10th English Model Public Exam - 2014


திறன் வளர் ஆசிரியர் மன்றம் (Smart Teachers Association) மற்றும் வெற்றிக்கு வழி அறக்கட்டளை (Way to Success Trust)
இணைந்து நடத்தும் SSLC ஆங்கிலத்திற்கான
மாதிரிப் பொதுத்தேர்வு 2016-17
MODEL PUBLIC EXAMINATION 2016-17

சென்ற ஆண்டின் சிறப்புத்தேர்வு வினாத்தாள் - மாதிரிக்காக

“வெற்றிக்கு வழி அமைப்போம்” விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்படும் மாணவர்கள் (பள்ளி மூலம் தேர்வு எழுதியோர்) பட்டியல்

“வெற்றிக்கு வழி அமைப்போம்” விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்படும் பள்ளியல்லாது தனியாக தேர்வு எழுதியோர் பட்டியல்

பள்ளிகள் மூலம் தேர்வெழுதிய மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் அனைவருக்குமான தேர்வு முடிவுகள் கீழே உள்ள லிங்குகளில் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்றெழுத்துக்களில் தொடங்கும் பதிவெண் வாரியாக மதிப்பெண்கள் வெளியிடப்படுகின்றன. உங்களுக்குரிய கோப்பினை பதிவிறக்கம் செய்து அதனை உங்கள் கணிணியிலிருந்து இயக்குங்கள். பிறகு உங்கள் பதிவெண்ணை Search ல் கொடுத்து Enter செய்தால் உங்கள் மதிப்பெண்ணை நீங்கள் பார்க்கலாம்.

ARL - என்று தொடங்கும் மாணவர்களுக்கான மதிப்பெண்கள்

CDR, CHN - என்று தொடங்கும் மாணவர்களுக்கான மதிப்பெண்கள்

ERD, KNJ, MDR - என்று தொடங்கும் மாணவர்களுக்கான மதிப்பெண்கள்

NKL, PDK, PLR - என்று தொடங்கும் மாணவர்களுக்கான மதிப்பெண்கள்

RNP, SLM, TML- என்று தொடங்கும் மாணவர்களுக்கான மதிப்பெண்கள்

TNI, TNL, TPR - என்று தொடங்கும் மாணவர்களுக்கான மதிப்பெண்கள்

TRY - என்று தொடங்கும் மாணவர்களுக்கான மதிப்பெண்கள்

TVR, VLR - என்று தொடங்கும் மாணவர்களுக்கான மதிப்பெண்கள்

VPM - என்று தொடங்கும் மாணவர்களுக்கான மதிப்பெண்கள்

அனைத்து மாவட்ட தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண்கள்

 

வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகளை பெற கீழே உள்ள லிங்குகளை கிளிக் செய்யவும்.

10 ஆங்கிலம் முதல் மறறும் இரண்டாம் தாள் வினாத்தாள்

10 ஆங்கிலம் முதல் மறறும் இரண்டாம் தாள் விடைக்குறிப்ப

நாள் 22.01.2017 (ஞாயிறு)
முற்பகல் 9.15 – 12.00  ஆங்கிலம் முதல் தாள் பிற்பகல் 1.45 – 4.30 ஆங்கிலம் இரண்டாம் தாள்

மாதிரிப்பொதுத்தேர்வு ஜனவரி 2017 எழுதும் மாணவர்கள் பட்டியலும் அவர்களின் பதிவு எண்களும்.

இந்த கோப்பு பெரியதாக இருப்பதால் அதனை பதிவிறக்கிக்கொண்டு உங்கள் கணினியிலிருந்து அதை open செய்யுங்கள். உங்கள் பள்ளியின் பெயரை pdf-கோப்பில் உள்ள search-ல் கொடுத்தால் உங்கள் பள்ளியை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். பின்னர் உங்கள் பெயரை அதில் தேடி கண்டுபிடித்து உங்களது பதிவு எண்ணை குறித்துக்கொள்ளவும்.

 

தமிழ் நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் பள்ளியளவில் அரையாண்டுத்தேர்வில்

முதல் இரண்டு இடங்களைப் பெறுவோருக்கு மாதிரிப்பொதுத்தேர்வு கட்டணம் இல்லை !!!

