உங்கள் குழந்தைகளுக்காக வாழுங்கள்

 

ஒவ்வொரு தாயும் தந்தையும் தங்கள் குழந்தைகளுக்காகவே வாழ்கின்றனர். தங்கள் குழந்தைகள் படிப்பில் சிகரங்களைத் தொடுபவர்களாகவும் நண்பாகள் உறவினாகள் மற்றும் அனைவருக்கும் ஒரு முன்மாதியாகத் திகழ்பர்களாகவும் அதிகப்படியான எதிர்பார்ப்புகளையும் வளர்த்துக் கொள்கிறார்கள். மேலும் தங்கள் குழந்தையை ஒரு மேதையாகவே நினைக்கத் தொடங்கி தவறான கண்ணோட்டத்தோடு குழந்தைகளின் நிலையைப் பற்றி புரிந்து கொள்ளாமல் ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்கின்றனர். அதாவது அக்கறையை இழக்கின்றார்கள்.

எனவே நமது குழந்தைகளைப் புரிந்து கொண்டு அக்கறை காட்டுதலே முதல் வழிமுறையாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. குழந்தைகள் தவறு செய்து படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் இருக்கும் போது அக்கறை காட்டுங்கள். அவர்கள் எல்லாவற்றையும் ஒழுங்காக செய்து கொண்டிருந்தால் அவர்களைப் பற்றி கவலைப்பட எதுவும்இல்லை. ஒரு குழந்தை தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெறும்போதோ போட்டியில் தோற்கும் போதோ குழப்பமாகவும் உற்சாகமற்றும் இருக்கும் போதோதான் பெற்றோரின் கனிவான ஆதரவான வார்த்தைகளும் மற்றும் உதவியும் தேவைப்படுகிறது. எனவே தான் ஒரு குழந்தை படிப்பில் சரிவர செயல்படாவிட்டால் திட்டுவதற்கும், விமர்சிப்பதற்கும் பதிலாக எந்த சூழ்நிலை அவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்தது என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்த நிலையில் அவர்களை தேற்றி ஆறுதலளிக்கும் வார்த்தைகள் தான் தன்னம்பிக்கையை உயர்த்த பெரிதும் உதவும்.

செல்போன்களில் பேசிக்கொண்டும் தொலைக்காட்சியில் காதல், வன்முறை மிகுந்த காட்சிகளைப் பார்த்தும் நேரத்தை வீணடிக்கும் நிறைய குழந்தைகளை நாம் பார்க்கிறோம்.

பெற்றோர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

1) எப்போதும் தவறு கண்டுபிடித்து (எதிர்மறைத் தாக்குதல்கள்) குழந்தைகள் கருத்துக்கு மாறாகவே இருப்பவர்கள் – இயற்கையில் வெறுப்பு
2) குழந்தைகளைப் பற்றி கவலைப்படாதவர்கள்-அக்கறையின்மை
3) குழந்தைகளோடு ஒத்துப்போகின்றவர்கள்-அனுதாபம் காட்டுதல்
4) குழந்தைகளின் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் - அக்கறை கொள்ளுதல்

உங்கள் குழந்தைகளுக்குச் சுதந்திரம் கொடுத்து அவர்களை தானாகவே செயல்களைச் செய்ய எப்போதும் ஊக்குவிக்க வேண்டும். இது கண்டிப்பாக அவர்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரும். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எதுவும் செய்ய விடாமல் தடுத்து அவர்களுக்கு “தன்னால் ஒன்றும் செய்ய இயலாது” என்ற மனத்தடையை உருவாக்கி விடுகிறார்கள் துரதிர்ஷ்டவசமாக இந்த மனத்தடைகள் அவர்களின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்து விடும் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.

எல்லாம் பெற்றோர்களும் தமது குழந்தைகளுக்கு புரண சுதந்திரம் அளித்து அவர்களே தங்கள் செயல்களை தேர்ந்தெடுக்கவும் செயல்படவும் அனுமதிக்க வேண்டும். அதே நேரம் தக்கச் சமயத்தில் வழிகாட்டவும் தவறாதீர்கள். புத்தகங்களுக்கு மேலட்டை போடுவதோ லேபில் ஒட்டுவதோ பேனாவுக்கு மையிடுவதோ தங்கள் உடைகளின் நிறம் தோற்றம் குறித்து முடிவு செய்வதோ அவர்களின் அறையை அழகாக வைத்திருப்பதோ எந்த செயல்களாக இருந்தாலும் அவர்களுக்குச் சுதந்திரம் அளியுங்கள்.

