என்பவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.

13

1956 – ஐபிஎம் முதல் தடவையாக வட்டு சேமிப்பை (Disk storage) அறிமுகப்படுத்தியது.[1]

2007 – பழங்குடிகளின் உரிமைகள் குறித்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

14

1954 – சோவியத் ஒன்றியம் அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.

1959 – சோவியத்தின் லூனா 2 விண்கலம் சந்திரனில் மோதியது. சந்திரனில் இறங்கிய மனிதனால் அமைக்கப்பட்ட முதலாவது விண்கலம் இதுவே.

2000 – விண்டோஸ் மில்லேனியம் வெளியிடப்பட்டது.

2003 – சுவீடனில் இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பில் யூரோ நாணயத்தை ஏற்றுக் கொள்ளும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

15

இன்று அனைத்துலக மக்களாட்சி நாள் ஆகும். 

1968 – சோவியத்தின் சொண்ட் 5 விண்கலம் ஏவப்பட்டது. சந்திரனைச் சுற்றி வந்து பூமியின் காற்று மண்டலத்தினுள் நுழைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1981 – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

2017 – சனிக் கோளை ஆய்வு செய்வதற்காக 1997 இல் ஏவப்பட்ட காசினி-ஐசென் விண்கலம் தன் பணிகளை முடித்துக்கொண்டு அழிந்தது.

16

பன்னாட்டு ஓசோன் படலப் பாதுகாப்பு நாள் ஆகும்.

1956 – ஆத்திரேலியாவின் முதலாவது தொலைக்காட்சி சேவை டிசிஎன் ஆரம்பமானது.

1959 – முதலாவது வெற்றிகரமான ஒளிநகலி செராக்சு 914 நியூயார்க்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1990 – சீனாவுக்கும் கசக்ஸ்தானுக்கும் இடையே தொடருந்து சேவை ஆரம்பமானது.

17

இன்று ஆத்திரேலியக் குடியுரிமை நாள்.

1974 – வங்காளதேசம், கிரெனடா, கினி-பிசாவு ஆகியன ஐநாவில் இணைந்தன.

1976 – நாசா தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசசு பற்றிய தகவல்களை வெளியிட்டது.

1997 – பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

2004 – இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

18

இன்று உலக நீர் கண்காணிப்பு நாள்.

1934 – உலக நாடுகள் அணியில் சோவியத் ஒன்றியம் இணைந்தது.

1977 – வொயேஜர் 1 விண்கலம் பூமியையும் சந்திரனையும் சேர்த்துப் படம் எடுத்தது.

1980 – சோயுஸ் 38 கியூபாவைச் சேர்ந்த விண்வெளி வீரருடனும் ஒரு உருசியருடனும் விண்வெளி சென்றது.

19

1893 – உலகின் முதலாவது நாடாக நியூசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1893 – சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.

20

1955 – சோவியத் ஒன்றியத்துக்கும் கிழக்கு செருமனிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.

1966 – சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனை நோக்கிச் செலுத்தப்பட்டது.

1977 – வியட்நாம் ஐநாவில் இணைந்தது.

1993 – துருவ செயற்கைக்கோள் ஏவுகணையை இந்தியா ஏவியது.

21

இன்று உலக அமைதி நாள் ஆகும்.

2001 – நாசாவின் டீப் ஸ்பேஸ் 1 விண்கலம் பொரெல்லி வால்வெள்ளிக்குக் கிட்டவாக 2,200 கிமீ தூரத்திற்குள் சென்றது.

2003 – கலிலியோ விண்கலத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு அது வியாழனின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதவிடப்பட்டது.

22

1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் காஷ்மீர் தொடர்பாக இடம்பெற்ற போர் ஐநாவின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று முடிவுக்கு வந்தது.

2014 – நாசாவின் மாவென் விண்கலம் செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது.

23

1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965 முடிவுக்கு வந்தது.

1966 – நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனின் கோர்ப்பனிக்கஸ் என்ற இடத்தில் மோதியது.

1986 – இலங்கை கொழும்பில் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.

24

1960 – அணுவாற்றலில் இயங்கும் உலகின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் "என்டர்பிரைசு" அமைக்கப்பட்டது.

1990 – சனிக் கோளில் பெரும் வெண் புள்ளி ஒன்று தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டது.

2014 – மங்கல்யான் விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டத்தில் செலுத்தப்பட்டது.

25

1789 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அமெரிக்க அரசியலமைப்பிற்கு உரிமைகளுக்கான 10 திருத்தங்கள் உட்பட 12 திருத்தங்களைக் கொண்டு வந்தது.

1862 – செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

1992 – செவ்வாய்க் கோளை நோக்கிய "செவ்வாய் நோக்கி" என்ற விண்கலத்தை நாசா ஏவியது. 11 மாதங்களின் பின்னர் இவ்விண்கலம் செயலிழந்தது.

26

1905 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்புச் சார்புக் கோட்பாடு தொடர்பான முதலாவது ஆய்வை வெளியிட்டார்.

1953 – ஐக்கிய இராச்சியத்தில் சீனி மீதான பங்கீட்டு முறை நிறுத்தப்பட்டது.

2008 – சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இவெசு ரொசி ஆங்கிலக் கால்வாயை ஜெட் இயந்திரம் பூட்டப்பட்ட இறக்கை மூலம் கடந்த முதலாவது மனிதர் என்ற சாதனை படைத்தார்.

27

இன்று உலக சுற்றுலா நாள்

1928 – ஐக்கிய அமெரிக்கா சீனக் குடியரசை அங்கீகரித்தது.

2002 – கிழக்குத் தீமோர் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.

2007 – நாசா டோன் விண்கலத்தை சிறுகோள் பட்டையை நோக்கி ஏவியது.

28
test
29
test
30
test