 

மாதிரிப்பொதுத்தேர்வு விளக்கக் குறிப்பேடு-1

மாதிரிப்பொதுத்தேர்வு விளக்கக் குறிப்பேடு-2

மாதிரிப்பொதுத்தேர்வு பள்ளிகளுக்கான விண்ணப்பப் படிவம்

மாதிரிப்பொதுத்தேர்வினை பள்ளியோடு அல்லாமல் தனியாக எழுத விரும்பும் மாணவருக்கான விண்ணப்பப் படிவம்

அரையாண்டுத் தேர்வில் பள்ளியளவில் முதல இரண்டு இடங்களைப் பெற்ற மாணவருக்கான கட்டணமில்லா விண்ணப்பப் படிவம்

1

1

1

முதல் பரிசு பெற்ற கல்லக்குறிச்சி ஏ.கே.டி பள்ளி மாணவி எ.கீர்த்தனா

1

சென்ற ஆண்டு நமது பயிற்சி முகாமில் கலந்துகொண்டு 2015 அரசுத்தேர்வில் மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்ற மாணவி சஃபா (நாகை)

1

இரண்டாம் பரிசு

1

மூன்றாம் பரிசு

1

சிறந்த பங்களிப்புக்கான கேடயம் கல்லக்குறிச்சி ஏ.கே.டி பள்ளி மாணவர்க்ள்

வெற்றிவிழாவில் கலந்துகொள்ள தேர்வுசெய்யப்பட்ட மாணவர் பட்டியல் -1

வெற்றிவிழாவில் கலந்துகொள்ள தேர்வுசெய்யப்பட்ட மாணவர் பட்டியல் -2

பிப் 7 நடைபெற இருக்கும் வெற்றி விழாவிற்கு வே டு சக்சஸ் தயாராகிவருகிறது. வெற்றி விழாவன்று நடைபெற இருக்கும் சிறப்புத்தேர்வில் அனைத்துப்படங்களிலிருந்தும் வினாக்கள் இடம்பெறும். எனவே அதற்கேற்றவாறு மாணவர்கள் உங்களை தயாரித்துக்கொள்ளுங்கள். தேர்வு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக காலை 9 மணிக்குள் வந்திருந்து பயிற்சி முகாம் மற்றும் விழாவில் முழுவதும் கலந்து கொள்ளவேண்டும்.

வெற்றிவிழா அழைப்பிதழ்

1

1

1

1

 

10ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திற்கான மாதிரிப்பொதுத்தேர்வு 2015-16

 

உங்கள் பள்ளி மாணவர்கள் மார்ச் 2016 அரசுத்தேர்வினை பயமின்றி எதிர்கொள்ளவும் அவர்களை உற்சாகப்படுத்தவும்  மிகச்சிறந்த வாய்ப்பு  மாதிரிப்பொதுத்தேர்வு 2015-16
முதல் கட்டத்தேர்வு

இரண்டாம் கட்டத்தேர்வு (மாற்றப்பட்ட தேதி)

28.12.2015 ஆங்கிலம் முதல்தாள்
29.12.2015 ஆங்கிலம் இரண்டாம்தாள்

08.01.2016 ஆங்கிலம் முதல்தாள்
09.01.2016 ஆங்கிலம் இரண்டாம்தாள்

ஏதேனும் ஒரு கட்டத்தேர்வில் உங்கள் மாணவர்களை தேர்வெழுதச்செய்யுங்கள்
மாதிரிப் பொதுத்தேர்வு எழுதுபவர்களுக்கு மற்ற அனைத்து பாடங்களுக்குமான வினாத்தாள்கள் இலவசம். அதனைக்கொண்டு அனைத்துப் பாடங்களுக்கும் உங்கள் பள்ளியில் மாதிரிப்பொதுத்தேர்வு நடத்திக்கொள்ளலாம்.

