Text Data - Full View

Full View

தையற்கலைஞர் 

தையற்கலைஞர் என்பவர் பஞ்சுநூல் போன்ற வேறுபல இயற்கைப்பொருள்கள், செயற்கைப்பொருள்களால் ஆன நூலிழையால் நெய்த துணியைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட ஆளின் அல்லது சிறுவரின் உடலளவுக்கும் தேவைக்கும் ஏற்ப அத் துணியை வெட்டியும், தைத்தும் (பெரும்பாலும் நூலிழைகொண்டு பிணைத்தல்) ஒருவர் அணியத்தக்க ஆடையைச் செய்யும் கலைஞர். பொதுவாக இதனைத் பொருள் ஈட்டும் தொழிலாகக் கொண்டுள்ளோரைத் தையற்காரர் என்பர். ஆண்களும் பெண்களும் தையற்காரர்களாக இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் பரவலாக பயன்பட்டு வரும் வேட்டி, துண்டு, சீலை (புடவை) போன்றவை நெய்த துணியை அப்படியே தையற்கலைஞர் ஆடையாக செய்து தராமலேயே அணியும் ஆடைகள். ஆனால் சட்டை (முற்காலக் குப்பாயம்), கால்சட்டை (பேண்ட் என்னும் குழாய்க் கால்சட்டை), இந்திய, தமிழ்நாட்டுப் பெண்களின் மேற்சட்டை, குழந்தைகள் அணியாடைகள் முதலியன துணியைப் பல்வேறு வடிவங்களில் தக்க அளவுடன் வகுத்து (design), வெட்டித் தைத்து உருவாக்கும் ஆடைகள். இவற்றைத் தையற்கலைஞர்கள் செய்து தருகிறார்கள்.

தையற்கலைஞர்கள் மிகத் தொன்மையான காலங்களில் இருந்தே பணியாற்றி வந்திருந்த பொழுதும், பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் தற்கால முதன்மைப் பொருளில் பயன்பாட்டில் உள்ளது.

ஆங்கிலத்தில் தையற்கலையை டெய்லரிங் (tailoring) என்று தற்காலத்தில் கூறுகிறார்கள். வாடிக்கைக் காரர்களுக்கு தனிப்பட்ட முறையில் அவர்களின் உடலளவு, தேவை முதலியவற்றுக்கு ஏற்றவாறு தைத்துத் தருதலைச் சிறப்பாக பெ'சுப்போக் டெய்லரிங் (bespoke)என்று கூறுகிறார்கள். ஒருவரின் தனிப்பட்ட அளவுகளுக்கு ஏற்றார்போல அல்லாமல், குறிப்பிட்ட சில அளவுகளில் ஏற்கனவே தைத்து வைத்திருக்கும் ஆடைகளுக்கு அணிய ஆடை (ரெடிமேடு) என்று பெயர்.

Full View

6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையான தமிழ்நாடு தையல் வகுப்பு

தமிழ்நாடு இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளித் தொழிலில் இரண்டாமிடம் வகிக்கிறது. இந்தியாவின் மொத்த ஜவுளி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு தமிழகத்தில் தயாராகிறது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை தொழிற்கல்வி பாடத்தில் தையல் தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த தொழில் நுட்பத்தை பயின்ற மாணவர்கள் கைத்தறி, விசைத்தறி கூடங்கள், ஜவுளி ஆலைகள், மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்களில் சிறிது காலம் பயிற்சி பெற்று பணியில் சேர வாய்ப்பு உள்ளது. மேலும் இத்துறையிலேயே பட்டய மற்றும் பட்டப் படிப்பு மேற்கொள்வதற்கும் வழி வகுக்கிறது.

Full View

Embroidery / சித்திரத்தையல்   

சித்திரத்தையல் அல்லது பூப்பின்னல் (embroidery) என்பது, சித்திர வேலைப்பாடுடன் கூடிய கைவினைச் செயலாகும். ஊசி மற்றும் நூல் (Yarn), 'நூல் துணி', அல்லது பிற பொருள்களை அலங்கரிக்கும் நேர்த்தியான கைப்பணியாகக் கருதப்படுகிறது. சித்திர வேலைப்பாடுகள், 'உலோக கீற்றுகள்' (metal strips), முத்துக்கள் (pearls), மணிகள் (beads), இறகுகள் (quills), மற்றும் 'வட்டுக்கள்', (sequins) போன்ற பொருள்களைக் கொண்டு ஒருங்கிணைத்துச் செய்யப்படும் கலை மிளிரும் கைப்பணியாகும்

ஊசி நூலை வைத்து பல கதைகளைச் சித்திரப்படுத்தும் கலை `எம்ப்ராய்டரி'. எண்ணற்ற கலை, கலாசாரங்களை உள்ளடக்கிய நாடு, இந்தியா. நடனம், இசை, ஓவியம் எனப் பல்வேறு கலைகளில் முதன்மையாய் விளங்கும் நம் நாட்டின் பிரதானக் கலைகளில் முக்கியமான ஒன்று கைவினைத்தொழில். ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவத்தைப் பதித்து, வித்தியாசமான எம்ப்ராய்டரி டிசைன்களை வழங்கிக்கொண்டிருக்கிறது ஆடை உலகம்.

முத்துமணிகள், பீட்ஸ் (Beads), சீக்வன்ஸ், Quills முதலியவற்றைக்கொண்டும், கலாசாரத்தன்மை மாறாமலும் தற்போது எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. துணிகளில் மட்டுமல்லாமல், ஹேண்ட்பேக், கோட், தொப்பி, போர்வை என இணை ஆபரணங்களும் எம்ப்ராய்டரி வழியே அலங்கரிக்கப்படுகிறது. பெரும்பாலான எம்ப்ராய்டரி டிசைன்கள், முகலாயர்களின் வருகைக்குப்  பிறகே பின்பற்றப்பட்டன.

