வரலாற்றில் இன்று...

01
 • 1936 – பெர்லினில் 11-வது ஒலிம்பிக் விளையாட்டுக்களை இட்லர் ஆரம்பித்து வைத்தார்.
 • 1960 – பாக்கித்தான் நடுவண் அரசின் தலைநகராக இசுலாமாபாத் அறிவிக்கப்பட்டது.
 • 2008 – உலகின் மிக வேகமான தொடருந்து சேவை சீனாவில் பெய்ஜிங், தியான்ஜின் ஆகிய நகரங்களுக்கிடையே ஆரம்பிக்கப்பட்டது.
02
 • 2002 – உலகத்தை பலூனில் தனியே இடைவேளை விடாது பறந்த முதல் மனிதர் என்ற சாதனையை ஸ்டீவ் பொசெட் பெற்றார்.
 • 2004 – ஆசியான் அமைப்பில் பாக்கித்தான் இணைந்தது.
 • 2013 – உலகளாவிய வானியல் ஒன்றியம் புளூட்டோவின் நான்காம், ஐந்தாம் சந்திரன்களுக்கு கெர்பரோசு, ஸ்டிக்சு எனப் பெயரிட்டது.
03
 • 1946 – உலகின் முதலாவது பல வணிக நோக்குடைய கேளிக்கைப் பூங்கா அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
 • 1949 – அமெரிக்காவின் என். பி. ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்) அமைப்பு உருவானது.
 • 1976 – காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
04
 • 1924 – மெக்சிக்கோவும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஏற்படுத்தின.
 • 1972 – சிம்லா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
 • 2007 – நாசாவின் பீனிக்சு விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
05
 • 1874 – சப்பான் அஞ்சல் சேமிப்புத் திட்டத்தை ஆரம்பித்தது
 • 1914 – முதலாவது மின்சார சைகை விளக்கு அமெரிக்காவில் கிளீவ்லாந்தில் நிறுவப்பட்டது
 • 1965 – பாக்கித்தானியப் படையினர் எல்லைக் கோட்டைத் தாண்டி உள்ளூர் மக்கள் வேடத்தில் இந்தியாவிற்குள் புகுந்தனர். இந்திய-பாக்கித்தான் போர் ஆரம்பமானது
06
 • 1990 – வளைகுடாப் போர்: குவைத் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக ஈராக் மீது உலகளாவிய பொருளாதாரத் தடையை விதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கோரியது.
 • 1991 – உலகளாவிய வலை (WWW) தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ்-லீ வெளியிட்டார்.
 • 2012 – நாசாவின் கியூரியோசிட்டி தரையுளவி செவ்வாய்க்கோளில் தரையிறங்கியது.
07
 • 1955 – சோனி தனது முதலாவது டிரான்சிஸ்டர் வானொலிகளை சப்பானில் விற்பனைக்கு விட்டது.
 • 1976 – வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.
08
 • 1876 – தாமசு ஆல்வா எடிசன் மிமியோகிராஃப் என்ற பதிவு செய்யும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்
 • 1947 – பாக்கித்தானின் தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்டது.
 • 2008 – சீனா, பெய்ஜிங் நகரில் 29-வது ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.
09
 • பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
 • 1892 – தாமசு ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.
 • 1965 – சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு தனி நாடாக்கப்பட்டது.
10
 • 1821 – மிசூரி ஐக்கிய அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 • 1948 – சவகர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் துவக்கி வைத்தார்.
 • 1990 – மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.
11
 • 1962 – வஸ்தோக் 3 விண்கலம் பைக்கனூரில் இருந்து ஏவப்பட்டது. அந்திரியன் நிக்கொலாயெவ் நுண்ணீர்ப்பு விசையில் மிதந்த முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
 • 1999 – ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.
12
 • இன்று உலக யானைகள் தினம் மற்றும் உலக நூலக தினம் கொண்டாடப்படுகிறது. 
 • 1812 – கொழும்பு நூலகம் அமைக்கப்பட்டது.
 • 1981 – ஐபிஎம் தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது.
13
 • இன்று பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள். 
 • 1889 – நாணயங்கள் மூலம் தொலைபேசிகளைக் கட்டுப்படுத்தும் கருவி வில்லியம் கிரே என்பவரால் அமெரிக்காவில் ஹார்ட்பர்ட் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது.
 • 1969 – அப்பல்லோ 11 விண்வெளிவீரர்கள் நியூயார்க் நகரில் வெற்றி ஊர்வலம் வந்தார்கள்.
14
 • 1893 – வாகனப் பதிவை பிரான்சு உலகில் முதல் நாடாக அமுல்படுத்தியது.
 • 2015 – கியூபாவில் அவானா நகரில் 54 ஆண்டுகளின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா தனது தூதரகத்தைத் திறந்தது.
15
 • 1947, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற நாள்.
 • 1914 – பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.
16
 • 1930 – பிடில்சுடிக்சு என்ற முதலாவது வண்ணக் கேலித் சித்திரத் திரைப்படம் வெளியிடப்பட்டது.
 • 1960 – சைப்பிரசு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
 • 1962 – பிரெஞ்சு இந்தியப் பகுதிகள் இந்தியாவுக்குத் திருப்பிக் கொடுத்து எட்டு ஆண்டுகளின் பின்னர், பிரெஞ்சு நாடாளுமன்றம் இவ்வுடன்பாட்டை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது.
17
 • இந்தோனேசியா, சப்பானிடம் இருந்து 1945 விடுதலை அடைந்தது. 
