வரலாற்றில் இன்று...

01

1995 – யாகூ! ஆரம்பிக்கப்பட்டது.

1896 – என்றி பெக்கெரல் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.

சிறப்பு நாள்: பாகுபாடுகள் ஒழிப்பு நாள்

02

1930 – மகாத்மா காந்தி உப்புச் சத்தியாகிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார்.

1989 – அனைத்து குளோரோபுளோரோகார்பன்களின் (CFC) தயாரிப்பையும் இந்நூற்றாண்டுக்குள் தடை விதிக்க 12 ஐரோப்பிய சமூக நாடுகள் உடன்பாட்டுக்கு வந்தன.

1998 – வியாழனின் சந்திரனான ஐரோப்பாவில் அடர்ந்த பனிக்கட்டியின் கீழ் திரவநிலையில் கடல் இருப்பதாக கலிலியோ விண்கலம் தகவல் அனுப்பியது.

03

1923 – டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.

1938 – சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.

சிறப்பு நாள்: உலகக் காட்டுயிர் நாள்

04

1275 – சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை அவதானித்தனர்.

1837 – சிகாகோ நகரம் அமைக்கப்பட்டது.

இந்திய தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் 

05

1981 – ZX81 என்ற பிரித்தானிய வீட்டுக் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது. உலகம் முழுவதிலும் 1.5 மில்லியன் கணினிகள் விற்பனை செய்யப்பட்டன.

1982 – சோவியத்தின் வெனேரா 14 விண்கலம் வெள்ளிக் கோளில் தரையிறங்கியது.

இறப்புகள்: 1827 – வோல்ட்டா, இத்தாலிய இயற்பியலாளர்

06

632 – முகம்மது நபி தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்.

1790 – மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1967 – திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.

07

1876 – அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார்.

1900 – கம்பியில்லா சமிக்கைகளை கரைப் பகுதிக்கு அனுப்பிய முதலாவது கப்பலாக செருமனியின் கைசர் விலெம் டெர் குரொசி சாதனை படைத்தது.

1996 – பாலத்தீனத்தில் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.

08

1817 – நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது.

1911 – அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.

சிறப்பு நாள்: அனைத்துலக பெண்கள் நாள்

09

1815 – மின்கலத்தால் இயக்கப்படும் மணிக்கூடு பற்றி முதன்முதலாக ஆங்கிலேயப் பொறியியலாளர் பிரான்சிசு ரொனால்ட்சு எழுதினார்.

1959 – பார்பி பொம்மை நியூ யோர்க் நகரில் அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சியில் முதன் முதலாகக் காட்சிக்கு வைக்கப்பட்டது.

2006 – சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.

10

1876 – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் வெற்றிகரமான தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்.

1922 – கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் இரண்டாண்டுகளில் குடல்வாலழற்சி காரணமாக விடுதலையானார்.

1977 – யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.

11

1702 – முதலாவது ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட் லண்டனில் வெளியிடப்பட்டது.

1784 – மங்களூர் உடன்படிக்கை எட்டப்பட்டதை அடுத்து இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.

12

1894 – முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.

1954 – சாகித்ய அகாதெமி இந்திய அரசினால் தொடங்கப்பட்டது.

சிறப்பு நாள்: மின்வெளித் தணிக்கைக்கு எதிரான உலக நாள்

13

1908 – நெல்லைக்கு வந்த வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டதை அடுத்து திருநெல்வேலியில் எழுச்சி ஏற்பட்டது. நால்வர் கொல்லப்பட்டனர்.

1921 – மங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.

1930 – புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்ட செய்தி ஆர்வர்டு கல்லூரி வான்காணகத்திற்கு தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது.

14

1931 – இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா வெளியிடப்பட்டது.

1942 – அமெரிக்காவில் முதல் தடவையாக சிகிச்சை ஒன்றில் பெனிசிலின் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.

15

1564 – முகலாயப் பேரசர் அக்பர் "ஜிஸ்யா" எனப்படும் தலைவரியை நீக்கினார்.

1951 – ஈரானில் எண்ணெய் உற்பத்தி தேசியமயமாக்கப்பட்டது.

சிறப்பு நாள்: 

காவல்துறையினரின் வன்செயல்களுக்கு எதிரான பன்னாட்டு நாள்

உலக நுகர்வோர் உரிமைகள் நாள்

உலக முசுலிம் கலாச்சார, அமைதி, கலந்துரையாடல், மற்றும் திரைப்பட நாள்

16

கிமு 597 – பபிலோனியா எருசலேமைக் கைப்பற்றியது. செடேக்கியா மன்னராக முடிசூடினார்.

1926 – முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும் ஏவூர்தியை மசாசுசெட்சில் இராபர்ட் காடர்ட் என்பவர் செலுத்தினார்.