 மாதிரிப்பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெறுபவர்கள் மட்டுமே
திருச்சி தேவர் ஹாலில் 7-2-2016 அன்று நடைபெற இருக்கும்
நூற்றுக்கு நூறு பயிற்சி முகாம் மற்றும் வெற்றிவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்

பயிற்சி முகாமின்போது வைக்கப்படும் சிறப்புத்தேர்வின் அடிப்படையில் வழங்கப்படும்

மாநில அளவிலான சிறப்புப் பரிசுகள்

first prize

 

முதல் பரிசு ரூ 10000 கேடயம் சான்றிதழ்
இரண்டாம் பரிசு ரூ 7000 கேடயம் சான்றிதழ்
மூன்றாம் பரிசு ரூ 5000 கேடயம் சான்றிதழ்

second prize

மாவட்ட அளவிலான பரிசுகள்
மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ 1000 கேடயம் சான்றிதழ்
(நிபந்தனை அந்த மாவட்டத்திலிருந்து குறைந்தது 500 மாணவர்கள் மாதிரிப்பொதுத்தேர்வினை எழுதியிருக்க வேண்டும்)

மாநில அளவிலான ஆறுதல் பரிசுகள்
அரசுப்பள்ளிகளில் சிறப்பிடம் பெறும் 5 மாணவர்கள்
அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பிடம் பெறும் 5 மாணவர்கள்
தனியார் பள்ளிகளில் சிறப்பிடம் பெறும் 5 மாணவர்கள்
ஆகியோருக்கு தலா ரூ 1000 நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்

முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர்
திரு.வி.பொன்ராஜ் அவர்களின் கரங்களால் முதல் பரிசு பெற உங்கள் மாணவர்களை உற்சாகப்படுத்துங்கள்

 

மாதிரிப் பொதுத் தேர்வு 2015-16 தேர்வு மையங்களுக்கான (பள்ளி) விண்ணப்பப் படிவம் - பெற இங்கே கிளிக்கவும்

விண்ணப்பப் படிவமும் மாதிரித்தேர்வு விளக்கக் குறிப்பேடும் கூரியரில் பெற

Exam application என குறிப்பிட்டு உங்கள் விலாசத்தை SMS-ஆக 9787609090 என்ற எண்ணுக்கு அனுப்பினால்

கூரியரில் அவற்றை உங்களுக்கு உங்களுக்கு அனுப்பி வைப்போம்.

1

1

1

1

10ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திற்கான மாதிரிப்பொதுத்தேர்வு 2014-15 (சென்ற ஆண்டு)

2014-15ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு ஆங்கிலப் பாட மாதிரிப் பொதுத் தேர்வு 29.12.2014 அன்றும்

மாதிரிப் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கான நூற்றுக்கு நூறு பயிற்சி முகாம், போட்டித்தேர்வு மற்றும் வெற்றிவிழா ஆகியவை சிறப்பாக நடந்தேறியது. வெற்றி விழாவில் முன்னால் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் தொழில் நுட்ப ஆலோசகர்

திரு.வி. பொன்ராஜ், தேசிய தொழில்நுட்பக் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் திரு வினோத் பலகிருஷ்ணன் மற்றும் வெற்றிக்கு வழி அறக்கட்டளைத் தலைவர் திரு.வ.சோமு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி பரிசுகளை வழங்கினர்.

நிகழ்வுகள்

  1. காலை 9.30 மணிக்கு நமது அறக்கட்டளையின் தலைவர் திரு.சோமு அவர்கள் விழாவினைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
  2. சுமார் 400 மாணவர்களும் 300 பெற்றோர்களும் விழாவில் கலந்துகொண்டனர்.
  3. மாதிரிப் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்று முகாமில் கலந்துகொள்ள பதிவு செய்த அனைத்து மாணவ மாணவியருக்கும் பரிசாக Successful Career Thoughts என்ற புத்தகமும் கோப்பு, பேனா, குறிப்பு நோட்டுகளும் வழங்கபட்டன.
  4. சுமார் 85 மாணவ மாணவியருக்கு மாதிரிப் பொதுத் தேர்வு பள்ளியளவிலான பரிசுகள் வழங்கப்பட்டன.
  5. 10 மணியளவில் தொடங்கிய நூற்றுக்கு நூறு பயிற்சி முகாமில் தமிழ் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு பெறுவது எப்படி என்று அனுபவம் மிக்க ஆசிரியர்களால் ஆலோசனைகள் வழங்கப்பட்டது
  6. காலை இடைவேளையின் போது தேநீர் பிஸ்கட் மதிய இடைவேளையில் உணவு, மாலை இடைவேளையில் தேநீர் மிக்சர் வழங்கப்பட்டது.
  7. மாலை 4.30 மணிக்குத் தொடங்கிய வெற்றிவிழா 6.30 வரை நீடித்தது.
  8. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் திரு.பொன்ராஜ் அவர்கள் மிகச்சிறப்பாகப் பேசி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். மாணவர்கள் அனைவரும் அவரது பேச்சில் லயித்தனர். மாணவர்களையும் அழைத்து உரையாடச்செய்து அவர்களது படைப்பாற்றலை வெளிக்கொணர அவர்களது மணதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்.
  9. திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியர் திரு.வினாத் பாலக்கிருஷ்ணன் அவர்களும் சிறப்பாக மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
  10. சிறப்புத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாதிரிப் பொதுது் தேர்விலும் சிறப்புத்தேர்விலும் முதலிடம் இரண்டாமிடம் மூன்றாமிடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ10000, ரூ 7000, ரூ 5000 பரிசுகள் வழங்கப்பட்டது. சுமார் 400 மாணவர்கள் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்..