வளமான கலாசாரம் மற்றும் பாரம்பர்யத்தைப் போற்றும்விதமாக, வெவ்வேறு மாநிலங்களில் தோன்றிய `எம்ப்ராய்டரி' வேலைப்பாடுகளின் தொகுப்பு...

ஆரி (Aari):

12-ம் நூற்றாண்டில் காஷ்மீர், கட்ச், லக்னோ முதலிய இடங்களில் பின்பற்றப்பட எம்ப்ராய்டரி வகை `ஆரி'. இது `க்ரூவல்' (Crewel) எனும் நீளமான கொக்கி முனைகொண்ட ஊசியை வைத்து சிக்கலான வேலைப்பாடுகளைக்கொண்டது. முதலில் முகலாயர்களின் உருவங்கள், சிற்பங்கள் போன்றவற்றைத் தையலிட்டனர். பிறகு, காலத்துக்கு ஏற்ப டிசைன்களும் நிறங்களும் மாற்றியமைப்பட்டன. ஜரி காட்டன் அல்லது பட்டுநூல்தான் ஆரி வேலைப்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் வேலைப்பாடு, அடர்த்தியான மோட்டீஃப் (Motif) கொண்டது. பிரகாசமான வண்ணங்களால் அலங்காரப்படுத்துவதால் இதன் வேலைப்பாடு மிக யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும்.

சிக்கன்கரி (Chikankari):

முகலாய மன்னன் ஜஹாங்கீரின் மனைவி நூர்ஜஹானால் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் இந்த சிக்கன்கரி எம்ப்ராய்டரி வேலைப்பாடு, கி.பி.3-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்கப் பயணி மெகஸ்தன் இந்தியாவைப் பற்றிக் கூறுகையில் `சிக்கன்கரி' வேலைப்பாடுகளையும் குறிப்பிட்டுள்ளார். பூக்கள் மற்றும் விலங்குகளின் உருவங்களைக்கொண்டு டிசைன் செய்யப்படும் இந்த சிக்கன்கரி எம்ப்ராய்டரி, பெரும்பாலும் வெள்ளை நூல்களைக்கொண்டுதான் பூ  தையலிடுவார்கள். ஆனால், தற்போது பல வண்ணங்களில் டிசைன் செய்யப்படுகிறது. லக்னோவைப் பூர்விகமாகக்கொண்ட சிக்கன்கரி எம்ப்ராய்டரியை, 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் புவியியல் குறிப்பானாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டா (Gotta):

ராஜஸ்தானில் தோன்றிய `கோட்டா' வேலைப்பாடு, ஒருவகையான மெட்டல் எம்ப்ராய்டரி. `அப்ளிக்' எனும் தொழில்நுட்பத்தைக்கொண்டு செய்யப்படும் இந்த எம்ப்ராய்டரியில் சில்வர், கோல்டு, வெண்கலம் போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது பெரும்பாலும் ஆடையின் விளிம்புகளிலேயே டிசைன் செய்யப்படும் மிக கனமான வேலைப்பாடு. இந்த கோட்டா எம்ப்ராய்டரியை டிசைனர் புடவை, லெஹெங்கா சோலி, குஷன் கவர் போன்றவற்றில் தையலிடலாம். பூக்கள், பறவை, விலங்கு, மனித உருவங்களை இந்த கோட்டா வேலைப்பாடுகள் மூலம் ஆடைகளில் தையலிடலாம்.

புல்காரி (Phulkari):

`பூக்கள் நிறைந்த வேலைப்பாடு' எனும் அர்த்தம்கொண்ட `புல்காரி எம்ப்ராய்டரி', பஞ்சாப்பில் தோன்றியது. துணியின் மையத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் இதன் வேலைப்பாடு, விளிம்பு வரை பூக்கள் வடிவமைப்பைக்கொண்டு தையலிடப்படும். இது துணியின் அடிப்பக்கத்தில் பின்னப்படும். கனமான காட்டன் துணிகளில், பட்டுநூல்கொண்டு எம்ப்ராய்டரி செய்யப்படும் இந்த டிசைனின் ஸ்பெஷாலிட்டி, சிவப்பு வண்ணம்தான். அதிகப்படியான புல்காரி டிசைன் சிவப்பு, மஞ்சள் காம்பினேஷனில்தான் தயாராகிறது. துப்பட்டா, ஸ்வெட்டர் முதலிய இணை ஆடைகளில் அதிகம் காணலாம்.

கசூத்தி (Kasuti):

கர்நாடக நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றான `கசூத்தி' எம்ப்ராய்டரி, சுமார் 5000 கை தையல்களைக்கொண்டது. புடவை, குர்த்தா போன்ற ஆடைகளில் இந்த வேலைப்பாட்டை அதிகம் காணலாம். இது சாளுக்கியர்களால் பரவப்பட்ட `வேலைப்பாடு' என்ற வரலாறு உண்டு. காட்டன் துணியில், கண்ணாடி வேலைப்பாடு, கோல்டு மற்றும் சில்வர் நிற நூலைக்கொண்டு பின்னும் டிசைன் என ஏகப்பட்ட வெரைட்டிகள் உள்ளன. திருமண நாள்களில், கர்நாடக மணப்பெண்கள் உடுத்தும் உடைகளில் கசூத்தி வேலைப்பாடு இல்லாமல் இருக்காது. இது மிகவும் காஸ்ட்லியான வெளிப்பாடும்கூட.