1966 – ஜெமினி 8, நாசாவின் 12வது மனிதரைக் கொண்டுசென்ற விண்கலம், ஏவப்பட்டது.

17

1805 – நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான்.

1845 – இரப்பர் பட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

1950 – கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் "கலிபோர்னியம்" என்ற 98-வது தனிமத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.

18

1965 – சோவியத் விண்ணோடி அலெக்சி லியோனொவ் வஸ்கோத் 2 விண்கலத்தின் வெளியே 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.

1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இரண்டு ஆண்டுகளில் விடுதலை ஆனார்.

2003 – ஐக்கிய அமெரிக்கா ஈராக்க்குடன் போரை ஆரம்பித்தது. ஈராக்கின் மத்திய வங்கியில் இருந்து 1 பில்லியன் பெறுமதியான பணம் சதாம் உசைனினாலும் அவரது குடும்பத்தினராலும் எடுத்துச் செல்லப்பட்டது.

19

1915 – புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை.

1932 – சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

2018 – சூடான் என அழைக்கப்படும் கடைசி ஆண் வடக்கு வெள்ளை காண்டாமிருகம் இறந்தது.

20

1602 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.

1915 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது பொதுச் சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.

சிறப்பு நாள்:  உலகக் கதை படிக்கும் நாள்

                            உலக சிட்டுக்குருவிகள் நாள்

21

1965 – நாசா ரேஞ்சர் 9 என்ற சந்திரனுக்கான தனது ஆளில்லா விண்ணுளவியை ஏவியது.

2006 – டுவிட்டர் சமூக ஊடகம் உருவாக்கப்பட்டது.

சிறப்பு நாள்: பன்னாட்டு வன நாள், பன்னாட்டு வண்ண நாள், உலகக் கவிதை நாள், சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாள், உலக பொம்மலாட்ட நாள்

22

1945 – அரபு நாடுகள் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.

1982 – நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.

சிறப்பு நாள்:  உலக நீர் நாள்

23

1933 – இட்லர் செருமனியின் சர்வாதிகாரியானது நாடாளுமன்றத்தினால் சட்டபூர்வமாக்கப்பட்டது.

2001 – உருசியாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.

சிறப்பு நாள்: உலக வானிலை நாள்

24

1947 – மவுண்ட்பேட்டன் பிரபு பிரித்தானிய இந்தியாவின் ஆளுநரானார்.

2020 – இந்தியாவில் கொரோனா வைரசு பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

சிறப்பு நாள்: உலக காச நோய் நாள்

சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த நாள்

25

1655 – டைட்டன் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறித்தியான் ஐகன்சு கண்டுபிடித்தார்.

1954 – முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ஆர்சிஏ நிறுவனம் வெளியிட்டது. 

சிறப்பு நாள்: அடிமை வணிகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு நாள்

26

2006 – முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.

1971 – கிழக்கு பாகிஸ்தான் பாக்கித்தானிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. வங்காளதேச விடுதலைப் போர் ஆரம்பமானது.

2006 – மியான்மாரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.

27

1915 – குடற்காய்ச்சல் நோய்க்கிருமிகள் தொற்றிய டைஃபாய்டு மேரி என்பவர் அமெரிக்காவில் தனிமைப்படுத்தப்பட்டார். இவர் தனது வாழ்நாள் முழுவதையும் தனிமையில் கழித்தார்.

1969 – நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

சிறப்பு நாள்: உலக நாடக அரங்க நாள்

28

1737 – மராத்தியர்கள் பாஜிராவ் தலைமையில் முகலாயர்களை தில்லிப் போரில் தோற்கடித்தனர்

1802 – என்ரிக் ஒல்பெர்சு 2 பலாசு என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.

1959 – சீன மக்கள் குடியரசின் அரச மன்றம் திபெத்து அரசைக் கலைத்தது.

29

1807 – 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை செருமானியய வானியலாளர் ஐன்ரிக் ஓல்பர்சு கண்டுபிடித்தார்.

1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் மங்கள் பாண்டே பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.

2007 – கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.

30

1842 – அறுவைச் சிகிச்சைகளில் முதன்முதலாக ஈதர் மயக்க மருந்து குரோபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.

1858 – அழிப்பானுடன் கூடிய எழுதுகோலுக்கான காப்புரிமம் ஐமன் லிப்மன் என்பவரினால் பெறப்பட்டது.

1861 – சேர் வில்லியம் குரூக்சு தாலியம் தனிமத்தைக் கண்டுபிடித்தார்.

31

1889 – ஈபெல் கோபுரத்தின் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

1951 – அமெரிக்கவின் யூனிவாக் 1 என்ற முதலாவது வணிகக் கணினி அந்நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிறுவனத்துக்கு தரப்பட்டது.

1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இதுவே சந்திரனின் சுற்றுவட்டத்தை வலம் வந்த முதலாவது விண்கலமாகும்.