1

1

1

1

மாதிரிப்பொதுத் தேர்வு 2015 தேர்வு முடிவுகள் - மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்

01.02.2015 அன்று திருச்சியில் நடைபெறும் வே டு சக்சஸ் வெற்றி விழாவில் கலந்து கொள்ள 461 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாதிரிப்பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்று வெற்றி விழாவிற்கு அழைக்கப்படும் மாணவர் பட்டியல்

01.02.2015 அன்று திருச்சியில் நடைபெறும் வெற்றி விழா மற்றும் நூற்றுக்கு நூறு பயிற்சி முகாமுக்கான அழைப்பிதழ்

1

1

1

1

7.1.2015

வே டு சக்சஸ் மாதிரிப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் மீத்திறன் மாணவர்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீத்திறன் மாணவர்கள் பிப்ரவரி 1 திருச்சி தேவர் ஹாலில் நடைபெறும் பயிற்சி முகாம், போட்டித்தேர்வு, வெற்றி விழாவிற்குத் தயாராகுங்கள்.

29.12.2014

இன்று (29.12.2014) வே டு சக்சஸ் மாதிரிப்பொதுத்தேர்வு 2014-15 நடைபெறுகிறது. சுமார் 4000 மாணவ மாணவிகள் இந்தத் தெர்வினை எழுதுகிறார்கள். மாணவர்கள் சிறப்பாக எழுத வாழ்த்துகிறோம்.

தேர்வுப்பணியில் இருக்கும் ஆசிரியர்கள் தேர்வினை சிறப்பாக நடத்தித் தருமாறு வேண்டுகிறோம்.

 

 

29.12.2014 அன்று நடைபெறும் வே டு சக்சஸ் மாதிரிப்பொதுத்தேர்வுக்கான தேர்வு மையங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்கள் மற்றும் அவற்றில் தேர்வெழுதும் மாணவர்கள் பற்றிய விவரங்களைப் பெற இங்கே கிளிக்கவும். உங்கள் தேர்வு பதிவு எண் Alphabetical வரிசை முறையில் இருப்பதால் உங்கள் மாவட்டத்தை முதலில் கண்டுபிடித்து பிறகு உங்கள் தேர்வு மையத்தை கண்டுபிடித்துக்கொள்ளவும்.

மாதிரிப் பொதுத் தேர்வு -தேர்வு மையங்களும் தேர்வெழுதும் மாணவர் பட்டியல்

 

 

தேர்வு முடிந்ததும் விடைத்தாள்களை திருத்தம் செய்யும் ஆசிரயர்கள் மதிப்பெண்களைப் பதிவு செய்ய மதிப்பெண்பட்டியலைப் பெற இங்கே கிளிக்கவும்

மதிப்பெண் பட்டியல்

 

 

 

தேர்வு பற்றிய விவரக் குறிப்பினை பெற கீழே உள்ள லிங்கை கிளிக்கவும்

மாதிரிப் பொதுத் தேர்வு 2014-15 விவரக்குறிப்பேடு

தேர்வு மையமாக செயல்பட்டு தங்கள் மாணவர்களை தங்கள் பள்ளியிலேயே எழுத வைக்க நினைப்பவர்களுக்கான விண்ணப்பப் படிவம்

மாதிரிப் பொதுத் தேர்வு 2014-15 தேர்வு மையங்களுக்கான (பள்ளி) விண்ணப்பப் படிவம்

தேர்வு மையம் அமைக்க இயலாதவர்கள் 40க்கும் குறைவான எண்ணிக்கையில் தேர்வெழுத அனுப்புபவர்கள் பள்ளி மூலமாக அல்லாது தனியாக விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான விண்ணப்பப் படிவம்