குழந்தைகள் குறிப்பிட்ட வரம்பினுள் தங்கள் செயல்களை தேர்ந்தெடுப்பதற்கும் அதனை செய்து முடிப்பதற்கும் சுதந்திரமளிப்பது மிகவும் அவசியமானதாகும். பெற்றோரிடமிருந்து தவறான நடத்தைகளையும் வார்த்தைகளையும் சுலபமாக கற்றுக்கொள்கின்றனர். எனவே பெற்றோர்களின் நன்னடத்தையானது குழந்தைகளின் ஒழுக்கத்திற்கு முக்கியமான வழிகாட்டியாக அமைகிறது. அவை வணங்குவது, நன்றி சொல்வது, மரியாதையாகப் பேசுவது, முகத்தை கனிவாக வைத்துக் கொள்வது, உபசரிப்பது, தவறு செய்ய நேர்ந்தால் மன்னிப்பு கேட்பது, வயதில் முத்தவர்களிடமும் ஆசிரியர்களிடமும் மரியாதை செலுத்துவது, அனைவரையும் அவாகள் எந்த நிலையில் இருந்தாலும் ஒன்று போல மதிப்பது மற்றும் நாகரிகமான மொழியில் பேசுவது போன்றவையாகும்.

இந்தப் பழக்கவழக்கங்களை முறையாக உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து விடுங்கள். அவர்கள் அன்பானவர்களாகவும் இரத்தினங்களாகவும் ஜொலிப்பாகள். நன்னடத்தையை இளம்வயதிலேயே கற்றுக் கொடுப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். சுடர்விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.

உங்கள் குழந்தைகளுக்கு சுதந்திரத்தையும் ஒழுக்கங்கையும் கற்றுக் கொடுங்கள். இவற்றை வார்த்தைகளால் சொல்வதைவிட செயல்களால் செய்து காண்பித்தால் மட்டுமே தெளிவாக விளக்க முடியும்.

தங்கள் வீடுகளை ஒழுங்காக பராபரிக்காத நிறைய வீடுகளை நான் பார்த்திருக்கிறேன். ஸாக்ஸ்களைக் கழற்றி விட்டு வீட்டினுள் நுழைந்த பின்பு கைகளைக் கழுவுவதில்லை. சாப்பிடும் போது பாரிமாறும் பாத்திரங்களின் முடியை கீழே வைக்க நேர்ந்தாலும் தண்ணீர் அல்லது டீ குடிக்கும் டம்ளரின் மேல் முடியை எடுக்க நேர்ந்தாலும் மூடியை திருப்பி வைப்பதில்லை. இவை எல்லாவற்றின் உச்சமாக எதையும் பரிமாறும் முன் தட்டு அல்லது டம்ளரை தங்கள் சேலை முந்தானையாலோ துப்பட்டாவினாலோ துடைத்து விட்டு பின் அதில் பரிமாறும் பெண்களை நீங்களும் கவனித்திருக்கலாம்.

 

அந்த வீட்டிலுள்ள குழந்தைகள் சுத்தமின்மையை வெகு சுலபமாக கற்றுக் கொள்வார்கள். குழந்தைகளை கைக்குட்டை பயன்படுத்த ஊக்குவியுங்கள். நான் இரண்டு கைக்குட்டைகளை பயன்படுத்த பரிந்துரைப்பேன். ஒன்று முகம் துடைக்கவும் மற்றொன்று உட்காரும் இடங்களைத் துடைக்கவோ அல்லது முக்கைச் சுத்தப்படுத்தவோ பயன்படுத்தலாம். உங்கள் குழந்தையின் ஒழுங்கற்ற தன்மையை நான்கு வழிகளில் மதிப்பிடலாம்.