 • 1970 – வெனேரா 7 விண்கலம் ஏவப்பட்டது. வேறொரு கோளில் இருந்து (வெள்ளி) வெற்றிகரமாகத் தகவல்களை அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
 • 1977 – சோவியத் ஒன்றியத்தின் ஆர்க்திக்கா வடதுருவத்தை அடைந்த முதலாவது தரைக்கப்பல் ஆகும்.
 • 2008 – அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் ஃபெல்ப்ஸ் ஒரே ஒலிம்பிக் போட்டியில் அதிகமான எட்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
18
 • 1920 – பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டு வரப்பட்டது.
 • 1928 – சென்னை மியூசிக் அகாதமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.
 • 1945 – சுகர்ணோ இந்தோனேசியாவின் முதலாவது அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
19
 • இன்று உலகப் புகைப்பட நாள் மற்றும் உலக மனிதநேய நாள் கொண்டாடப்படுகிறது. 
 • 1895 – கொழும்பு தலைமை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது.
 • 1964 – சின்கொம் 3 என்ற முதலாவது புவிநிலை தகவற் செயற்கைக்கோள் ஏவப்பட்டது.
20
 • இந்தியாவில் இன்று மத நல்லிணக்க தினம் கொண்டாடப்படுகிறது. 
 • 1975 – நாசா வைக்கிங் 1 என்ற விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.
 • 1988 – ஈரான் – ஈராக் போர்: 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.
21
 • 1888 – முதலாவது வெற்றிகரமான கூட்டல் கருவி அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
 • 1911 – லியனார்டோ டா வின்சியின் மோனா லிசா ஓவியம் பாரிசின் இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.
 • 1993 – நாசா மார்சு ஒப்சர்வர் விண்கலத்துடனான தொடர்பை இழந்தது.
22
 • 1849 – ஆஸ்திரியா ஆளில்லா ஊதுபைகளை வெனிசு நகரத்துக்கு எதிராக அனுப்பியது. வரலாற்றில் முதலாவது வான் தாக்குதல் இதுவாகும்.
 • 1864 – 12 நாடுகள் இணைந்து ஜெனீவாவில் ஆயுத மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு விதிகளை உருவாக்கின.[1]
 • 1872 – இலங்கையில் முதலாவது அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டது.
 • 1989 – நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்டது.
23
 • 1947 – இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது.
 • 1991 – உலகளாவிய வலை பொது மக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது.
24
 • 1949 – வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) அமுலுக்கு வந்தது.
 • 1954 – அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.
 • 1991 - உக்ரைன், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. 
25
 • 1981 – வொயேஜர் 2 விண்கலம் சனிக்கு மிகக்கிட்டவாகச் சென்றது.
 • 1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது.
 • 2012 – வொயேஜர் 1 விண்கலம் விண்மீனிடைவெளிக்குச் சென்ற முதலாவது மனிதரால் உருவாக்கப்பட்ட விண்பொருள் என்ற சாதனையை நிலைநாட்டியது.
26
 • 1966 – தென்னாப்பிரிக்காவில் எல்லைப் போர் ஆரம்பமானது.
 • 1978 – முதலாவது செருமனிய விண்வெளி வீரர் சோயூஸ் விண்கலத்தில் விண்ணுக்குப் பயணமானார்.
27
 • 1956 – உலகின் முதலாவது வணிக-ரீதியாக மின்சாரம் உற்பத்தி செய்யும் அணு மின் நிலையம் ஐக்கிய இராச்சியத்தில் கால்டர் ஹால் என்ற இடத்தில் நிறுவப்பட்டது.
 • 1957 – மலேசியாவின் அரசியலமைப்பு சாசனம் அமுலானது.
 • 1962 – நாசா மரைனர் 2 விண்கலத்தை வீனசு கோளை நோக்கி ஏவியது.
 • 2003 – செவ்வாய்க் கோள் பூமிக்கு மிகக் கிட்டவாக (55,758,006 கிலோமீட்டர் தூரத்துக்கு) கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது.
28
 • 1757 – முதலாவது ரூபாய் நாணயம் கல்கத்தாவில் வார்க்கப்பட்டது.
 • 1789 – சனிக் கோளின் என்சலடசு என்ற புதிய சந்திரனை வில்லியம் எர்செல் கண்டுபிடித்தார்.
 • 1845 – சயன்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது.
 • 1990 – குவைத்தைத் தனது புதிய மாகாணமாக ஈராக் அறிவித்தது.
29
 • இன்று இந்தியாவில் தேசிய விளையாட்டு நாள் கொண்டாடப்படுகிறது.
 • 1498 – வாஸ்கோ ட காமா கோழிக்கோட்டில் இருந்து போர்த்துக்கல் திரும்ப முடிவு செய்தார்.
 • 1831 – மைக்கேல் பரடே மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார்.
 • 1869 – உலகின் முதலாவது மலையேற்ற பற்சட்ட இருப்புப்பாதை வாசிங்டனில் அமைக்கப்பட்டது.
30
 • 1945 – ஆங்காங் மீதான யப்பானியரின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.
 • 1835 – ஆத்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
 • 1984 – டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
31
 • 1994 – ஐரியக் குடியரசு இராணுவம் போர்நிறுத்தத்தை அறிவித்தது.
 • 1998 – வட கொரியா தனது முதலாவது செயற்கைக்கோளை ஏவியது.
 • 2006 – 2004 ஆகத்து 22 இல் களவாடப்பட்ட எட்வர்ட் மண்ச்சின் அலறல் என்ற பிரபலமான ஓவியம் நோர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டது.