மாதிரிப் பொதுத் தேர்வு 2014-15 தனியாக விண்ணப்பிப்பதற்கான (மாணவர்களுக்கான) விண்ணப்பப் படிவம்

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

சென்ற ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகள்

10-ம் வகுப்பு ஆங்கிலத்திற்கான மாதிரிப் பொதுத்தேர்வு-2014

அனைத்து மாணவர்களின் மதிப்பெண்பட்டியல் (மாணவர்களின் தேர்வு மையம் மற்றும் அறை எண் வாரியாக) காண இங்கே கிளிக்கவும்

பரிசளிப்பு விழா மற்றும் நூற்றுக்கு நூறு பெற ஆலோசனை முகாம் புகைப்படங்களை காண கிளிக் செய்யவும்

மாதிரித்தேர்வு விடைத்தாள்களில் சிறந்த வடிவமைப்புக்காக தேர்வு செய்யப்பட்ட விடைத்தாள் (Best Presentation)

ஆங்கிலம் முதல் தாள் - விடைத்தாள் பெற கிளிக் செய்யுங்கள்

ஆங்கிலம் இரண்டாம் தாள் -விடைத்தாள் பெற கிளிக் செய்யுங்கள்

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் - மாதிரிப்பொது தேர்வு – 2014 -ல் சிறப்பிடம் பெற்றவர்களுக்கான

