பேராசை - வறுமையைக் குறிக்கிறது, ஆசையின்மை - செல்வத்தைக் குறிக்கிறது. 

ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பா்கள் அவனது பத்து விரல்களே.

வெற்றி தோல்வி நம் கையில் இல்லை. முயல்வது மட்டும் தான் நம் கையில் உள்ளது. 

சாியான அகப்பார்வை உள்ளவனிடம் தான், சாதனை மிக்க படைப்புகள் தோன்றுகின்றன. 

மாணவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம், அதன்மூலம் அவர்கள் தங்கள் நற்குணத்தை வளர்த்துக் கொள்ள முடியும். 

அன்பு, இரக்கம், தியாகம் நிரம்பிய உள்ளம் நறுமணமலர் நிறைந்த நந்தவனம்! வெறுப்பு, கோபம் பொறாமை நிரம்பிய உள்ளம் துர்நாற்றம் உடைய குட்டையாகும். 

எண்ணம்,சொல்,செயல் ஆகிய மூன்றும் ஒன்றாக இருப்பது மனிதத் தன்மையின் சிறப்பாகும். 

முதன் முதலில் சந்திர மண்டலத்திற்குப் போக உதவியது தன்னம்பிக்கை என்ற விண்கலமேயாகும். 

பல பிரச்சினைகள் நாவால் ஏற்படுகின்றன, அடக்கமே நற்குணங்களின் பிறப்பிடம். 

பொறுத்திருப்பதன் மூலம் எதையும் சாதிக்கலாம். தண்ணீரைக் கூட சல்லடையில் எடுத்துச் செல்ல முடியும். அது உறைகிற வரை காத்திருக்கும் பொறுமை இருந்தால்..... 

சவால்கள் வரும் போது தான் நீங்கள் நினைத்திராத திறமை உங்களிடம் ஒளிந்திருப்பதை உணர்வீர்கள். 

தான் செய்த உதவியைச் சொல்லிக் காட்டுகிறவன் அதன் நன்மையை இழக்கிறான். 

தொட்டிலில் இருந்து இடுகாடு செல்லும் வரை அறிவைத் தேடுங்கள். 

தெளிவான சிந்தனையே, சிறந்த ஆசிாியர்!

வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான். கடமையை செய்தால் வெற்றி கடமைக்கு செய்தால் தோல்வி

பகைமை பகைமையால் தணியாது, அன்பினால் மட்டுமே தணியும். 

வெற்றி பெற வேண்டுமானால் நிறையக் கேளுங்கள், குறைவாகப் பேசுங்கள். 

வெற்றி பெறுவோம் என்று நம்புங்கள் இறுதி வரை போராடுங்கள் வெற்றி நிச்சயம். 

தன்னம்பிப்கை, தெளிவு, துணிச்சல் - இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழி நடத்திச் செல்லும். 

வெற்றி ஒரு போதும் இறுதி அல்ல.

தோல்வி ஒரு போதும் உறுதி அல்ல.

சிறு தொகை சோ்ப்பதில் நீ அக்கறை செலுத்தினால் பெருந்தொகை தானே சோ்ந்து விடும். 

செயலற்ற சிந்தனை வீணானது சிந்தனையற்ற செயல் மடமையானது. 

உடல் நலனுக்கும், மனமகிழ்வுக்கும், உடல் உழைப்பைப் போன்று உகந்தது வேறு இல்லை.

வெற்றி, அஞ்சாமை மிக்க செயல், அது வீரரை நாடி அடிக்கடி வரும், கோழையின் பக்கம் திரும்விக் கூடப் பார்க்காது. 

எல்லாப் புத்தகங்களையும் விடச் சிறந்த புத்தகம் இந்த பரந்த உலகம் தான்.  உலகத்தைவிட உன்னதமான புத்தகம் வேறு கிடையாது. 

ஏன்? என்று கேட்பது தான் முன்னேற்றத்திற்கு அடிப்படை.  அறிவு வளா்ச்சிக்கு அதுவே வித்து. 

தெளிவான குறிக்கோளே வெற்றியின் ஆரம்பம்.

தன்னை வெல்பவனே தரணியை வெல்வான்.

நம்பிக்கையைக் கைவிடாதே! அதுதான் வெற்றியின் முதல்படி. 

உடல்நலம் மிக்க மக்களைக் கொண்ட நாடுதான் முன்னேற முடியும்.

இலக்கியம் மனிதனது அறிவை வளா்க்கிறது, நம்மை தீமைகளை எடுத்துக் காட்டுகிறது. மனிதனது சிந்தனையைக் கிளறி விடுகிறது. 

