தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு சில யோசனைகள்

 

ஓர் ஆண்டு முழுவதும் வகுப்பில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்து அனைத்தையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பொதுத்தேர்வு எழுதப் போகிறோம். பொதுத்தேர்வு நம் வாழ்வின் முக்கியக் கட்டங்க்களில் ஒன்று. நம் எதிர்காலத்தை தீர்மானிப்பது நமது மதிப்பெண்கள். வகுப்புத்தேர்வுகள் யுனிட் தேர்வுகள் எழுதிகிறோம் அல்லவா? அதேபோல பொதுத்தேர்வையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளுகள். வகுப்புத் தேர்வுகளை எந்த அளவு பொறுப்புடன் எழுதுகிறோமோ அதே அளவு பொறுப்புடன் பொது தேர்வையும் எழுதினால் போதும். அதிகப்படியாக ஒன்றும் தேவையில்லை. தமிழ்பாடத்திலுள்ள மனப்பாடபகுதிகளை அடிக்கடி எழுதிப்பாருங்கள் எழுத்துப்பிழைகள் குறையும். மதிப்பெண்கள் மலரும். செய்யுளைப் படிக்கும் போது ஆசிரியர் குறிப்புகளை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இது சமயத்துக்கு உங்களுக்கு உதவி செய்யும். கடிதம், துணைப்பாடம், பொதுக்கட்டுரை ஆகியவைகளை நன்கு தயாரித்து செல்லுங்கள். இதே போல் ஆங்கில செயுட் பகுதிகளையும் எழுத்துப்பிழையின்றி எழுதப் பழகுங்கள். கடிதங்கள் இலக்கணம் ஆகிய பகுதிகளை விரல் நுனியில் வைத்துக்கொள்ளுங்கள். கணித்த்தில் பெரும்பாலும் பாடப்புத்தகத்தில் எடுத்துக்காட்டு பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கிறார்கள். எனவே பயிற்சி கணக்குகளில் கவனம் செலுத்துங்கள் கண்மணிகளே! சூத்திரங்களை எழுதிப்பாருங்கள். கணக்கில் ஸ்டெப்ஸ் தான் முக்கியம். அறிவியல் பாடத்தைப் பொருத்தவரை புத்தகத்தின் ஒவ்வொரு பாடத்திற்கும் பின்னால் உள்ள 1மதிப்பெண் கேள்விகளை படித்து நினைவில் வையுங்கள். சிலர் படம் உள்ள வினாக்களை விட்டு விடுகிறார்கள். படங்களுக்கு மதிப்பெண் குறைப்பதில்லை. சமுகவியல் படிக்கும்போது வரைபடத்தின் பாகங்களை தெளிவாக குறிக்க பழகவும் பாடத்தின் பின்புறம் உள்ள 1மதிப்பெண் வினாக்கள் கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டும். முந்தைய ஆண்டுகள் வந்த பொதுத்தேர்வு வினாத்தாள்களை சேகரித்து விடையளிக்கவும். அரைகுறையாக படித்து நுனிப்புல் மேயாதீர்க்ள். தேர்வுகளுக்கு முன் புதிதாக எதையும் படிக்காதீர்கள். படித்த்தை ரிவைஸ் செய்தால் போதும். எந்த வினாவையும் விட்டு வைக்காமல் அனைத்து வினாக்களுக்கும் விடையளியுங்கள்.
தேர்தல் வாய்ப்புகள் பலமுறை கிடைக்கலாம். பொதுத் தேர்வு வாய்ப்பு என்பது சில முறைதான் கிடைக்கும். ஆகவே படிப்பதிலேயே தினமும் கவனம் செலுத்துங்கள். கடைசி நேரத்தில் படிப்பது மனஅழுத்தம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். படிக்கும் நேரத்தில் கிரிக்கெட்டை நினைக்காதீர்கள். கவனம் சிதறும். படிப்பில் முழுஈடுபாடு வராது. நம் முழுகவனமும் கடிவாளம் போட்ட குதிரை மாதிரிதேர்வுக்கு தயார் ஆவதிலேயே முழுகவனத்தையும் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கைகளை செம்மைப்படுத்தி முன்னேறச் செய்வது தேர்வுகளே மகிழ்ச்சி தான் வெற்றியின் ரகசியம். முகமலர்ச்சி வெற்றிக்கு வித்தாகும்.