1) கைக்குட்டையை வைத்துக் கொண்டிருக்கும் விதம்-அழகாக மடித்தோ அல்லது மடிக்காமலோ
2) பேனாவை சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டிருக்கும் விதம் – இந்த விஷயத்தில் சில மாணவர்கள் பேனாவே வைத்துக் கொள்வதில்லை. இது போர்வீரன் கையில் வாளில்லாமல் செல்வது போன்றது.
3) தங்கள் துணிமணிகளை புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் விதம் – அலமரிகள் சைக்கிள் உட்பட.
4) காலணிகளை வாசலில் விடும் விதம்

ஒரு முன்மாதிரியாக பெற்றோராக இருந்து சுத்த்த்தையும் ஒழுங்கையும் கற்றுத் தர வேண்டும். தொட்டதற்கெல்லாம் அடிக்கடி  கோபப்பட்டு எல்லோரையும் வெறுப்படைய செய்யும் நிறையப் பெற்றோரை நாம் பார்த்திருக்கிறோம். குழந்தைகள் இது போன்ற மனரீதியான ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேர்ந்தால் வெகு விரைவிலேயே இந்த பழக்க வழக்கங்களை பரம்பரை பழக்கங்கள் போலக் கற்றுக் கொள்வார்கள். இது அவர்களை எங்கும் எதிலும் தோல்வியாளர்களாக்கும்.

சில குழந்தைகள் சினம் கொள்பவராகவும் சண்டை போடுபவர்களாகவும் இருப்பதைக் காண்கிறோம். இதன் காரணம் இந்தக் குழந்தைகளின் பெற்றோர்களில் ஒருவரோ அல்லது இருவருமே கோப்ப்படுவர்களாக இருந்தாலும் குழந்தைகளின் அத்தகைய குணத்தை முளையிலேயே கிள்ளி எறியாததாலும் ஆகும். குழந்தைகள் நல்ல மனநிலையில் இருக்கும்போது அவர்களிடம் கோபப்படுவதின் விளைவுகளைப் பற்றி எடுத்துச் சொன்னால் அதனைப் புரிந்து கொண்டு தங்கள் நடத்தைகளை சரி செய்து கொள்ள முற்படுவர்.

நீங்கள் குழந்தைகளை கீழ்க்கண்டவகையில் ஊக்குவிக்கலாம்.
1) தொடர்ந்து ஊக்கமளித்தல்
2) ஆர்வமுடன் செயலை செய்து முடித்தல்
3) தலைமைப் பண்புகளை வெளிப்படுத்துதல்
4) உற்சாகப்படுத்துதல்
5) சிறு ஊக்கப்பரிசளித்தல்

       ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் வாழ்வில் சிறந்து விளங்க அடிக்கடி ஊக்கமும் உட்சாகமும் தர வேண்டிய மிகவும் அவசியமானதாகும். பெற்றோரிகள் நற்பண்புகளுக்கும் நல்லொழுக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து தாங்களும் தங்கள் குழந்தைகளும் வாழ்நாள் முழுவதும் அதனை பின்பற்றுபவர்களாகவும் உருவாக்கி கொள்ள வேண்டும். ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் குழந்தைகளின் கையில்தான் இருக்கிறது. அவர்கள் தங்களது செயல்களை சிறப்பாக செய்தால் இந்த நாடு எல்லாவகையிலும் அபிவிருத்தி அடையும். எனவே  என் இனிய பெற்றோர்களே அந்தப் பணி உங்கள் கையில்தான் இருக்கிறது! உங்கள் குழந்தைகள் அவர்களின் தொடக்க கல்வி நிலையிலிருந்து பண்படுத்த்த் தொடங்குங்கள். அவர்களுக்கு சிறப்பாகச் செயல்படுவதின் மேன்மையை சொல்லிக் கொடுங்கள். என்று வழி காட்டுங்கள். அது எழுதுவதற்காக இருக்கலாம். புத்தகங்களை அலமாரியில் அடுக்கி வைப்பதாக இருக்கலாம். ஆடை அணிதல், விளையாடுதல், தேர்விற்கு தயார் செய்தல், மதிப்பெண்கள் பெறுதல், படிப்பு சம்பந்தப்பட்ட மாதிரிகள் தயார் செய்தல், அறிக்கை தயார் செய்தல், மேடையில் அல்லது வெளியில் பேசுதல், பேசும் மொழி, நடத்தை எதுவாக இருந்தாலும் அவற்றைச் சிறப்பாக செய்து மிகச்சிறப்பான முத்திரையுடன் மட்டுமே இருக்க வேண்டும். பெற்றோர்கள் இனி எந்த செயலைச் செய்தாலும் சிறப்பாக செய்து தங்கள் குழந்தைகளுக்கு அதன் முக்கியதுவத்தையும் வழியையும் கற்றுத் தர வேண்டும்.

