பள்ளி காலை வழிபாடு
நாள்:21-03-2023கிழமை:செவ்வாய்
1. தினம் ஒரு திருக்குறள்
குறள் :
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
விளக்கம் :
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
2. தினம் ஒரு பொன்மொழி
மாணவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம், அதன்மூலம் அவர்கள் தங்கள் நற்குணத்தை வளர்த்துக் கொள்ள முடியும்
3. தினம் ஒரு புதிய வார்த்தை
Escape - தப்பித்து ஓடு
Establish - நிர்மானி
4. வரலாற்றில் இன்று
1965 – நாசா ரேஞ்சர் 9 என்ற சந்திரனுக்கான தனது ஆளில்லா விண்ணுளவியை ஏவியது.
2006 – டுவிட்டர் சமூக ஊடகம் உருவாக்கப்பட்டது.
சிறப்பு நாள்: பன்னாட்டு வன நாள், பன்னாட்டு வண்ண நாள், உலகக் கவிதை நாள், சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாள், உலக பொம்மலாட்ட நாள்
5. இன்றைய செய்திகள்
- தமிழக சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) 2023-2024-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.
- ‘சமூகத்துக்கு பயன் அளிக்கும் ஆராய்ச்சிகளை விளையாட்டு துறையில் மேற்கொள்ள வேண்டும்' என தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறினார்.
- ஆசிய 20 கிலோமீட்டர் நடைபந்தய சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் நோமி நகரில் நேற்று நடந்தது. இதில் இந்திய நடைபந்தய வீரர்கள் விகாஷ், பரம்ஜீத் ஒலிம்பிக் போட்டிக்கு தொகுதி பெற்றுள்ளனர்.
- The budget for the financial year 2023-2024 will be tabled in the Tamil Nadu Assembly today (Monday). New announcements are likely to be released.
- Union Minister Anurag Thakur said at the convocation ceremony of Tamil Nadu Sports University that 'research that will benefit the society should be carried out in the field of sports'.
- The Asian 20km Walking Championship was held in Nomi, Japan yesterday. Indian runners Vikash and Paramjeet have qualified for the Olympics.