இன்று முதல் திட்டமிட்டு முயற்ச்சி செய்தால் தேர்வை சிறப்பாக செய்யலாம் மனதில் பயமின்றி தெளிந்த மனநிலையோடு எதிர்கொள்ளுங்கள். நாம் படித்த கேள்வி வருமா? என்ற எதிர்பார்ப்புகள் இல்லாமல் தேர்வு அறைக்குள் செல்லுங்கள். பயம் வேண்டாம். பதற்றம் வேண்டாம். தன்னம்பிக்கையோடு செல்லுங்கள். சாகிற காலத்தில் சங்கரா! என்று ஒருவன் சொல்லப் பழகியதைப் போல இருக்காமல் ஆரம்ப முதலே திட்டமிடுங்கள் இரவு நேரம் முழுவதும் கண்விழித்து படிப்பது காலத்தை விணாக்கும். 6முதல் 8மணிவரை தூங்க வேண்டும். பகலிலுள் 10நிமிட படுக்கை ஒய்வு எடுக்கலாம். மூளைக்கு நல்லது . புத்துணர்ச்சி வரும். தூக்கம் வராமல் இருப்பதற்கு மாத்திரைகளை சாப்பிட்டு விடாதீர்கள். சிந்தனையும் நினைவாற்றலும் பாதிக்கப்பட்டுவிடும்.
காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். கொழுப்புச்சத்துள்ள உணவுகளை அசைவ உணவுகள் சாப்பிடாமல் இருப்பது நன்று. எளிதில் செரிக்காத உணவுகள் குளிர்பானங்கள் ஆகியவற்றை தேர்வு சமயத்தில் குறைத்துக் கொள்ளுங்கள். இளநீர் மோர் பழச்சாறு புரத உணவுகள் சேர்த்துக் கொள்ளுங்கள். படிப்பதற்கு வேண்டிய சூழ்நிலைக்கு உடலையும் மனத்தையும் தயார்படுத்துங்கள். படிக்க வேண்டிய பாடத்தை நன்கு திட்டமிட்டு கவனம் சிதறாமல் படியுங்கள். தோல்வி பயத்தை மறந்து குழப்பத்தை கைவிட்டு அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். நல்ல மனநிலையில் கஷ்டமான பாடத்தை படியுங்கள். சோர்வாக உள்ளபோது ரிவிஷன் செய்யுங்கள். ஒரு குறிப்பிட்ட பாடத்திலேயே அதிக நேரம் செலவழிகாகமல் அவ்வபோது சப்ஜக்ட் களை மாற்றிக்கொள்ளுங்கள். புரிந்து படியுங்கள். குறைந்த நேரத்தில் படியுங்கள். கவனம் சிதராமல் படியுங்கள். கருத்துடன் படியுங்கள்.
தேர்வு மையத்திற்கு 1/2  மணி நேரத்திற்கு முன்னதாக சென்று விட வேண்டும். தேர்வுக்கு தேவையான ஹால் டிக்கட் பேனா பென்சில் ஸ்கேல் ஜியோமின்றிக்கருவிகள் கலர் ஸ்டிக் பேனாக்கள்  போன்ற அனைத்து பொருட்களையும் மறக்காமல் எடுத்து செல்லுங்கள். தேர்வு அறையில் நேர்மையாக செயல்படுங்கள். வினாத்தாளை முழுமையாக படியுங்கள். தேர்வுத் துறையிலேயே இதற்கு நேரம் ஒதுக்கியுள்ளார்கள். வினாக்களை தேர்வு செய்யுங்கள். உங்கள் வினாத்தாளை மதிப்பீடு செய்பவருக்கு எரிச்சல் வரும்படி எழுதி வைக்காமல் எளிதாக புரியும்படி விடைகளை தெளிவாக முக்கிய வார்த்தைகளுக்கு அடிக்கோடிட்டு எழுத வேண்டும்.