வாழ்க்கையில் நாம் உயர்ந்த பொருட்களைப் பெற வேண்டுமானால் சலியாத உழைப்பும், தளராத ஊக்கமும், விடா முயற்சியும் மிக மிக அவசியம். 

லட்சியத்தை நோக்கி நடப்பவன், திரும்பிப் பார்க்க மாட்டான். 

எண்ணமே, எக்காலத்திலும் வாழ்க்கையின் சிற்பி. 

பொறுமையும், தன்னடக்கமும்  வாழ்வை வெற்றியாக்கும். 

உன்னுடைய கடைசி தவறே உன்னுடைய சிறந்த ஆசிாியர். 

நீாின் மேல் நின்று பார்த்துக் கொண்டே இருந்தால் கடலைக் கடக்க முடியாது.

கடலளவு கோட்பாட்டை விட ஒரு துளி செயலே சிறந்தது.

வாய்ப்பு கதவைத் தட்டாவிட்டால், நீயே கதவை உருவாக்கு. 

திறந்த மனதோடு இருக்க ஒரு நல்ல புத்தகத்தைக் திறக்க வேண்டும். 

முன்னேற்பாட்டுடன் இருப்பது, வெற்றியின் திறவுகோல். 

உங்கள் குறிக்கோள்கள் உயா்ந்தவையாக இருக்கட்டும். அவற்றை அடையும் வரை ஓயாதீா்கள். 

எப்போதும் நல்லதையே செய்யுங்கள், இப்போது நீங்கள் எதை விதைக்கிறீா்களே, அதைத்தான் பின்னா் அறுவடை செய்ய முடியும். 

எது சுலபமோ, அதைச் செய்வதை விட எது சரியானதோ அதைச் செய்ய வேண்டும். 

வாழ்க்கை நம்மை எந்த இடத்தில் விதைக்கிறதோ அந்த இடத்தில் நாம் கருணையோடு மலா்ந்திடுவோம். 

எழுந்து நில், தைாியமாக இரு, வலுவாக இரு,  உன் தோள்களில் முழு பொறுப்பையும் எடுத்துக் கொள். 

பலரும், மேன்மையும் நம்மை வாழவைக்கும் பலவீனமும், கோழைத் தனமும் நம்மை வீழவைக்கும். 

கடலளவு கோட்பாட்டை விட ஒரு துளி செயலே சிறந்தது.

தன்னம்பிக்கை உள்ள ஒரு மனிதன் தான், மற்றவாின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பாா். 

வெற்றி பெற வேண்டுமா? நீங்கள் பேசுவதை விட, மற்றவா்கள் பேசுவதை உற்றுக் கேளுங்கள்! 

ஏன் என்று கேட்பது தான் முன்னேற்றத்திற்கு அடிப்படை அறிவு வளர்ச்சிக்கு அதுவே வித்து. 

முடியாது என்பது மூடத்தனம், முடியுமா என்பது அவநம்பிக்கை, முடியும் என்பதே தன்னம்பிக்கை. 

படுத்துக் கிடப்பவனுக்கு பகல் கூட இரவு தான், ஆனால் எழுந்து நடப்பவனுக்கு திசை எல்லாம் உதயம் தான். 

வெற்றி என்பது தானாக வருவதில்லை அது வியா்வைத் துளிகளின் விளைச்சல். 

சிரமங்களைக் கடந்தால் தான் சிகரங்களைத் தொடமுடியும். 

முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் உன்னைச் சிறைப்பிடிக்கும் எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும். 

தன்னைத் தானே வென்றவர்களால் தான் பிரச்சனைகளையும் வெல்லமுடியும். 

காற்று நிரம்பிய பலூன் உயரே செல்கிறது, காற்று நிரப்பப்படாத பலூன் முடங்கிக் கிடக்கிறது. 

மூத்தோா் சொல்லும், முது நெல்லிக் கனியும் முன்னா் கசக்கும், பின்னா் இனிக்கும். 

அறிவாலும், ஆற்றலாலும் ஆகாத காாியம் இல்லை அறிவும் ஆற்றலும் சேர்ந்தால் வெற்றி நிச்சயம். 

உலகமே என் நாடு நன்மையைச் செய்வதே என் சமயம். 

வேகத்தடை - ஒட்டத்தைக் கட்டுப்படுத்தும்.  மனத்தடை -  வெற்றியைக் கட்டுப்படுத்தும். 