  •                 உங்கள் குழந்தைகளை அவர்களுக்கு பிடித்தமாக துறையைத் தேர்ந்தெடுக்க வழி காட்டுங்கள். அது அவனுக்கோ அவளுக்கோ பொருத்தமானதாகவும் இருக்க வேணடும். உங்கள் குழந்தைகள் கணிதப் பாடத்தில் பின் தங்கியிருந்தால் இன்ஜினியரிங் கல்லூரியில் அவனைச் சேர்க்க வேண்டாம். உயிரியல் பாடத்தில் பின்தங்கியிருந்தால் மருத்துவத்தை தவிர்க்கவும். கண் பார்வையில் குறைபாடிருந்தால் கணிணித்துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். உடல் கோளாறு இருந்தால் பயணம் செய்ய நேரிடும் துறையைத் தவிர்க்கவும். தைரியமானவனாக இல்லாவிடில் போலீஸ் போன்ற சிவில் அரசாங்கப் பணிகளைத் தவிர்க்கவும். அவர்கள் விரும்பிய துறையில் அவர்களை சேர்த்துவிட்டால் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு உங்களுக்கு மட்டமல்லாது இந்த நாட்டிற்கே பெருமையைத் தேடித் தருவார்கள். அவர்களோடு அமர்ந்து பேசுங்கள். உங்கள் விருப்பு வெறுப்புகளைத் திணிக்காமல் அவர்களுக்கு பிடித்தமான துறையை அவர்களே தேர்ந்தெடுக்க உரிமையளியுங்கள்.
  •  
  • தங்கள் குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க்க் கூடாது என்று திட்டி விட்டு நாட்கணக்காக தொலைக்காட்சியின் தொடர்களோடு ஒட்டி உறவாடும் நிறையத் தாய்மார்களை நாம் பார்கிறோம். அதே போல நற்பண்புகள் ஒழுக்கம் பற்றி வாய்கிழியக் பேசினால் அவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்க சிறிதும் முயற்சி செய்யாத நிறையத் தந்தையர்களையும் நாம் பார்க்கிறோம். எனவே குழந்தைகளுக்கு விருப்பமற்ற அறிவுரை கொடுப்பது பயனற்றது. தாயார் எப்போதும் தொலைகாட்சி பார்ப்பதைப் பழக்கமாக கொண்டிருந்தால் குழந்தையும் அதனைபின் தொடரும். தந்தை நல்ல பழக்கங்களைக் கொண்டிருந்தால் குழந்தை அதைபின்பற்றலாம் அல்லது பின்பற்றாமல் போகலாம். அதே நேரம் தந்தை தீய பழக்கங்களைக் கொண்டிருந்தால் குழந்தைகள் அவற்றை பின்பற்ற சாத்தியக் கூறுகள் நிச்சயம் உள்ளன. ஏனென்றால் எதர்மறையான விஷயங்கள் நேர்மறையான விஷயங்களை விட அதிக வலிமை வாய்ந்தவை. பெற்றோர்கள் காலையில் சீக்கிரம் எழுவது வீட்டை ஒழுங்காகப் பராமரிப்பது நன்றாக உடையணிவது என எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறையைக் கடைபிடிக்க வேண்டும். இது குழந்தைகளைத் தானாகவே அவற்றைப் பின்பற்றச் செய்ய வழி வகுக்கும். பெற்றோர்கள் இனி புத்திமதி சொல்வதை விட தங்கள் வாழ்க்கையில் அவற்றைப் பின்பற்றி குழந்தைகளுக்கு வழிகாட்டிகளாக திகழ வேண்டியது அவசியமாகும்.
  •  
  • பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரியத் தவறு என்னவென்றால் குழந்தைகளுக்கு எப்போதும் மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பது. அந்தத் தவறை ஒரு போதும் செய்யாதீர்கள். ஒவ்வொரு குழந்தையும் அவரவர் வழியில் தனித்தன்மை வாய்ந்தவர்கள். நிங்கள் ஒப்பிட்டு பார்க்கும் போது அதிலும் மற்றவர்கள் எதிரில் அதைச் செய்யும் போது அவர்கள் தன்னம்பிக்கையை இழப்பது மட்டுமல்லாமல் மற்றக் குழந்தைகளின் மேல் பொறாமையையும் பகையையும் வளர்த்துக் கொள்கிறார்க்ள். இது அவர்களின் இளம் வயதில் சரி செய்ய முடியாத தீங்கை விளைவித்து விடுகிறது.
