Share:

    பள்ளி காலை வழிபாடு

    நாள்:12-08-2022கிழமை:வெள்ளி

1. தினம் ஒரு திருக்குறள்

குறள் :

தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு.

விளக்கம் :

காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.

2. தினம் ஒரு பொன்மொழி

உலகிற்கு அரசனாக இருக்க வேண்டுமானால் முதலில் உன் மனதுக்கு சேவகனாக இருக்க பழகு!

3. தினம் ஒரு புதிய வார்த்தை

Loving - அன்பான

Lucky - அதிர்ஷடமான

4. வரலாற்றில் இன்று
  • இன்று உலக யானைகள் தினம் மற்றும் உலக நூலக தினம் கொண்டாடப்படுகிறது. 
  • 1812 – கொழும்பு நூலகம் அமைக்கப்பட்டது.
  • 1981 – ஐபிஎம் தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது.
5. இன்றைய செய்திகள்

  • தமிழகத்துக்கு ரூ.4,758 கோடி வரிப்பகிர்வு தொகையை மத்திய அரசு வழங்கியுள்ளது.
  • இலங்கையில் அரசுக்கு எதிராக நடந்து வந்த போராட்டம் 123 நாட்களுக்கு பிறகு நேற்று முடிவுக்கு வந்தது.
  • செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற 2 இந்திய அணிகளுக்கும் தலா ரூ.1 கோடி பரிசை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
  • The central government has given a tax distribution amount of Rs.4,758 crore to Tamil Nadu.
  • The protest against the government in Sri Lanka ended yesterday after 123 days.
  • Chief Minister M.K.Stalin gave a prize of Rs.1 crore each to the 2 Indian teams who won medals in the Chess Olympiad.