அரசுத்தேர்வில நூற்றுக்கு நூறு பெற ஆலோசனை முகாம்

மற்றும்

பரிசளிப்பு விழா நிகழ்வுகள் சுருக்கம்

Way To Success என்னும் வெற்றிக்கு வழி அறக்கட்டளை பத்தாம் வகுப்பில் மாணவர்கள் ஆங்கிலப்பாடத்தில் நூற்றுக்கு நூறு தேர்ச்சியடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாதிரிபொதுத்தேர்வு நடத்தியது. மற்ற பாடங்களை விட ஆங்கிலப்பாடத்தை மாணவர்கள் கடினமாக்க் கருதுவதாலும் தேர்ச்சி சதவீதம் ஆங்கிலத்தால் குறைந்து விடக்கூடாது என்னும் நோக்கத்திற்காகவும் ஆங்கிலப்பாடத்திற்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 80 பள்ளிகளில் இருந்து 1400 மாணவ மாணவியர் தமிழ் நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து வந்து கலந்து கொண்டு மாணவர்கள் எழுதினர். திருச்சி மாவட்டத்தில் புத்தூர் பிஷப் மேல்நிலைப்பள்ளி மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற மையங்களில் மாதிரிப்பொதுத்தேர்வு நடைப்பெற்றது.
தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு 23.02.2014 அன்று திருச்சி புத்தூர் பிஷப் மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழாவும் மற்றும் நூற்றுக்கு நூறு பெற ஆலோசனை முகாமும் நடைபெற்றது. ஆலோசனை முகாமில் ஆசிரியர்கள் திரு.ரா.தாமோதரன்(தமிழ்) திரு.எஸ்.திலீப் (ஆங்கிலம் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்) திரு.ஏ.அலாவுதீன்(கணிதம்) திரு.பா.க.பாலசுப்பரமணியன்(அறிவியல்) மற்றும் திரு.ப.சீனிவாசன்(சமூக அறிவியல்) மாணவர்க்ள நூற்றுக்கு நூறு பெற ஆலோசனை வழங்கினர். பரிசளிப்பு விழா மாலை 4.30 மணிக்குத் தொடங்கியது. விழாவிற்கு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு.வ.சோமு அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக திரு.ரா.அன்புச்செல்வன் வரவேற்புரை வழங்கினார். விழாவிற்கு திரு.பி.திருநாவுக்கரசு. திருப்பராய்த்துறை விவோகானந்தா  மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் திரு.எம்.மாசிமலை திருப்பராய்த்துறை விவோகானந்தா வித்தியாவனம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தனர். விழாவில் ”கிருஷ்ணா” என்றழைக்கப்படும் எழுத்தாளர் என். பாஸ்கர் மற்றும் மருத்துவ உளவியல் நிபுணர் திரு.டி.ரந்தீப் ராஜ்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். எழுத்தாளர் கிருஷ்ணா தனது உரையில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சிறுகதைகளின் மூலம் வலியுறுத்தினார். மருத்துவ உளவியல் நிபுணர் திரு.டி.ரந்தீப் ராஜ்குமார் தனது உரையில் மனதை உற்சாகமாக வைத்துக்கொண்டு எப்படி இலக்கை அடைவது என்பதையும் தேர்வு பயத்தை எப்படி போக்குவது என்பதையும் பற்றி பல ஆலோசனைகள் வழங்கினார். முதல் 10 இடத்தை பிடித்த அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் முதல் 5 இடங்கள் பிடித்த கிராமப்புற அரசு உதவிப்பெறும் மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 1000 வீதம் ரொக்கப்பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஒட்டு மொத்த அளவில் முதல் 3 இடங்களை படித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு முறையே ரூபாய் 5000 ரூபாய் 3000 ரூபாய் 2000 ரொக்கப்பரிசும் சான்றிதழ்களும் வெற்றிக்கோப்பைகளும் வழங்கப்பட்டன. முதல் பரிசு கல்லக்குறிச்சி நீலாமங்கலம் ஏ.கே.டி. அகடாமி மெட்ரிக் பள்ளி மாணவி கே.யாழினிக்கும் இரண்டாம் பரிசு திருச்சி ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ். ஸ்வாதி மற்றும் மூன்றாம் பரிசு திருச்சி எஸ்.பி.ஐ.ஓ.ஏ. மெட்ரிக் மாணவி வி.ரத்தனாவிற்கும் வழங்கப்பட்டது. அதிக அளவு மாணவிகளை தேர்வில் பங்கேற்கச்செய்த மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சிறந்த பங்களிப்புக்கான கேடயமும் கள்ளக்குறிச்சி நீலாமங்கலம் ஏ.கே.டி. அகடாமி மெட்ரிக் பள்ளிக்கு சேம்பியன்ஷிப் கேடயமும் வழங்கப்பட்ட்து. பரிசளிப்பு விழா நிகழ்சிகளை அண்ணா பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் திருமதி. ரேணுகா ஜெகதீசன் மற்றும் மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திருமதி. கலைச்செல்வி அவர்கள் தொகுத்து வழங்கினார். விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள் நல்லாசிரியர் திரு.கி.இராஜமாணிக்கம்(ஓய்வு) ஆசிரியர் திரு.ஏ.இராஜகோபால்(ஓய்வு) திருமதி.எம்.சரஸ்வதி திருமதி. பிரிதர்ஷினி மற்றும் செல்வி சுபா கேத்தரின் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் திரு.கே.சின்னப்பன் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்த்து. விழா ஏற்ப்பாடுகளை திரு.இரா.கார்த்திகேயன் திரு.ம.சண்முகம் திருமதி.ஜெ.கிருஷ்ணவேணி மகேந்திரன் செல்வன். தினேஷ் சகாயராஜ் மற்றும் ரேணுகாதேவி குழுவினர் திறம்பட செய்திருந்தனர்.

1

2

3

4

 

exam

exam

exam

பத்தாம் வகுப்பு மாணவர்களை அரசுப் பொதுத்தேர்வுக்கு தயார் செய்யும் விதத்திலும் மாநில அளவில் இடம் பிடிக்க ஊக்கப்படுத்தும் விதத்திலும் வே டூ சக்ஸஸ் அறக்கட்டளை நடத்திய 10-ம் வகுப்பு ஆங்கிலப்பாடத்திற்கான “மாதிரிப்பொதுத்தேர்வு-2014“ 02.02.2014 ஞாயிற்றுகிழமையன்று நடைபெற்றது. 5 தேர்வு மையங்களில் 80 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1400 மாணவர்கள் இந்தத் தேர்வில் கலந்து கொண்டனர். 44 தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து 768 மாணவர்களும் 19 அரசுப்பள்ளிகளிலிருந்து 427 மாணவர்களும் திருச்சி அல்லாத பிற மாவட்டங்களிலிருக்கும் 17 பள்ளிகளைச் சேர்ந்த 180 மாணவர்களும் தேர்வு எழுதினர். திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி(502), திருச்சி உறையுர் சி.எஸ்.ஐ மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி(415), முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி(120), லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளி(160), மண்ணச்சநல்லூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி(220) ஆகிய ஐந்து மையங்களில் நடைபெற்றது.