  •  
  • உங்கள் குழந்தைகளுக்கு  அதிகப்படியான வீட்டு பாடச்சுமையை அளிக்காதீர்கள். நிறையப் பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவர்களுக்குக் கூட கடினமான எழுத்து வேலைகள் கொடுக்கப்படுகிறது. சில ஆசிரியர்கள் கட்டுரையின் ஒரு பகுதியை 10-20 முறை எழுதச் சொல்லி தண்டனை அளிக்கிறார்கள். இது நியாயமானதல்ல உங்கள் குழந்தைகளை அடிக்கடி ஓய்வெடுக்கவும் ஒழுங்காக விளையாட செய்தும் வாழ்கையை பதட்டமில்லாமல் அணுக விடுங்கள். உண்மையில் அதிகப்படியான வேலைகள் மூலமான மனஅழுத்தம் குழந்தைகளின் உடல் வளர்சியையும் பாதித்து விடும். கல்வி முறை ஆராய்ச்சியாளர்களும் குழந்தை உளவியல் நிபுணர்களும் பரிந்துரைப்பது ஐந்தாம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுபாடமே கொடுக்க்கூடாது என்பதுதான்.
  •  
  • பெற்றோர்கள் குழந்தைகளை எப்போதும் தன்னுடைய நிலையை விட ஒருபடி மேலே முன்னேற வேண்டும் என்று ஊக்குவிக்க வேண்டுமேயோழிய முதன்மையானவனாக ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படக்கூடாது. உங்கள் குழந்தைகளை சக மாணவர்களோடு அவர்களின் அறிவைப் பகிர்ந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள். அது கருத்துக்களைப் பெறுபவரை மட்டுமல்லாமல் பகிர்ந்து கொள்பவர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும்.
  •  
  • தெரிந்தோ தெரியாமலோ நாம் நம் குழந்தகைளுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறோம். இது அவர்களுக்கு மிக அதிக சுகத்தை அளிக்கிறது. இதனால் வாழ்கையில் அதிகமாக சாதிக்க வேண்டும் என்ற ஆசை அழிக்கப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக அமைகிறது. ஆகையால் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு மிக அவசியமான குறைந்தபட்ச தேவைகளை மட்டுமே செய்துத் தர வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்குத் தேவைப்படுவதையெல்லாம் கொடுக்காமல் எது அவசியமோ அவற்றை மட்டுமே கொடுக்க வேண்டும். தேவைக்கும் அவசியத்திற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர் தனது குழந்தைகளுக்கு கொடுக்க்க்கூடிய மிகப் பெரிய சொத்து அவர்களுடன் செலவிடும் இதமான பயனுள்ள நேரமே ஆகும். அதேபோல மிகப் பெரிய தீங்கு குழந்தைகள் கேட்க்க்கூடிய அனைத்தையும் உடனே அளிப்பது.
  •  
  • உங்கள் குழந்தைகளுக்கு நல்ல காற்றோட்ட வசதியுடன் கூடிய படிக்கும் அறையை அமைத்துக் கொடுங்கள். வெண்ணிற ஒளி தரக்கூடிய டியுப்லைட் அல்லது வெண்மைநிற சிஎஃப்ல் ஒளி விளக்கை அமைத்துக் கொடுக்கவும். தெற்கு திசையை நோக்கி அமர்ந்து படிக்கும் போது புவியின் காந்த அலைகள் நமது மூளையில் சீரான அதிர்வுகளை கலைக்கிறது. நன்கு நேராக நிமிர்ந்து படிக்க வேண்டும். கொசுத்தொல்லை இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். பாடத்தில் ஒவ்வொரு பகுதியையும் படித்துக் தேர்வுக் குறிப்புகள் தயார் செய்த பிறகு கவனக் குறிப்புகள் தயார் செய்ய வழிகாட்டுங்கள். கவனக் குறிப்புகள் என்பது ஒரு பகுதியைப் பற்றி எழுதப்பட்ட விஷயச் சுருக்கம் ஆகும். இவை கோடிடாத சிறிய நோட்டுப் புத்தகத்தில் எழுதப்பட வேண்டும்.