வினாக்களின் எண்களை சரியாக குறிப்பிட வேண்டும். மறந்தால் மதிப்பெண்களை இழக்க நேரிடும். படம் வரைந்து விளக்கம் தரவேண்டிய வினாக்களுக்கு சிறிய படமாக வரைந்து விளக்கவும். வினா எண் வரிசையாக தேர்ந்தெடுத்து பதில் எழுதுவது மதிப்பிடுபவர்களுக்கு மிகவும் பிடிக்கும். எமுதிய விடைகளை 15 முதல் 20நிமிடம் சரி பார்க்கவேண்டும். ஒரு தேர்வு எமுதி முடித்த பின் அதில் சில மதிப்பெண்களை இழந்தது குறித்து வருந்தாமல் அடுத்த தேர்வுக்கு நன்கு தயார் செய்ய ஆயத்தமாகுங்கள். சவால்களை எதிர்கொள்ளுங்கள். இல்லையென்றால் இழந்து விடுவோம்.
ஒருவேளை இதற்கு முன் பள்ளித்தேர்வுகளை நீ சரியாக எழுதாவிடினும் பரவாயில்லை. இருக்கின்ற நாட்கள் உன் கையில். மாபெரும் வெற்றி பெருவாய். முயற்சியெடு முன்னேறு முழுவெற்றி உனதே! உன் உடலை நோய்கள் வராமல் பார்த்துக்கொள். சுகாதாரமான சூழ்நிலை மிக அவனியம். கண்ட உணவுகளை வாங்கி சாப்பிடாதீர்கள். குடீநீர் மிக சுத்தமானதாக இருக்க வேண்டும். நல்ல உணவும் உடற்பயிற்சியும் ஓய்வும் உங்களுக்கு மிகவும் இன்றியமையாததாகும். ஒரு கால அட்டவணையை உருவாக்கிக் கொள்ளுங்கள். எளிதில் சதம் கிடைக்கும் பாடங்களான கணிதம் அறிவியல் பாடங்கள் கணிப்பொறியியல் இவைகளுக்கு அதிகநேரம் ஒதுக்கலாம். மொழிப் பாடங்களுக்கு அவரவர்க்கு தேவைப்படும் நேரம் ஒதுக்குங்கள். படிப்பதற்கு நல்ல சூழல் அவசியம். எந்தப் பகுதியையும் படிக்கமால் விட்டு வைக்காதீர்கள். அப்படிவிட்டு வைத்திருந்தால் அதை தேர்வுக்கு முதல் நாள் படிக்காதீர்கள்.
பாடநூல் நிறுவனம்- தேர்வு இயக்குநரகம்-பெற்றோர் ஆசிரியர் கழகம் தயாரித்துள்ள வினா வங்கியைப் பயன்படுத்துங்கள். குறிப்புகள் எடுத்துப் படித்தால் தேர்வு அன்று அதை மட்டுமே படித்தால் போதும். அருமையான ரிவிஷன் ஆகிவிடும். 24மணி நேரத்தில் 7மணி நேரம் தூக்கம் 4மணி நேரம் தேர்வுக்கான தயாரிப்பு 3மணி நேரம் தன் மதிப்பிடு தேர்வு. டியுஷனுக்குப் போக வேண்டாம். ஆசிரியர்களை அணுகி சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள். தொடர்ச்சியாக ஒன்றறை மணி நேரத்திற்கு மேல் படிக்க வேண்டாம். சினிமாவில் இன்டர்வல் விடுவது போல 10நிமிடம் ஜாலியாக இருங்கள். அதன் பிறகு மிண்டும் தொடர்ந்து படியுங்கள். தேர்வு எழுத 3 எழுதுகோல்களை தயாரித்து வையுங்கள். அதில் எழுதிப்பழக்குங்கள். அதையே தேர்வுக்குப் பயன்படுத்துங்கள். தேர்வு அன்று புதிய பேனா வேண்டாம் ஐயா! வினாத்தாள் கையில் கிடைத்தவுடன் அதன் வலப்புறம் மேல் பாகத்திலுள்ள கட்டத்தில் உங்கள் பதிவு எண் எழுதுதல் மிகவும் முக்கியம். வினாத்தாளில் வேற எந்த வித எழுத்துக்கள் கிறுக்கல்கள் கூடாது. வினாத்தாளில் உள்ள அறிவுரைகளைப் படியுங்கள் விடைத்தாளில் உள்ள அறிவுரைகளைப் படியுங்கள்.
