Share:

    பள்ளி காலை வழிபாடு

    நாள்:28-01-2023கிழமை:சனி

1. தினம் ஒரு திருக்குறள்

குறள் :

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

விளக்கம் :

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

2. தினம் ஒரு பொன்மொழி
உளிப்படாத கல் சிலையாவதில்லை உழைப்பில்லாக் கனவு நனவாவதில்லை
3. தினம் ஒரு புதிய வார்த்தை

Apparent - வெளிப்படையான

Appearance - தோற்றம்

4. வரலாற்றில் இன்று

1882 – சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.

1986 – சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73ஆவது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர்.

பிறப்பு

1865 – லாலா லஜபதி ராய், இந்திய எழுத்தாளர், அரசியல்வாதி 

5. இன்றைய செய்திகள்

  • தமிழக பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய வலைதளத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • ஜூனியர் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரைஇறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
  • உலகக் கோப்பை ஆக்கி இறுதிப்போட்டியில் ஜெர்மனி- பெல்ஜியம் அணிகள் நாளை மோதுகின்றன.
  • Chief Minister M. K. Stalin launched a new website created to monitor the activities of Tamil Nadu Public Sector Undertakings.
  • India beat New Zealand in the semi-finals of the Junior Women's 20 Over Cricket World Cup to qualify for the final.
  • Germany and Belgium will meet tomorrow in the final of the World Cup.