  •  
  • மாணவர்கள் தேர்வுக் குறிப்புகள் படிக்கும் போது இந்தக் கவனக் குறிப்பையும் அருகில் வைத்துக் கொண்டு மேலேட்டமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தேர்வு நேரங்களில் கவனக் குறிப்புகளை மட்டுமே படிக்க வேண்டும். வேறு எதையும் படிக்க கூடாது. இந்த வழிமுறைகளை உங்கள் குழந்தைகள் கடைபிடித்தால் கண்டிப்பாக நல்ல மதிப்பெண்கள் பெறுவார்க்ள். தேர்வு நாட்களில் தோசை, புரி, சப்பாத்தி, நூடுல்ஸ், வடை, தயிர் சாதம் போன்றவற்றை காலை உணவாக அளிக்காதீர்கள். எண்ணெய் கொழுப்பு அடங்கிய உணவுகள் செரிமானத்தைத் தாமதப்படுத்துகின்றன. இதன் காரனமாக மூளைக்குச் செல்ல வேண்டிய அதிக ரத்தமானது வயிற்றுக்குச் சென்று விடும். எனவே மூளை சுறுசுறுப்பு குறைந்து செயல்பாடுகளில் மந்த நிலை ஏற்படும்.
  •  
  • தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே காலை உணவை எடுத்துக் கொள்வதை உறுதிப்படுத்துங்கள். சர்க்கரை சேர்க்காத பழச்சாறு கொடுக்கலாம். மிகவும் முக்கியமாக குழந்தைகள் வெளியில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். உயிர்ச்சத்துள்ள இயற்கை உணவுகளான பச்சைக் காய்கறிகள், முளைகட்டிய தானியங்கள், சீசனில் கிடைக்க்க்கூடிய பழங்கள், கீரைகள், தேன், பேரீச்சம் பழம், உலர் பழங்கள் போன்றவை மிகவும் நன்மை பயப்பனவாகும். தேர்வுக்கு ஒருமாதம் முன்பிருந்தே அவர்கள் குடிக்க்க் கூடிய தண்ணீரின் மீது கவனமாக இருக்கவும்.
  •  
  • பொதுவாக நிறைய மாணவர்கள் தேர்வுகளில் திணறுவது சரியாகப் படிக்காததால் அல்ல. மாறாக படித்தவற்றைச் சரியாக நினைவு கூற முடியாததால்தான் படித்த பின்பு மறந்துவிட்டு மீண்டும் படித்தல், பிறகு மீண்டும் மறத்தல் என்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் ஒரு வழக்கமான நிகழ்வாகும். இதோ இதற்கு ஒரு சரியான தீர்வு! ஒரு மாணவன் ஒரு பாடத்தை ஒரு மணி நேரம் படித்தால் அதனை மறுநாள் 10 நிமிட நேரத்திற்கு திரும்பப் பார்த்தல் வேண்டும். பிறகு அடுத்த வாரம் அடுத்த மாதம் 3 மாத்த்திற்கு பிறகு 6 மாத்த்திற்கு பிறகு என ஒவ்வொரு முறையும் 10 நிமிட நேரத்திற்கு திரும்பப் பார்த்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியின் முடிவு சொல்கிறது. இது நீண்ட நாட்கள் நினைவில் வைத்திருக்க பயன்படுகிறது. இதனால் ஒரு மாணவன் தேர்வுகளில் சிறந்து விளங்க முடியும்.
  •  
  • உங்களுக்குத் தெரியும். ஒரு மாணவன் எவ்வளவு நேரம் படிக்கிறான் என்பதை விட எவ்வளவு நேரம் மனதை ஒருமுகப்படுத்திப் படிக்கிறான் என்பதே முக்கியமானதாகும்.
  • 1. சுவாசத்தைக் கவனியுங்கள் ஏதாவது ஒரு வேலையைத் தொடங்கும் முன்னரோ அல்லது படிக்கும் முன்னரோ 2 நிமிடம் கண்களை முடி நமது சுவாசத்தை கூர்ந்து கவனித்தால் நமது கவனத்திறன் அதிகரிப்பதை கண்கூடாக்க் காணலாம்.