நீங்கள் 12 மாதங்கள் உழைத்த உழைப்பை 2.30 (அ) 3மணி நேரத்தில் வெளிக் காட்ட வேண்டும். தெரிந்த வினாக்களைத் தேர்ந்தெடுத்து சிறப்பாக பதில் அளியுங்கள். ஒரு வினாவைத் தேர்வு செய்யும்போது அதற்கு ஆகும் நேர அளவு. நன்மை தீமை இவற்றை அறிந்து தேர்வு செய்ய வேண்டும். வினா எண்ணை விடைத்தாளில் கட்டாயமாக குறிப்பிட்டாக வேண்டும். வார்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டு எழுதுங்கள். வரிக்கு வரி இடைவெளி விட்டு எழுதுங்கள். விரைவு, அழகு, தெளிவுடன் கூடிய நல்ல கையெழுத்து மூன்றும் அவசியம். கால ஒதுக்கீடு செய்து கொண்டு விடை எழுதத் தொடங்குங்கள்.
கடைசி 15 நிமிடங்கள் அனைத்து விடைகளையும் திருப்புதல் செய்ய செலவு செய்ய வேண்டும். விடைத்தாளில் பயன்படுத்தப்படாத எழுதப்படாத பகுதிகளை அடித்தல் அவசியம். எழுதிய விடைகளை அடித்து விடாதீர்கள் கூடுதல் விடைத்தாள்களை வரிசையாக அடுக்கி மதீப்பிடு செய்வதற்கு வசதியாக நூல் போட்டு காட்ட வேண்டும். எத்தனை கூடுதல் விடைத்தாள் என்று முதல் பக்கத்தில் குறிப்பிட வேண்டும். தேவைக்கு அதிகமாக எழுதி நேரத்தை விணாக்கக் கூடாது. மதிப்பெண் குறிக்கும் போது ஆசிரியர் கண்டுபிடித்து விடுவார். தேர்வு முடிந்த்த பின் அந்த தேர்வைப்பற்றி ஆராய்ந்து பொழுதை வீணாக்காமல் அடுத்த தேர்வுக்கு தயாராகும் வேலை உங்கள் வேலை.
மதிய உணவுக்கு பின் 1மணி நேரம் உறங்கவும். பின் அடுத்த நாள் தேர்வுக்கு படியுங்கள். இரவு 9.30 மணிக்கு படுக்கைக்கு சென்று விடுங்கள். காலை 4மணிக்கு மீண்டும் எழுந்து படியுங்கள். டி.வி கிரிக்கெட் போட்டி கேளிக்கைகள் போன்றவைகளை தேர்வு முடியும் வரை தள்ளிப்போடுங்கள்.
உங்களுடைய சக்தி மற்றும் நேரத்தை நல்ல வித்த்தில் முதலீடு செய்யுங்கள். இந்த முதலீடு உங்களுக்கு நிச்சயம் வெற்றியை எளிதாகத் தேடித்தரும். மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். வெற்றி நிச்சயம்! முயற்சிப்பீர்!வென்றிடுவீர்!!! நாளைய உலகை ஆள்பவர் நீங்கள் தான்!!! வணக்கம்.
நன்றி

திரு வ.சோமு

நிர்வாக அறங்காவலர்

வெற்றிக்கு வழி அறக்கட்டளை