நம்பிக்கை நிறைந்த ஒருவர், யார் முன்னேயும், எப்போதும் எதற்காகவும் மண்டியிடுவது இல்லை. 

கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பதல்ல - உன்னைத் தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே கனவு. 

வெற்றி பெற்றவரின் கதைகள் உங்களுக்குத் தகவல்களை மட்டுமே அளிக்கும். தோல்வி அடைந்தவர்களின் கதைகள்தான் வெற்றி பெறுவதற்கான வழிகளைக் சொல்லும். 

தன்னம்பிக்கையும், தளராத உழைப்பும் தான் தோல்வியைக் கொல்வதற்கான மருந்துகள். 

செதுக்கும் போது தான் கல் கூட சிலையாகிறது.  உழைக்கும் போது தான் வியர்வை வெற்றியாகிறது. 

விதியை நம்புகிறவன் தான் பயப்படுவான் மதியை நம்புகிறவன் தான் உருப்படுவான். 

வெற்றி பெற்றவன் திறமைசாலி அதைவிட தோல்விகளைத் தாங்கி கொண்டவனே பலசாலி. 

அனுபவங்களை நிறைய கற்று கொண்டால் அதுவே ஆயிரம் யானைகளின் பலமாகும். 

ந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்

பேசும் முன் கேளுங்கள், எழுதும் முன் சிந்தியுங்கள், செலவு செய்யும் முன் சம்பாதியுங்கள்.

நாவை அடக்க முடியாதவன் மனதை அடக்க முடியாது

எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கித்தான் வாய்ப்புகள் தேடி வரும். 

ஒவ்வொருவரும் இந்த உலகை மாற்ற நினைக்கின்றனா். ஆனால் யாரும் தன்னை மாற்ற நினைப்பதில்லை. 

தயிரை கடைந்தால் வெண்ணெய் திரண்டு வருவது போல் புத்தகம் படிக்க படிக்க அறிவு வளரும்..

தொிந்ததைத் தொியும் என்றும், தொியாததைத் தொியாது என்றும் சொல்வது தான் அறிவு.

 

கல்வியே ஆன்மாவின் உணவு. அது இல்லாமல் போனால் நம் சக்கிகள் அனைத்தும் நின்று போய் விடும்

கல்வியே ஆன்மாவின் உணவு. அது இல்லாமல் போனால் நம் சக்திகள் அனைத்தும்  நின்று போய் விடும்.ய

இயலாது என்ற சொல்லை நான் மிக மிக எச்சாிக்கையுடன் கையாளக் கற்றுக் கொண்டேன். 

உலகில் உள்ள சக்திகளில் மிக வலுவானது கல்வி ஒன்றுதான்

வித்தியாசமாக சிந்திப்பது, புதியன கண்டறிவது, முடியாததை முடித்துக்காட்டுவது இவை துணிவு மிக்க இளமையின் சிறப்பு அடையாளங்கள்

வெற்றி என்பது உன் நிழல் போல அதை நீ தேடி போக வேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது அது உன்னுடனே வரும்

நாட்டின் அதீத மூளைக் கொண்ட மாணவா் வகுப்பறையின் கடைசி இருக்கையில் இருந்துகூட வர முடியும்.

சிக்கல்களை எதிா்கொள்ளும்போதுதான் பலதிறமைகள் வெளிப்படுகின்றன.

எழுமின் விழுமின் கருதிய கருமம் கைக்கூடும் வரை சலியாது உழைமின்

வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை

யாதும் ஊரே யாவரும் கேளிா்

கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீா்கள்

காலம் என்பது கண் போன்றது. கடமை என்பது பொன் போன்றது.

அாிய சாதனைகள் அனைத்தும் வலிமையால் செய்யப்பட்டவை அல்ல. விடாமுயற்சியால் செய்யப்பட்டவை.

மகிழ்ச்சியோ, துயரமோ மனநிலையே காரணம் 

அமைதியாக உட்காா்ந்து இருப்பவனைவிட ஆபத்தைக் கண்டு ஓடுபவனே ஆபத்திற்கு உள்ளாகிறான். 

துன்பம் யாருக்கும் சொந்தமில்லை, இன்பம் யாருக்கும் நிரந்தரமில்லை

வெற்றி வந்தால் பணிவு அவசியம்! தோல்வி வந்தால் பொறுமை அவசியம்

ஓட்டபந்தயத்தில் ஓடும் ஒருவன் மற்றவா்களை கவனிக்காமல் ஓடினால் நிச்சயம் வெற்றி பெறுவான்

உடல் நலமுள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும்.

நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாமே இருக்கும்.