  • 2. மேலோட்டப் பார்வை படிப்பதற்கு முன் ஒரு முறை படிக்க இருக்கும் பாடத்தை மேலோட்டமாகப் பார்க்க உங்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்தவும். 10 பக்கங்களைப் படிப்பதற்கு முன் 5 நிமிடம் அவற்றை மேலோட்டமாக பார்ப்பது போதுமானது.
  •              
  • ஒருவொரு மாணவனும் திட்டமிடுதலைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். உங்கள் குழந்தைகளின் படிப்பிற்காக அரையாண்டு காலாண்டு மாத வரையறைகளை வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள். ஒவ்வொரு வாரமும் தினசரி படிக்கும் முறையை தயார் செய்து செயல்படுத்த உதவுங்கள். வாரத்தின் ஞாயிற்றுக்கிழமையின் முற்பகலிலோ அல்லது பிற்பகலிலோ சிறிது ஓய்வு எடுத்தக் கொண்டு அவர்களை புத்துணர்வுட்டிக் கொள்ள செய்யுங்கள். தண்ணீரைத் தொடர்ந்து சிறிதளவு சிறிதளவாக பருகிக் கொண்டிருந்தால் அளப்பரிய சத்தியைப் பெற முடியும். அவர்களின் கனவுகளையும் இலக்குகளையும் ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ள செலவிடட்டும் பின்பு அதனை மனக்கண்ணோட்டத்தில் அடிக்கடி பார்க்க வேண்டும்.
  •  
  • எந்த முறையை தாயார் செய்திருந்தாலும் அவனது பெற்றோரின் உற்சாகப்படுத்தும் வார்த்தைகளைதான் பெரிதும் போற்றுவான். அந்த உற்சாகமூட்டும் வார்த்தைகள் அவனுடைய கனவுகளை நனவாக்க மந்திரசக்தியாக உதவும் மேலும் அவன் ஒரு பாடத்தில் தோல்வியுற்று ஆசிரியர்களால் திட்டப்படும் போது அவனுக்கு தூணாக இருந்து தாங்கி பிடிக்க வேண்டும். கால் இழந்த மனிதனுக்கு உதவும் ஊன்றுகோல் போல இருக்க வேண்டும். உங்கள் ஆறுதல் வார்த்தைகள் காயத்திற்கு மாருந்திட வேண்டும். அவன் விரைவில் குணமடைந்து அவனுடைய உண்மையான திறமையை வெளிக்காட்டுவான். எனவே............................................ உற்சாகப்படுத்துங்கள் பெற்றோர்களே!
  •  
  • பாடங்கள் படிப்பதை தொடர்ச்சியாக தள்ளிப்போடுவதால் மாணவர்கள் கடைசி நேரத்தில் பரபரப்பாக படிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். தேர்வு துவங்கும் முன் மாணவர்க்ள 3நிமிடங்கள் நன்கு ஆழ்ந்து சுவாசத்தை இழுத்து விட வேண்டும். அவனது ஓய்வு மிகுந்த உற்சாகம் அளித்து அவர்களின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும். குழந்தைகள் தேர்வு நேரங்களில் ஓய்வின்றி படிக்க வேண்டும் என்ற தவறான அபிப்பிராயம் நிறைய பெற்றோர்களுக்கு உண்டு. குழந்தைகள் தேர்வு நாட்களில் சிறிதளவு ஒய்வு எடுத்துக் கொள்வது மிக மிக அவசியமாகும். இது அவர்களின் மூளையைப் கூர்மையாக்கி அதிகம் செயல்பட உதவுகிறது.
  •  
  • தேர்வு நாட்களில் ஒரு மாணவன் இரவு 9.30 மணிக்கே தூங்கச் சென்று காலை 5.00 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். (12 வயதுக்குள் உள்ள சிறுவர்களானால் 5.30-6.00க்கு எழுந்திருப்பது போதுமானது.) தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு படிப்பதை கண்டிப்பாக நிறுத்திவிட்டு உடனே காலை உணவு அருந்தி விட வேண்டும். 15-20 நிமிடங்களுக்கு முன்னதாகவே தேர்வறைக்கு சென்று வட வேண்டும். அதற்காக மிகவும் சீக்கிரமே சென்று விடக்கூடாது. படித்தவற்றை அதன் பின் திரும்பப் பார்த்தல் கூடாது. ஆழ்ந்த சுவாசம் மேற்கொள்ளுவதன் முலம் இடது பக்க மூளையைத் தூண்டி விட வேண்டும். தேர்வு முடிந்து வீடு திரும்பியதும் எந்த ஒரு பதிலையும் சரிபார்க்கக்கூடாது. நண்பர்களுடன் அது குறித்து விவாதித்தலும் கூடாது. மதிய உணவுக்கு பின் ஒரு மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். இதனால் தேர்வில் எழுதிய செய்திகள் பின்னுக்கு தள்ளப்படும்.
  •  
  • ஒரு மணி நேரம் படித்த பின்பு 10 நிமிடம் இடைவெளி விட்டுப்படிப்பதே அறிவியல்புர்வமான படிக்கும் முறையாகும். ஆனால் இந்த இடைவெளி நேரத்தில் தொலைகாட்சி பார்ப்பதோ பத்திரிக்கை படிப்பதோ கூடாது. மாறாக சிறிது ஒய்வு எடுக்க வேண்டும். சிறிது கண்ணை மூடி இளைப்பாறலாம் அல்லது உடல் சார்ந்த வேலைகளை செய்யலாம் அல்லது ஒய்வு மட்டுமே எடுக்க வேண்டும். அதன் பிறகு ஒரு 5நிமிடத்திற்கு படித்தவற்றை மறுபார்வை செய்து பிறகு மீண்டும் ஒரு மணி நேரம் படிக்கலாம். இது போல தொடர்ந்து 3மணி நேரம் படிக்கலாம். அதன் பின்பு படிப்பதற்கு முன்பு ஒரு மணி நேரம் இடைவெளி தேவை.
  •  
  • எந்த ஒரு மாணவனும் இந்த முறையில் படித்தால் அவன் நினைவாற்றல் அதிகரித்து படித்தைவற்றை நீண்ட நாட்கள் நினைவில் வைத்திருக்க இயலும். தொடர்ந்து அரைமணி நேரம் தொலைகாட்சி பார்ப்பது உங்களது வலது மூளையைச் செயலிழக்க செய்து விடுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் இது கண்களையும் பாதிக்கிறது. உங்கள் குழந்தைகளிடம் இதை நீங்கள் சொல்லி அவர்கள் தங்கனது வாழ்கையில் ஏதேனும் ஆக்க புர்வமாக சாதிக்க நினைத்தால் தொலைகாட்சி பார்ப்பதை தவிர்க்கச் சொல்லுங்கள்.
  •  
  • இணையத்தை வாரம் ஓரிருமுறை சிறிது நேரம் பயன்படுத்துவது என்பது சரி. ஆனால் நாம் அதில் அதிக நேரம் செலவழித்தால் நமது வழக்கமான படிப்பிலிருந்து திசை திரும்பி விடும். தயவுசெய்து முகப் புத்தகத்தில் (Face Book) நேரத்தையும் உங்களையும் தொலைத்து விடாதீர்கள். ஆழமாகச் சுவாசித்தலை நீங்கள் பழக்கமாக்கி கொள்ளுங்கள். மூச்சை வெளியிடும் நேரம் மூச்சை உள்ளிழுக்கும் நேரத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் என்பது அடிப்படையானதாகும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்ததாகும். இரவு படுக்கைக்கு போகும் முன் சிறிது நேரம் படிக்க உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். காலையில் எழுந்ததும் அவன் முதல் நாள் படித்தவற்றை முதலில் மறுப்பார்வை செய்து விட்டால் அவற்றை நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்திருக்க முடியும்.
  •  
  • ஒரு பெற்றோராக உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறீர்கள். ஆசைப்படுகிறீர்கள். வாழ்கிறீர்கள். அதற்கு எந்த ஒரு விலையையும் தரத் தயாராக இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. நாங்கள் கூறியுள்ள யோசனைகளை செயல்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகள் உயர்வு பெறுவர். இது உறுதி.
  • நன்றி
  •  
  • திரு.வ.சோமு,
  • நிர்வாக அறங்காவலர்
  • வெற்றிக்கு வழி அறக்கட்டளை