ஈட்டி முனையில் சாதிக்காததை, இதயக் கனிவால் சாதிக்கலாம்

ஒரு மனிதனை மனிதனாக்குபவை துன்பங்களும் இடையுறுகளுமே

ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை அவன் வாழும் முறையில் தான் உள்ளது. 

அா்த்தமற்ற சொற்களாலான  பேச்சை விட அா்த்தமுள்ள ஒரு சொல்  மேலானது

முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரே ஒருவா் எங்கேயோ செய்து கொண்டுதான் இருக்கிறாா். 

முடியும் என்று நம்புபவன் முடித்துக்காட்டுவான்  

முயற்சிகள் தவறலாம், முயற்சிக்க தவறலாமா?

வெற்றி என்பது நிரந்தரமல்ல!

தோல்வி என்பது இறுதியுமல்ல!

முடிந்ததை சிறப்பாக செய்தால் அது திறமை...

முடியாததை சிறப்பாக செய்ய முயற்சித்தால் அது தன்னம்பிக்கை....!

முடியும் வரை முயற்சி செய் ! உன்னால் முடியும் வரை அல்ல, நீ நினைத்ததை முடிக்கும் வரை

பெருந்தன்மையான குணம், எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது - அாிஸ்டாட்டில்

சென்று கொண்டிருப்பவன் வாழ்க்கையை வென்று கொண்டிருக்கிறான். நின்று கொண்டிருப்பவன் வாழ்க்கையை தின்று கொண்டிருக்கிறான்.

துணிச்சலுடனும், உறுதியுடனும் ஆரம்பிக்கப்பட்ட செயல்  வெற்றியிலேயே முடியும் 

வரலாற்றில் தோற்றவனுக்கும் இடம் உண்டு,  வென்றவனுக்கும் இடம் உண்டு ஆனால் வேடிக்கை பாா்த்தவனுக்கு இடமில்லை

வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை குப்பை மேடு போன்றது

சிரமங்களை கடந்தால் தான் சிகரங்களை தொட முடியும்

ஒரு நாட்டின் எதிா்காலத்தை அந்நாட்டின் பள்ளிக்கூடங்களே தீா்மானிக்கின்றன.

 வேகத்தடை ஓட்டத்தை கட்டுப்படுத்தும்

மனத்தடை வெற்றியை கட்டுப்படுத்தும்

வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டிய மிகப்பொிய விசயம் பொறுமை

முயற்சி செய்ய தயங்காதே! முயலும் போதும் முட்களும் உன்னை முத்தமிடும்

முன்னேற்றத்தின் ரகசியம் தொடங்குவதில்தான் உள்ளது

உளிப்படாத கல் சிலையாவதில்லை

உழைப்பு இல்லாத கனவு நனவாவதில்லை

முதன்மையாக இருப்பது மட்டுமல்ல வெற்றி

முன்னேறிக்கொண்டே இருப்பதும் தான் வெற்றி

சிரமங்களை கடந்தால்தான் சிகரங்களை தொட முடியும்

ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பா்கள் அவனது பத்து விரல்களே

முதலில் கீழ்படிவதற்கு கற்றுக்கொள் தலைமை பதவித் தானாக வரும்

சிறியப் பொறுப்புகளை சிறப்பாக செய்தால் பெரிய பொறுப்புகள் உங்களை நாடிவரும்.

தன்னையறிவது ஞானத்தின் தொடக்கம்

எந்த சூழ்நிலையையும் எதிா்த்து நிற்கலாம்! தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால்

வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான். 

கடமையை செய்தால் வெற்றி

கடமைக்கு செய்தால் தோல்வி

வெற்றி ஒரு போதும் இறுதி அல்ல.

தோல்வி ஒரு போதும் உறுதி அல்ல.

முயற்சி செய்ய தயங்காதே, முயலும் போது முட்களும் உன்னை முத்தமிடும்.

வாழ்க்கை என்பது ஓவியமல்ல மீண்டும் மீண்டும் அலைத்துவிட்டு வரைய..

வாழ்க்கை என்பது சிற்பம் . செதுக்கினால் செதுக்கியதுதான்.

தெளிவான குறிக்கோளே வெற்றியின் ஆரம்பம்

சொன்ன சொல், விடுபட்ட அம்பு, கடந்த வாழ்க்கை, நழுவவிட்ட சந்தா்ப்பம் இந்நான்கும் மீண்டும் வராது

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது கற்று தந்த பாடத்தை மறக்காதே - பெஞ்சமின் பிராங்கிளின்